செய்திமுரசு

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு வறுமைக்கோட்டில் முதலிடம்!

சிறீலங்காவில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்கள் முதலிடத்தில் உள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத்தின் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது. வறுமைக்கோட்டு எல்லையைத் தீர்மானிக்கும், தனிநபர் ஒருவருக்கான மாத வருமான எல்லை, 2017 ஜனவரி மாதம், 4,207 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது பெப்ரவரி மாதம், 4,229 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 4,229 ரூபாவுக்குக் கீழ் தனிநபர் ஒருவரின் மாத வருமானங்கள் உள்ள மாவட்டங்கள் வறுமைக்கோட்டுக்குட்பட்டவையாக பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்டம் ஆகக் கூடிய தனிநபர் வருமானம் உள்ள மாவட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தனிநபர் ஒருவரின் மாத வருமானம், ...

Read More »

கோலி படத்தை விலங்குகளுடன் வைத்து போலிங் நடத்திய அவுஸ்ரேலியா மீடியா

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் படத்தை விலங்குகள் படத்துடன் வைத்து அவுஸ்ரேலியா மீடியா ஒன்று கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. 11 பேர் பீல்டிங் செய்ய, இரண்டு பேர் பேட்டிங் செய்யும் கிரிக்கெட் விளையாட்டை பொதுவாக ‘ஜென்டில்மேன் கேம்’ என்று அழைப்பார்கள். இந்த விளையாட்டில் சில நேரங்களில் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் அது பெரும்பாலும் போட்டியின் உற்சாகத்தைப் பாதிக்காத வகையில் இருக்கும். இந்தியா- அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டியின்போது இரு அணி வீரர்களுக்கும் இடையில் அதிக அளிவில் ஸ்லெட்ஜிங் நடைபெற்றது. உச்சகட்டமாக ...

Read More »

தமிழீழ செயற்பாட்டாளர் ட்ரெவர் கிறான்ட் வணக்க நிகழ்வு!- அவுஸ்ரேலியா

அண்மையில் சாவடைந்த தமிழீழச் செயற்பாட்டாளர் ட்ரெவர் கிறான்ட் அவர்களின் வணக்கநிகழ்வு ஜெனிவாவில் முக்கிய உலகத்தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து நடத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 10 – 03 – 2017 அன்று உள்ளுர் நேரப்படி மாலை ஆறு மணிக்கு மொன்பிறில்லியன்ற் என்ற மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் ஈகச்சுடரினை மாவீரர்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராலும் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தமிழ்ச்செயற்பாட்டாளர்கள்ட்றெவர் கிறான்ட் தொடர்பான நினைவுரைகளை ஆற்றினார்கள். மன்னார் சிவில் சமூகத்தை சேர்ந்த லியோவின் உறவினரும் மதகுருவுமான செபமாலை அவர்கள் உரையாற்றும்போது, அவுஸ்திரேலியாவில் லியோ ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எஸ்.ஜி.சாந்தனின் வணக்கநிகழ்வு

கடந்த 26 02 2017அன்று சுகயீனம் காரணமாக சாவடைந்த ஈழத்துப்பாடகர் சிம்மக்குரலோன் எஸ். ஜி. சாந்தன் அவர்களுக்கான வணக்கநிகழ்வு ஒஸ்ரேலியாவில் மெல்பேர்ண் நகரத்தில் 05-03-2017 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4.15மணியளவில் Vermont South Community House மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் திரு.வசந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மெல்பேர்ணில் மிக நீண்டகாலமாக இசைத்துறையோடு பயணித்துக் கொண்டிருக்கின்ற திரு செல்லையா சீவராசா அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்திவைத்தார். அதனைத்தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அனைத்து பொதுமக்களும் ...

Read More »

27 வருட துன்பங்களிற்கு முடிவு கட்டுங்கள் – வலி வடக்கு பொது அமைப்புக்கள்

வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருக்கின்ற மக்களுடைய காணிகளை ஒரு மாத காலத்திற்குள் விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி, ஊறணி, தையிட்டி ஆகிய கிராமங்களின் ஒன்றிணைந்த அமைப்பு, 27 வருட துன்பங்களை இந்த அரசாங்கமாவது முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்.ஊடக அமையத்தில் இன்று (10) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இந்த சந்திப்பினை மேற்படி குழுவின் தலைவர் விஜயரட்ணம் ரட்னராஜா, செயலாளர் கந்தையா பாலசுப்ரமணியம் ஆகியோர் உட்பட குழுவின் அங்கத்தவர்கள் இணைந்து நடாத்தியிருந்தனர். ...

Read More »

மிகச்சிறந்த பெண்ணிய தலைவர் பிரபாகரன் மட்டுமே! கஸ்தூரி

பெண்களை பாதுகாக்கும் பொருட்டு ‛சேவ் சக்தி என்ற அமைப்பை மகளிர் தினமான நேற்று (8) துவக்கியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமார் மகள், வரலெட்சுமி. போடா போடி, தாரை தப்பட்டை போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் பாவனா பாலியல் விவகாரம் நாடெங்கும் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது. மேலும் தானும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன், தொலைக்காட்சி ஒன்றின் இயக்குநர் என்னை தவறான கண்ணோட்டத்துடன் என்னை அணுகினார் என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சரத்குமார் மகள் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இசை நிகழ்ச்சி!

லண்டனைச் சேர்ந்த முன்னணி இசைக்கலைஞர்களான MC.சாய், மற்றும் ரீஜே ஆகியோர் மெல்பேர்ன் வாழ் இசைக்கலைஞர் டியோவுடன் இணைந்து முதல்தடவையாக  அவுஸ்ரேலியாவில் இசை நிகழ்ச்சியொன்றை நடத்துகின்றனர். நாளை (10) வெள்ளிக்கிழமை மெல்பேர்னில் நடைபெறவுள்ள இந்நிகழ்வு தொடர்பில் அவர்களோடு ஒரு சந்திப்பு. Date: Friday 10th March, 2017 at 8pmVenue: Room 680, 680 Glenferrie Rd, Hawthorn.For more details contact Pak:0410 881 805/ Rath 0450 969 652  

Read More »

கைகளால் வரையப்பட்ட புதிய மெல்பேர்ன் வரைபடம்

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்னர் கையால் வரையப்பட்ட மெல்பேர்ன் வரைபடத்தை வெளியிட்ட பெண் தற்போது மெல்பேர்னின் புதிய வரைபடத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். Melinda Clarke என்ற பெண் உலக சுற்றுப்பயணம் சென்று பல இடங்களின் வரைபடங்களைப் பார்த்தபோது மெல்பேர்னுக்கு இப்படியான வரைபடம் இல்லையே என யோசித்ததன் விளைவாக 1980களில் மெல்பேர்னின் கையால் கீறப்பட்ட வரைபடம் உருவாகியிருந்தது. Deborah Young  என்ற ஓவியரின் துணையுடன் Hot air பலூனில் மெல்பேர்ன் முழுவதும் பறந்து 7,500 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்து மெல்பேர்ன் வரைபடத்தை அவர் ...

Read More »

தென்னாபிரிக்க, அவுஸ்ரேலிய, இந்திய, பங்களாதேஷ் தலைவர்களைச் சந்தித்தார் மைத்திரி!

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்கா, அவுஸ்ரேலியா, பங்களாதேஷ், மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினார். இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டு இடம்பெற்றது. 21 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்த இந்த மாநாட்டில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவும் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன் பின்னர், சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தென்னாபிரிக்க அதிபர் ...

Read More »

அவுஸ்ரேலியா செல்லும் கனவு கடல் நடுவில் கலைந்து போகும்!

நீங்கள் அல்லது உங்கள் அன்புக்குரிய ஒருவர் அவுஸ்ரேலியாவுக்கு குடியேற வழியொன்றைத் தேடுகின்றீர்களா? அதற்காக அவர் தெரிவுசெய்திருப்பது வியாபாரிகளால் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படும் படகின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுசெல்வதாகக் கூறும் மோசடியையா? அப்படியாயின் நீங்கள் ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். இதுவரை அவர்களுடன் அவுஸ்ரேலியாவுக்கு படகில் சென்ற எவரும் அங்கு காலடி எடுத்து வைத்ததில்லை. மேலும் அவர்கள் உருவாக்கித்தரும் கனவுக் கோட்டை அந்த படகுப் பயணத்தில் இல்லை. நீங்கள் இலட்சக்கணக்கில் பணம் செலவழித்துஇ சொத்துக்களை அடகுவைத்து, ஊர் உலகிற்கு கடனாளியாகி அவுஸ்திரேலிய கனவின் பின் சென்றாலும் அதை ஒருநாளும் உங்களால் ...

Read More »