செய்திமுரசு

ஆஸ்திரேலிய குடியுரிமை விண்ணப்ப கட்டணம் 72 வீதத்தால் அதிகரிப்பு!

ஆஸ்திரேலிய குடியுரிமைக்கான விண்ணப்ப கட்டணம் ஜுலை 1 முதல் 72 வீதத்தினால் அதிகரிக்கிறது .இதுவரைகாலமும் 285 டொலர்களாக இருந்த குடியுரிமை விண்ணப்ப கட்டணம் இனி 490 டொலர்களாக அதிகரிக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை குடிவரவு அமைச்சர் Alex Hawke அண்மையில் வெளியிட்டிருந்தார். கடந்த 2016ம் ஆண்டுக்குப்பின் இவ்வாறு குடியுரிமை விண்ணப்ப கட்டணம் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் Alex Hawke தெரிவித்தார். குடியுரிமைக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பதால் இதற்கேற்ப பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டியுள்ளதாகவும், பல விண்ணப்பங்கள் மிகுந்த சிக்கல்வாய்ந்தவையாக காணப்படுவதால் அவற்றின் பரிசீலனைக்கு அதிக நேரமும் அதிக ...

Read More »

சீனாவின் நூறு பூக்கள்

எல்லாப் பேரியக்கங்களின் பயணமும் சிறிய அடிவைப்பில்தான் தொடங்கியிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பயணமும் அப்படித்தான் ஆரம்பமானது. நூறாண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் (ஜூலை 1, 1921) ஷாங்காய் நகரில், ஒரு ஓட்டு வீட்டில் கட்சி நிறுவப்பட்டது. மூன்று வாரங்களுக்குப் பிறகு, அங்கே நடந்த கூட்டத்தில் 57 பேராளர்கள் கலந்துகொண்டனர். அதில் ஹூனான் விவசாயி மகன் ஒருவரும் இருந்தார். பீஜிங் பல்கலைக்கழகத்தில் நூலக உதவியாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அந்த இளைஞரின் பெயர் மா சேதுங். அவரது படம்தான் இப்போது தியானென்மென் சதுக்கத்தின் முகப்பை அலங்கரித்துவருகிறது. முன் கதை ...

Read More »

கனடாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரிப்பு

கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது. உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்று கனடா. பனி மழை மற்றும் பனிக்காற்று அந்த நாட்டு மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதீத வெப்பத்தால் ...

Read More »

மேதகு-வரலாறு எனது வழிகாட்டி

எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே எல்லா சுதந்திரத்துடனும் பிறக்கிறான் என ஆங்கிலேய தத்துவஞானி ஒருவன் கூறினான்.( All human beings are born free and equal).இவனது உரிமைகள் பறிக்கப்படும் போதும் நசுக்கப்படும் போதும் தனக்கான இருப்பை தங்க வைத்துக் கொள்ள அற ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ போராடித் தான் தம் உரிமையை மீட்க முடியும் என்ற அடிப்டையிலே இலங்கைத் தீவில் ஈழத்து தேசிய இனத்துக்கு இனவாத சிந்தனை கொண்ட சிங்கள ஆட்சியாளர்களினால் வலிந்து ஆக்கப்பட்ட கொடுமையின் விளைவே இந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் ...

Read More »

தொண்டு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய அரசு, தங்களின் செயல்பாடுகளை அரசியல் ரீதியாக முடக்க நினைப்பதாக தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புதிதாக விதிக்க திட்டமிடப்பட்டுள்ள விதிகளின் படி, தொண்டு நிறுவனங்கள் அத்துமீறல் அல்லது சொத்தை சேதப்படுத்துதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அந்நிறுவனங்கள் வரி விலக்கு நன்கொடையினை பெற முடியாது எனப்படுகின்றது. உதாரணத்திற்கு, தொண்டு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் நடைப்பாதையில் நின்று ஒரு போராட்டத்திற்கு ஆதரவாக பேசினாலோ, ஒரு டீவிட் செய்தாலோ, மெழுகுவர்த்தி ஏந்தினாலோ கூட புதிய விதிகளின் மூலம் ...

Read More »

எனக்கும் எனது குடும்பத்தவர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்

நுகர்வோர் உரிமை செயற்பாட்டாளர் அசேல சம்பத் தனக்கும் தனது குடும்பத்தவர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக வீட்டிலிருந்து வெளியே வருவதற்கே அச்சமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் தொடர்பான விவகாரங்களில் எனது பங்களிப்பு காரணமாக அமைச்சர்கள் என்னையும் எனது குடும்பத்தவர்களையும் தாக்குவார்கள் என அச்சமடைந்துள்ளேன் என அசேலசம்பத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தொடர்பான விபரங்களை பேசுவதற்கு நான் ஒருபோதும் அஞ்சுவதில்லை என குறிப்பிட்டுள்ள அசேலசம்பத் தற்போது ஆள்கடத்தல்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன போ உணர்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். தனது ...

Read More »

அபுதாபி பாலைவன பகுதியில் இந்திய தம்பதியின் செயல் பாராட்டுக்குரியது

ரசாயன கலப்பில்லாத காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை பெற வேண்டும் என தீர்மானித்த இந்திய தம்பதியின் செயல் பாராட்டுக்குரியது. இந்தியாவைச் சேர்ந்த தம்பதியினர் அத்வைதா சர்மா மற்றும் பிராசி ஆகியோர் துபாயில் வசித்து வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் துபாயில் இருந்து அபுதாபிக்கு வேலை காரணமாக மாறிச் சென்றனர். வீட்டுக்கு தேவையான காய்கறி மற்றும் பழங்களை தாங்களே வளர்க்க திட்டமிட்டனர். இதனால் வீட்டில் சிறு, சிறு செடி, கொடிகளை வைத்து அதன் மூலம் தக்காளி, சோளம் உள்ளிட்டவற்றை பெற்றனர். இது குறித்து அத்வைதா சர்மா ...

Read More »

கொலைக்குற்றவாளின்கு ஐந்து வருட சிறைத்தண்டனை…..! ஆனால் இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள்…

தன்னுடைய இனத்தின் விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்னும் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்து குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டவர் ஐந்து வருட சிறைத்தண்டனை அனுபவித்தது போதுமானது என்றால் இதில் என்ன நியாயம் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில்   கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விடயம் தான் அண்மையில் இடம்பெற்ற ...

Read More »

சிறிலங்கா ஜனாதிபதியின் உரையை அவரே நகைப்புக்குரியதாக மாற்றிவிட்டார்: குமார் வெல்கம

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ; உரையாற்றுவதாக கூறி இறுதியாக மோசமான விமர்சனத்தை அவரே உருவாக்கிக்கொண்டு அவரது உரையை நகைப்புக்குரியதாக மாற்றிவிட்டார் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார். தகுதி இல்லாத தலைமைத்துவத்தை நியமித்ததால், இன்று நாட்டின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பிரதேச சபைக்கு கூட போகாத ஒரு நபரை நாட்டின் தலைவராக்க வேண்டாம் என ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தே நான் தெரிவித்து வந்தேன். அவ்வாறு ஒருவர் ஆட்சிக்கு வந்தால் நாடு ...

Read More »

டெல்டா மாறுபாட்டால் அவுஸ்திரேலியாவில் நெருக்கடி

அவுஸ்திரேலியாவின் கொவிட்-19 தடுப்புக் குழு திங்களன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளது. நாடு முழுவதும் கொவிட்-19 தொற்றின் மிகவும் அபாயகரமான டெல்டா மாறுபாடு வெடிப்பால் சிட்னி உள்ளிட்ட பிற இடங்களில் கட்டுப்பாடுகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளினால் ஏறக்குறைய 18 மில்லியன் அவுஸ்திரேலியர்கள் அல்லது 70 சதவீத மக்கள் பாதிப்பினை தற்சமயம் எதிர்கொண்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாகவும், அவுஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்களில் ஐந்தில் ஒரு பகுதியை கொண்ட நகராகவும் இருக்கும் சிட்னி, வார இறுதியில் ...

Read More »