செய்திமுரசு

அவுஸ்ரேலியாவில் விமானக் கட்டணம் குறைவடைகிறது!

அவுஸ்ரேலியாவின் விமான பயணச் சீட்டுகளில் விலை குறைவடையும் என மெல்போர்ன் விமான நிலைய தலைமை அதிகாரி Lyell Strambi தெரிவித்துள்ளார். மெல்போர்ன் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டதன் இருபதாம் ஆண்டை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோதே Strambi மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது; மெல்போர்ன் விமான நிலையத்தில் பல நவீன வசதிகள் செய்யப்பட்டதனால், விமான நிறுவனங்கள் செலுத்தும் கட்டணங்கள் கணிசமாக குறைகின்றன என்றும், எனவே விமான நிறுவனங்களால் பயணக் கட்டணத்தை குறைக்க முடிகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

அமெரிக்க பாடகியை காதலிக்கும் சவுதி தொழில் அதிபர்!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகியான நடிகை ரிஹானா, சவுதி அரேபிய தொழில் அதிபர் ஹசன் ஜமீலை காதலித்து வருகிறார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி, நடிகை ரிஹானா. 29 வயதான இவர் சவுதி அரேபியாவை சேர்ந்த தொழில் அதிபர் ஹசன் ஜமீலை காதலிக்கிறார். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான அப்துல் லதீப் ஜமீல் நிறுவனத்தின் துணைத் தலைவராக ஹசன் ஜமீல் இருக்கிறார். டொயோட்டா நிறுவன கார்களை அரேபியாவில் வினியோகிக்கும் உரிமை இவருடைய நிறுவனத்திடம் உள்ளது. ஜமீல் குடும்பத்தினர் சவுதியை சேர்ந்த ஜாக்கர் குழுவை சேர்ந்த ...

Read More »

27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் மக்கள் வசம்

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன. இதன்படி மக்கள், 27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி கண்ணகை அம்மன் கோவில் போன்றவற்றை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். மேலும், 27 வருடங்களுக்கு பின் மயிலிட்டி துறைமுகத்தில் மக்களின் படகுகள் வந்து சேர்ந்துள்ளமையால், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Read More »

தமிழ்மொழி கற்க அவுஸ்ரேலிய அரசு உறுதுணையாக உள்ளது!

அவுஸ்ரேலிய நாட்டில் வாழும் தமிழர்கள் தமிழ் மொழியைக் கற்க அந்நாட்டு அரசு உறுதுணையாக உள்ளதாக அவுஸ்ரேலிய நாட்டின் தொழிலாளர் கட்சி பிரதிநிதியும், தமிழ் அரசியல்வாதியுமான ஓ.பழனிச்சாமி தெரிவித்தார். அரசுமுறைப் பயணமாக ஒருவாரம் இந்தியாவுக்கு வந்துள்ள 9 பேர் அடங்கிய அவுஸ்ரேலியா நாட்டு பிரதிநிதிகள் குழு தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் ஆய்வுப் பயணங்களை முடித்துக் கொண்டு பெங்களூருக்கு வியாழக்கிழமை வந்தது. பெங்களூரு அரசியல் செயல்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.சி. சேலிடால்போட், ஓ.பழனிச்சாமி உள்ளிட்டோர் அடங்கிய அவுஸ்ரேலிய பிரதிநிதிகள் குழுவினர், கட்டாய வாக்களிப்புமுறை ...

Read More »

புதிய அரிச்சந்திரனான வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்!

மத்திய அரசின் சட்டபூர்வமான விசாரணைக்குழுவான இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் தானாக ஆஜராகி தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தானே சமர்ப்பித்து விசாரணைக்கு உட்பட்டு தனது புனிதத்தை வெளிப்படுத்தப்போவதாக புதிய அரிச்சந்திரனான வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர். ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மாகாண முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் ...

Read More »

போப்பாண்டவரின் உதவியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தும் போப்பாண்டவரின் உதவியாளர்களில் முக்கியமான நபரான கார்டினால் ஜார்ஜ் பெல் என்பவர் மீது அவுஸ்திரேலியா காவல் துறையினர் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் மற்றும் சிட்னி மறைமாவட்டங்களில் பேராயராக பணியாற்றியவர் கார்டினால் ஜார்ஜ் பெல். இவர் அவுஸ்திரேலிய கத்தோலிக்க திருச்சபையில் முக்கியமான நபராக கருதப்படுகிறார். முன்னாள் போப்பாண்டவர் பெனடிக்ட் ராஜினாமா செய்த பிறகு போப்பாண்டவராக தெரிவு செய்யப்பட்ட பிரான்சிஸ்சின் உதவியாளராகவும் நிதி ஆலோசகராவும் ஜார்ஜ் பெல் செயல்பட்டுவருகிறார். இவர் வத்திகான் மாநகரில் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் இன்று முதல் தற்காலிக வேலை விசா திட்டம்!

அவுஸ்ரேலியாவில் தற்காலிக வேலை விசா Temporary Work visa (subclass 457) திட்டத்திற்கான புதிய தொழிற்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் வேலை செய்வதற்கு 457 விசா திட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இதற்குப் பதிலாக தற்போது மாற்றியமைக்கப்பட்ட தற்காலிக வேலை விசா தொழிற்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் அமுலுக்கு வருகின்ற இந்த தற்காலிக வேலை விசா திட்டத்தின் கீழ் வெளிநாட்டவர்கள் பணிநிமித்தம் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முடியும். இதன்படி Medium and Long‑term Strategic Skills List (MLTSSL) மற்றும் Short‑term ...

Read More »

குழு சண்டையில் தயவு செய்து தமிழர் நிவாரணத்தை பலிக்கடா ஆக்காதீர்கள்!

சமீபகாலமாக தமிழர் அரசியலில் ஏற்பட்டுள்ள அவலங்கள் தமிழர் நலனில் அக்கறையுள்ள அனைவருக்கும் அதிகபட்ச மனஉலைச்சலை ஏற்படுத்தியுள்ளதுஎன்பதே உண்மை. ஒரு மோசமான இன அழிப்பிற்குள்ளான ஈழத்தமிழினத்திற்கு உதவும் கரங்களாக நின்று அவர்களை வாழ்வில் உயர்த்திவிட வேண்டிய கடமைபாடுடைய நாம் அதை மறந்து நான் பெரிதா நீ பெரிதா என்ற குழு சண்டைக்குள் எம்மை உட்படுத்தியிருப்பது பெரும் துயர்தருகிறது. இதில் ஒரு தரப்பை தாக்குவதற்கு தமிழர் புனர்வாழ்வு சார்ந்த விடயங்களையே வீதிக்கு இழுத்து உண்மைக்கு புறம்பான விடயங்களை வெளியிடுவது கடும் கண்டனத்திற்குரியது. பிரம்டன் தமிழ் ஒன்றியத்தினராகிய நாமும் ...

Read More »

பழிவாங்கப்படுகின்றோம் – பிலவுக்குடியிருப்பு மக்கள்

முல்லைத்தீவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், மக்கள் மீள்குடியேறி நான்கு மாதங்களைக் கடந்துள்ள போதும்,தமக்கான எந்த உதவிகளும் வழங்கப்படாது, பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக, மேற்படி பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலக்குடியிருப்புப் பகுதியில், தங்களுடைய காணிகளை விடுவிக்கக்கோரி, கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 1ஆம் திகதி வரையான ஒரு மாத காலம், விமானப்படையினருக்கு எதிராக கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி, குறித்த பகுதி விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்டது. ...

Read More »

அவுஸ்ரேலியாவின் முதலாவது இராணுவ இணையப் பிரிவு உருவாக்கம்!

அவுஸ்ரேலியாவின் முதலாவது இராணுவ இணையப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இணைய ஊடுருவல் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகள் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்கும் பொருட்டே குறித்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மெல்பேர்னில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் உரையாற்றிய போது, “புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இராணுவ இணையப் பிரிவால் ஐ.எஸ் இற்கு எதிராக இலக்கு வைக்க முடியும். அத்துடன் ஆயுதப் படைகளை இணையத் தாக்குதலில் இருந்து ...

Read More »