செய்திமுரசு

அகதிகளுக்கு தடை விதியுங்கள், உறவினர்களுக்கு கட்டுப்பாடுகள் வேண்டாம்: அமெரிக்கா

அகதிகளுக்கு கட்டுப்பாடு விதியுங்கள், உறவினர்களுக்கு தடை வேண்டாம்: அமெரிக்க சுப்ரீம் கோர்ட் அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்துள்ள 6 இஸ்லாமியன் நாடுகள் மீதான தடை தொடர அனுமதி அளித்துள்ள அமெரிக்க சுப்ரீம் கோர்ட், உறவினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தார். இது பல்வேறு போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க கோர்ட்டுகளில் பல்வேறு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் ஈழ அகதிகளுக்கு நெருக்கடி!

அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியுள்ள ஈழ அகதிகளுக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் அடைக்கலம் கோரியுள்ள ஈழ அகதிகளை தங்க வைப்பதற்கான மாற்று இடம் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுஸ் மற்றும் நவுறு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படுவார்கள் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா அரசாங்கத்தின் போது உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது. எனினும், இந்த உடன்படிக்கை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப் ...

Read More »

இன்று மைத்திரியை சந்திக்கும் ஜுலி பிஷோப்!

இரு நாட் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்டு சிறிலங்கா  வந்துள்ள அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட உயர்மட்ட குழுவினருடன் அவர் இன்று கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்திரேலிய வௌிவிவகார அமைச்சர் ஜுலி பிஷோப் நேற்று சிறிலங்கா வந்தார். நேற்று சிறிலங்கா வந்த அவர் நேற்று மாலை சிறிலங்கா வௌிவிவகார அமைச்சர் ரவிகருணாநாயக்கவை சந்தித்துள்ளார். இதன்போது இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதுடன் இணைந்த ...

Read More »

வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு செக் வைத்தது அவுஸ்ரேலியா!

உலகின் முன்னணி சாட் அப்ளிகேஷனான வாட்ஸ்அப்பில், பயனாளர்கள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்ட பின்னரே மற்றொருவரை சென்றடையும். பின்னர் அந்த செய்தியானது, ‘டிகிரிப்ட்’ செய்யப்பட்ட பின்னரே பயனாளரின் மொபைல் போனில் படிக்கமுடியும். இதனால், வேறு எவராலும் அந்த செய்தியை இடைமறித்துப் படிக்கமுடியாது. பயனாளர்களைப் பொறுத்தவரை, இது பாதுகாப்பான விஷயம்தான் என்றாலும், சமூகவிரோதிகள் இதைப் பயன்படுத்தி சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. இதனால், பல நாடுகளிலும், வாட்ஸ்அப் உள்ளிட்ட என்கிரிப்ட் செய்யப்பட்ட அப்ளிகேஷன்களுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வாட்ஸ்அப் ...

Read More »

அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டி பிரபலமான பெண் எம்.பி. ராஜினாமா

அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டி பிரபலமான பெண் எம்.பி. லாரிஸ்சா வாட்டர்ஸ் தனது பதவி இழந்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்ரேலியாவில் கிரீன்ஸ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், லாரிஸ்சா வாட்டர்ஸ் (வயது 40) ஆவார். இந்தப் பெண் எம்.பி., நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியவர். குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியவாறு அவர் பாராளுமன்றத்தில் பேசிய படக்காட்சி, உலகமெங்கும் வலம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண் எம்.பி., லாரிஸ்சா வாட்டர்ஸ், பதவி விலகி உள்ளார். அவர் இரட்டை குடியுரிமை பெற்றிருப்பதே பதவி விலகலுக்கு காரணம் ...

Read More »

அவுஸ்ரேலியாவுடன் நாளை பலப்பரீட்சை!

மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டில் நாளை நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை இந்திய அணி விழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் அரை இறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2-வது அரைஇறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை ...

Read More »

புகலிடக் கோரிக்கையாளர்களை அமெரிக்கா ஏற்குமா?

அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய சிலரை அமெரிக்காவில் குடியேற்ற இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் நவ்ரு தீவு முகாம்களில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இணங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த முகாம்களில் இருக்கின்றவர்களை அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கடந்த வாரங்களில் நேர்முகம் கண்டதாக தெரியவருகிறது. ஆனால் அவர்கள் திடீரென அமெரிக்கா திரும்பிவிட்டனர் என்று வெளியாகும் செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. அமெரிக்கா ஆண்டுதோறும் ஏற்கும் சுமார் ஐம்பதாயிரம் அகதிகளின் எண்ணிக்கைப்படி ஏற்கனவே இந்த எண்ணிக்கை கொண்ட அகதிகளை இந்த ஆண்டு ஏற்றுக்கொண்டுவிட்டது. இதனால் புதிய அகதிகளை இந்த ...

Read More »

ஸ்கைடைவ் செய்த இருவர் பலி!

சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் skydive செய்த இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் யார் என்ற அடையாளத்தை பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. 60 வயதான ஒருவரும் 20 வயதான இன்னொருவரும் Picton என்ற skydive செய்வதற்குப் பிரபலமான இடத்திலிருந்து, இந்த சாகசச் செயலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, Wilton Park Road இலுள்ள ஒரு காணியில் வீழ்ந்ததில் ஏற்பட்ட தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்.

Read More »

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்கா வருகை தரவுள்ளார்!

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இந்த வாரம் சிறிலங்கா வருகை தரவுள்ளார். சிறிலங்கா வரும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலரையும் சந்திக்கவுள்ளார். இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அவர் பேச்சுகளில் ஈடுபடவுள்ளார். டெங்குக் காய்ச்சலைத் தடுக்க அவுஸ்திரேலியா வழங்கும் உதவி குறித்தும் ஜனாதிபதியுடன் இணைந்து அவர் அறிவிக்கவுள்ளார். மேலும், நல்லிணக்கச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் அவர் ...

Read More »

மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக விந்தன் கனகரட்ணம்!

டெனீஸ்வரனை பதவி நீக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கத்தின் கட்சியால் (ரெலோ)    கோரப்பட்டதற்கு அமைய  அக்கட்சியில் இருந்து அப் பதவிக்கு வேறு ஒரு உறுப்பினர் பரிந்துரைக்கப்படவேண்டியதை அடுத்து, வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக விந்தன் கனகரட்ணம் அவரது கட்சியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கட்சியால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் குறித்த முடிவு முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதே வேளை பரவலாக வடமாகாண அமைச்சுகள் அனைத்தும் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே கல்வி  அமைச்சு சர்வேஸ்வரனுக்கும் மகளிர் ...

Read More »