அவுஸ்திரேலியாவில் தஞ்சம்கோரிய சிலரை அமெரிக்காவில் குடியேற்ற இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில் நவ்ரு தீவு முகாம்களில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இணங்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த முகாம்களில் இருக்கின்றவர்களை அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கடந்த வாரங்களில் நேர்முகம் கண்டதாக தெரியவருகிறது.
ஆனால் அவர்கள் திடீரென அமெரிக்கா திரும்பிவிட்டனர் என்று வெளியாகும் செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன.
அமெரிக்கா ஆண்டுதோறும் ஏற்கும் சுமார் ஐம்பதாயிரம் அகதிகளின் எண்ணிக்கைப்படி ஏற்கனவே இந்த எண்ணிக்கை கொண்ட அகதிகளை இந்த ஆண்டு ஏற்றுக்கொண்டுவிட்டது.
இதனால் புதிய அகதிகளை இந்த ஆண்டு அமெரிக்கா ஏற்காது என்பதால், அவுஸ்திரேலியா வந்த அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை நவ்ரு தீவிலிருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Eelamurasu Australia Online News Portal