செய்திமுரசு

இந்தியாவுக்கு எதிரான டி20: கம்மின்ஸ் விலகல்!

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகியுள்ளார் அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்காக இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும் கம்மின்ஸ் நாடு திரும்புகிறார். இந்தியா-அவுஸ்ரேலியா இடையிலான கடைசி ஒரு நாள் ஆட்டம் அக்டோபர் 1-ஆம் திகதி நாகபுரியில் நடைபெறுகிறது. அது முடிந்ததும் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா திரும்பவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. கம்மின்ஸ்,அவுஸ்ரேலியாவில் நடைபெறும் ஷெப்பீல்டு ஷீல்டு போட்டியில் பங்கேற்கவுள்ளார். கம்மின்ஸுக்குப் பதிலாக மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படவுள்ளார். ...

Read More »

ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப் யாதவிடம் அபூர்வ திறமை இருக்கிறது!

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப் யாதவிடம் அபூர்வ திறமை இருப்பதாக இந்திய வீரர்கள் பாராட்டியுள்ளனர். கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மேத்யூ வேட் (2 ரன்), ஆஷ்டன் அகர் (0), கம்மின்ஸ் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை வரிசையாக சாய்த்து இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இதன் மூலம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது இந்தியர் (ஏற்கனவே 1987-ம் ஆண்டில் சேத்தன் ...

Read More »

மாமனிதர் மருத்துவர் பொன். சத்தியநாதனின் இறுதி வணக்க நிகழ்வு!

தமிழ்த்தேசியப் பணியில் ஒப்பற்று உழைத்த பெருமனிதர் பொன் சத்தியநாதன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று 22 – 09 – 2017 அன்று வெள்ளிக்கிழமை தமிழ்த்தேசியத்திற்கான மதிப்பளித்தலுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது. காலை பத்து மணிக்குத் தொடங்கிய தேசிய வணக்க நிகழ்வில் பொன் சத்தியநாதன் அவர்களின் புகழுடலுக்கு தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களால் தமிழீழத் தேசியக்கொடி போர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உரையாற்றிய வசந்தன் அவர்கள், “பொன். சத்தியநாதன் அவர்களின் பணிகளும் செயற்பாடுகளும் பல்தளங்களில் அறியப்பட்டபோதும் அவரின் அனைத்துச் செயற்பாடுகளும் ...

Read More »

ஒற்றையாட்சி! – இடைக்கால அறிக்கையின் சுருக்கம்!

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நேற்று வெளி­யா­னது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தார். இலங்கை பிரிக்­கப்­ப­டாத, பிரிக்­கப்­ப­ட­ மு­டி­யாத நாடு என்று அந்த அறிக்கை குறிப்­பி­டு­கி­றது. பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­ட­வேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கி­றது. வடக்கு –கிழக்கு மாகா­ணங்­களை இணைப்­பது தொடர்­பில் மூன்று தெரி­வு­களை முன்­வைத்து இணக்­க­மின்­மையை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. தேசி­யம், மாகா­ணம், உள்­ளூ­ர­தி­கார சபை ஆகிய மூன்று மட்­டங்­க­ளில் அதி­கா­ரங்­க­ளைப் பகிர்­வ­தற்கு முன்­மொ­ழிந்­துள்­ளது. காணிப் பயன்­பாட்டு அதி­கா­ரத்தை மாகா­ணங்­க­ளுக்கு வழங்க யோசனை முன்­வைத்­துள் ளது. பகி­ரப்­பட்ட ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வங்கிக்கு தீ வைத்த புகலிடக்கோரிக்கையாளர்?

மெல்பேர்ன், Springvale-இலுள்ள வங்கிக்கு தீ வைத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர் இந்த வழக்கை எதிர்கொள்வதாக தெரியவருகிறது. இந்த தீ விபத்தில் 12 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 18ம் திகதி Springvale Commonwealth வங்கிக்குச் சென்ற Nur Islam என்ற மியன்மார் நாட்டைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர், வங்கியில் நீண்ட நேரம் காத்திருந்தமையால் ஆத்திரமடைந்து குறித்த வங்கிக்கு தீ மூட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் வங்கிக்கு சுமார் 3 மில்லியன் டொலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த ...

Read More »

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா முதலிடம்!

அவுஸ்ரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. அவுஸ்ரேலியா அணியுடனான ஒருநாள் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்ரேலியா அணி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. சென்னையில் நடந்த முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில், நேற்று (21) கொல்கத்தாவில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. குல்தீப் யாதவின் ஹாட்ரிக் ...

Read More »

எதிர்வரும் மார்ச் 30க்குள்ளேயே மாகாண, உள்ளூராட்சித் தேர்தல்கள்!

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள்ளேயே மூன்று மாகாணசபைத் தேர்தல்களும் உள்ளூராட்சித் தேர்தல்களும் நடைபெறும் என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், ‘சிலர் குறைகூறுவதைப் போன்று சட்டங்கள், பிரேரணைகள் மூலம் தேர்தலைப் பிற்போடமுடியாது. மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது. அவற்றுக்கான தேர்தல்களும், உள்ளூராட்சித் தேர்தல்களும் எதிர்வரும் மார்ச் 30இற்குள் நடைபெறும். மாகாணசபைகள் அனைத்துக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். ...

Read More »

குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைக்கும் முனைப்பில் அவுஸ்திரேலிய அரசு!

Permanent residency எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு நாட்டில் வாழ்ந்தால் அவர்கள் குடியுரிமை பெற தகுதி பெறுவர் என்ற தற்போதைய நிபந்தனையை மாற்றி அமைக்கப்படவுள்ளது. ஒருவர் வதிவிட உரிமையுடன் நான்கு ஆண்டுகள் நாட்டில் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும். அத்துடன், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல் போன்ற பல புதிய நிபந்தனைகள் தற்போது அரசு முன்வைக்கும் குடியுரிமைச் சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

Read More »

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

இந்தியாவிடம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து மரணித்த தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகளை பொது அமைப்புக்கள் மற்றும் கட்சிகளுடன் இணைந்து பெரும் எழுச்சியுடன் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எதிர்வரும் 26.09-2017 அன்று முற்பகல் 10.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகும். இந்நிகழ்வில் பொது மக்கள், அனைத்து அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு ...

Read More »

ஸ்மித்தின் கப்டன் பதவி தற்போது சவாலாக உள்ளது!

அவுஸ்ரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்தின் கப்டன் பதவி தற்போது சவாலுக்குள்ளாகியுள்ளது என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். அவுஸ்ரேலிய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் ரிக்கி பாண்டிங். அதன்பிறகு மைக்கேல் கிளார்க் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். முதுகு வலி பிரச்சினை காரணமாக அவரால் நீண்ட காலம் அவுஸ்ரேலிய  அணியில் நீடிக்க முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை இழந்த பின்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் 2015-ம் ஆண்டு அவுஸ்ரேலியா – நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போது சர்வதேச ...

Read More »