எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள்ளேயே மூன்று மாகாணசபைத் தேர்தல்களும் உள்ளூராட்சித் தேர்தல்களும் நடைபெறும் என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பாக உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
‘சிலர் குறைகூறுவதைப் போன்று சட்டங்கள், பிரேரணைகள் மூலம் தேர்தலைப் பிற்போடமுடியாது.
மூன்று மாகாணசபைகளின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகின்றது. அவற்றுக்கான தேர்தல்களும், உள்ளூராட்சித் தேர்தல்களும் எதிர்வரும் மார்ச் 30இற்குள் நடைபெறும்.
மாகாணசபைகள் அனைத்துக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நாங்கள் எமது முடிவை மாற்றிக் கொண்டுள்ளோம்.
நாங்கள் கூடிய விரைவில் தேர்தல்களை நடத்துவோம். தேர்தல்களுக்கான நாளை தேர்தல் ஆணைக்குழு தான் தீர்மானிக்கும்’ என்று தெரிவித்தார்.