இந்தியாவிடம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து மரணித்த தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நிகழ்வுகளை பொது அமைப்புக்கள் மற்றும் கட்சிகளுடன் இணைந்து பெரும் எழுச்சியுடன் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 26.09-2017 அன்று முற்பகல் 10.30 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமாகும்.
இந்நிகழ்வில் பொது மக்கள், அனைத்து அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் மரணம் அடைந்தார்.
ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தின் விடுதலைக்காக தனது உடலை மெழுகாய் உருக்கி மண்ணுக்காக மரணித்த மாவீரனுக்கு வணக்கம் செலுத்த வேண்டியது தமிழ் தேசத்து மக்கள் அனைவதும் கடமையாகும்.
ஆகவே 26-09-2017 (செவ்வாய்க்கிழமை) அனைவரும் கலந்து கொள்ள ஆவண செய்து ஒத்துழைக்குமாறு சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், தனியார் நிறுவன உரிமையாளர்கள் அரச சார்பற்ற நிறுவன தலைவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.