செய்திமுரசு

இந்திய குழந்தைகளை தத்தெடுக்க ஆஸ்திரேலிய அரசு அனுமதி!

இந்தியாவில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க விதிக்கப்பட்ட தடையை 8 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அரசு நீக்கியுள்ளது. வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.சப்ரகமுவ மகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க உத்தியோக பூர்வ விஜயம் ஒன்ற‍ை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ள நிலையிலேயே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலிய தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குழந்தைகள் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. ...

Read More »

சப்ரகமுவ பதில் ஆளுநராக ரெஜினோல்ட் குரே!

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சப்ரகமுவ மாகாண பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.சப்ரகமுவ மகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க உத்தியோக பூர்வ விஜயம் ஒன்ற‍ை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ள நிலையிலேயே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு பதில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் அளித்தார் மஹிந்த!

கடந்த 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவு குழுவினர் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். இதற்கிணங்க குற்றபுலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு இன்று முற்பகல் 11.30 மணியளவில் கொழும்பு-07, விஜயராம மாவத்தையிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு சென்று வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டுள்ளது. சி.ஐ.டி.யினர் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்டிருந்த வேளை ஒன்றிணைந்த எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி.திஸாநாயக்க, கெஹலிய ரம்புக்வெல்ல, பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி ...

Read More »

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் சபாநாயகர்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் ஆசாத் கைசர் சபாநாயகர் ஆனார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை பலம் பெறாமல், தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வந்து உள்ளது. அந்தக் கட்சி, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான்கான் தலைமையில் புதிய அரசு அமைக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த திங்கட்கிழமை கூடியது. இதில் இம்ரான்கான், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி ...

Read More »

மைத்திரி, ரணில் பெயர்­களை பயன்­ப­டுத்தி நிதி மோசடி செய்யும் நபர்­க­ளுக்கு மன்னிப்பு இல்லை!!

ஜனா­தி­பதி, பிர­த­மரின் பெயர்­களை பயன்­ப­டுத்தி வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புக்­களை பெற்­றுத்­த­ரு­வ­தாக தெரி­வித்து நிதி மோசடி செய்யும் நபர்­க­ளுக்கு எந்­த­வித மன்­னிப்பும் இல்லை. அவர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படுமென வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாண­யக்­கார தெரி­வித்தார். பிர­தமர் அலு­வ­ல­கத்தில் பணி­பு­ரி­வ­தா­கவும் சிரேஷ்ட அமைச்சர் ஒரு­வ­ருக்கு மிகவும் நெருக்­க­மா­னவர் எனவும் தெரி­வித்து, வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பெற்­றுத்­த­ரு­வ­தாக வாக்­கு­றுதியளித்து நிதி மோசடி புரிந்த நபர் ஒருவர் இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தின் அதி­கா­ரி­க­ளினால் கடந்­த­வாரம் அம்­பாறை உகன பிர­தே­சத்தில் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார். இது தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு கருத்து ...

Read More »

நேவி சம்பத் தலைமறைவாகயிருப்பதற்கு முன்னாள் கடற்படை தளபதி உதவி!

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத் தலைமறைவாகயிருப்பதற்கு முன்னாள் கடற்படை தளபதியும் முப்படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண பணம் வழங்கினார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்று கைதுசெய்யப்பட்ட நேவி சம்பத் இன்று நீதிமன்றத்தில ஆஜர் செய்யப்பட்டவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர். முப்படைகளின் பிரதானி கடற்படை தளபதியாகயிருந்தவேளை நேவி சம்பத் தப்பிச்செல்வதற்கு உதவினார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த வருடம் பொலிஸாரிடமிருந்து ...

Read More »

நவுருவில் 12 வயது அகதிச்சிறுவன் உண்ணாவிரதப்போராட்டம்!

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி வந்து தற்போது நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் இரண்டு வாரங்களுக்கு மேல் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருவதாக அங்குள்ள மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி The Guardian செய்தி வெளியிட்டுள்ளது. தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் கடந்த நான்கு வருடங்களாக நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் மேற்படி ஈரானிய சிறுவனின் நிலமை மிகுந்த கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும், அவனை இந்த நிலையிலும்கூட ஆஸ்திரேலியாவுக்கு கொண்டுவந்து மருத்துவ வசதிகள் அளிப்பதற்கு குடிவரவுத்துறை மறுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிறுவனின் குடும்பத்தினர் அமெரிக்காவில் குடியேறுவதற்காக அனுப்பப்பட்டுவருகின்றவர்களின் ...

Read More »

நாயாறு எரியூட்டல்!

முல்லைத்தீவு, நாயாறு கடற்கரைப் பகுதியில், தொழில் நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு, மூன்று இயந்திரங்கள், 27 வலைத்தொகுதிகள், எட்டு வாடிகள் (தற்காலிக கூடாரங்கள்) இனந்தெரியாத குழுவொன்றால் திங்கட்கிழமை (13) இரவு, எரியூட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன. அழிந்து போயிருக்கின்ற தொழில் உபகரணங்களின் பெறுமதி, 10 மில்லியன் ரூபாய் அளவில் இருக்கும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகிறார்கள். கடந்த ஒன்றரை மாதங்களுக்குள், வடக்கு கடற்கரையோரங்களில் தொழில் உபகரணங்கள், படகுகள் இனந்தெரியாதோரால் எரியூட்டி அழிக்கப்பட்ட, மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். யாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கின் கட்டைக்காடு, தாளையடிப் பகுதிகளில் ஏற்கெனவே ...

Read More »

2 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்ட மெல்போர்ன்?

உலகில் வாழ்வதற்கு மிகவும் உகந்த நகரமாக தொடர்ந்து 7 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த மெல்போர்ன் 02 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. உலகிலேயே வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நகரமாக 7 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தைப் பின் தள்ளி வியன்னா நகரம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்திற்கு மெல்போர்ன் நகரம் பின் தள்ளப்பட்டுள்ளது. உலகிலுள்ள 140 பெரிய நகரங்களிலுள்ள மருத்துவம், கல்வி, கலாச்சாரம், சுற்றுச்சூழல், ஆகிய பல விடயங்களை அடிப்படை ஆதாரமாகக் வைத்து கொண்டு நகரங்கள் வரிசையாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

Read More »

மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு வாக்குமூலம்…!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், குற்றப்புலனாய்வு பிரிவு, எதிர்வரும் 17 ஆம் திகதியன்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளது. ஊடகவியலாளர் கீத்​ நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அவர், கடந்த 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பில், சபாநாயகர் கருஜயசூரியவிடம்,இதற்கு முன்னரும் சி.ஐ.டியினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »