முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், குற்றப்புலனாய்வு பிரிவு, எதிர்வரும் 17 ஆம் திகதியன்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவுள்ளது.
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே, வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது. அவர், கடந்த 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில், சபாநாயகர் கருஜயசூரியவிடம்,இதற்கு முன்னரும் சி.ஐ.டியினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal