செய்திமுரசு

மறைந்திருக்கும் வெடிபொருட்கள்: இன்னும் அதிரும் மண்!

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும்,  போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணிவெடிகளின் ஆபத்து  சவால் மிக்கதாகவே உள்ளது. குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு, இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் பாரிய சவாலாக விளங்குகின்றன. இலங்கையில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளது. வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக, முகமாலைப் பகுதி காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்று,  12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமது ...

Read More »

மற்றுமொரு வைத்தியரும் விலகினார்!

சுகாதார அமைச்சின் கொவிட் தொற்றொழிப்பு தொழில்நுட்ப குழுவிலிருந்து மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அசோக குணரத்ன இராஜினாமா செய்துள்ளார். இந்தக் குழுவில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதில் எவ்விதமான பிரயோசமும் இல்லை என்பதால், அக்குழுவிலிருந்து இராஜினாமா செய்வதாக மயக்க மருந்து நிபுணர் டாக்டர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். முன்னதாக,   பேராசிரியர் நீலிகா மாலவிகே மற்றும் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம ஆகியோரும் தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read More »

இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும்!

வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கில் மாற்றுச் சமூகத்தினால் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள். இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார். தமிழ்த் தேசிய அரசியற் நிலவரம் தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் ...

Read More »

தமிழ் அகதி தம்பதிக்கு திருமண நாள் வாழ்த்து

ஆஸ்திரேலியா: தமிழ் அகதி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அக்குடும்பத்தின் ஆஸ்திரேலிய ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியாவில் நாடுகடத்தல் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள தமிழ் அகதிகளான பிரியா- நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரு குழந்தைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் Bring Priya, Nades and their girls home to Biloela எனும் சமூகக்குழு ‘பிரியா- நடேசலிங்கம்’ தம்பதியினரின் 8வது திருமண நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. ‘இத்தமிழ் அகதி குடும்பம் அச்சுறுத்தல் மிகுந்த இலங்கைக்கு நாடுகடத்தப்படக்கூடாது, அவர்கள் ஆஸ்திரேலியாவிலேயே நிரந்தரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டும்’ என்பது அக்குழுவின் கோரிக்கையாக உள்ளது. ...

Read More »

ஆஸ்திரேலியாவில் பரிதவிக்கும் ஆப்கானிய குடும்பம்!

தாலிபான் கட்டுப்பாட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மகன்: ஆஸ்திரேலியாவில் பரிதவிக்கும் ஆப்கானிய குடும்பம் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஆப்கானிய குடும்பம் ஒன்று தங்கள் 17 வயது மகன் தாலிபான் கட்டுப்பாட்டு ஆப்கானிஸ்தானில் சிக்கி உள்ளதாகவும் தாலிபான் படையினரால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என அச்சம் தெரிவித்துள்ளது. “அவன் காபூலில் தன்னந்தனியாக இருக்கிறான். காபூலை தாலிபான் கைப்பற்றியதால் மிகுந்த கவலையுடனும் அச்சத்துடனும் இருக்கிறான். தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் எனத் தெரிவித்திருக்கிறோம்,” என கார்டியன் ஊடகத்திடம் அவரது தந்தை கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தானை விட்டு ஆஸ்திரேலிய ...

Read More »

நோக்கியா 3310 போனை முழுவதுமாக விழுங்கிய இளைஞர்

நோக்கியா 3310 தொலைபேசியை முழுவதுமாக விழுங்கிய நபருக்கு இம்மாதத் தொடக்கத்தில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு அந்த போன் நீக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் கொசோவோவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ”கொசோவோ நாட்டில் உள்ள பிரிஸ்டினா நகரைச் சேர்ந்த 33 வயதான இளைஞர் ஒருவர் 2000ஆம் ஆண்டின் தொடக்கக் கால மாடலான நோக்கியா 3310 போனை முழுமையாக விழுங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இளைஞர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். உடனடியாக அவருக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் இளைஞர் விழுங்கிய போன் அவரது ...

Read More »

நாடாளுமன்றத்தில் 73.2 பில்லியன் ரூபா துணை மதிப்பீடு சமர்ப்பிப்பு

தற்போதைய கொவிட் – 19 தொற்றுநோய் மற்றும் இதர செலவுகளுக்காக செலவிடப்பட வேண்டிய 73.2 பில்லியன் ரூபா (ரூ. 732,124,887,226) மதிப்புள்ள துணை மதிப்பீட்டை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொற்றுநோய் தொடர்பான விடயங்களுக்காக செலவழிக்க அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் கோருகிறது. தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க மற்றும் கொவிட் சிகிச்சை மையங்களுக்காக அரசாங்கம் மேலதிக நிதியை செலவிடவுள்ளது. மேலும் மீனவர்களுக்கு நிவாரணத்திற்காக அதிக நிதி செலவழிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அரசாங்கம் ...

Read More »

சிறிலங்கா அரசாங்கத்தின் அவசரகால விதிமுறைகள் ஒரு வித்தை

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவுகள் மீது அவசரகால விதிமுறைகளை விதிப்பது குறித்த வர்த்தமானிக்கு கண்டனம் தெரிவித்ததுடன், இது ஜனாதிபதியும் அரசாங்கமும் மேலதிக அதிகாரத்தைப் பெற அனுமதிக்கும் ஒரு வித்தை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தனது மூன்று பக்க ஊடக அறிக்கையில் இது தொடர்பில் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தனது கைகளில் அதிகாரங்களை திணிப்பதாகவும், தனது சொந்த நலனுக்காக நாடு தொடர்பான முடிவுகளை எடுக்க தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் தற்போதுள்ள விடயங்களில் கலந்து கொள்ளாமல் ஒப்புக்கொள்வதன் ...

Read More »

எனது மகன் விபத்தில் சிக்கிய வேளை உதவிய சிரியா ஈராக்கை சேர்ந்தவர்கள் அவரை தீவிரவாதமயப்படுத்தியிருக்கவேண்டும்!

நியுசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் அவர் வசித்த பகுதியில் வாழ்ந்த சிரியா ஈராக் பிரஜைகளால் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார் காயமொன்றிலிருந்து எனது மகன் மீள்வதற்கு உதவிய அவர்கள் அவரை தீவிரவாதமயப்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார். 2016 இல் எனது மகன் பல்கலைகழகத்தில் கல்வி கற்றவேளை பல மாடிக்கட்டிடத்தில் விழுந்து விபத்திற்குள்ளானார் என அவரது தாயார் முகமட் இஸ்மாயில் பரீதா தெரிவித்துள்ளார். அவருக்கு அவ்வேளை உதவுவதற்கு எவரும் இருக்கவில்லை சிரியா ஈராக்கை சேர்ந்த அயலவர்களே அவருக்கு உதவினார்கள் அவர்கள் அவரை மூளைச்சலவை செய்திருக்கவேண்டும் ...

Read More »

தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவில் போராட்டம்

இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்கமாறு ஆஸ்திரேலிய அரசினை வலியுறுத்தி நடந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருக்கின்றனர்.

Read More »