எனது மகன் விபத்தில் சிக்கிய வேளை உதவிய சிரியா ஈராக்கை சேர்ந்தவர்கள் அவரை தீவிரவாதமயப்படுத்தியிருக்கவேண்டும்!

நியுசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் அவர் வசித்த பகுதியில் வாழ்ந்த சிரியா ஈராக் பிரஜைகளால் தீவிரவாதமயப்படுத்தப்பட்டார் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்

காயமொன்றிலிருந்து எனது மகன் மீள்வதற்கு உதவிய அவர்கள் அவரை தீவிரவாதமயப்படுத்தினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

2016 இல் எனது மகன் பல்கலைகழகத்தில் கல்வி கற்றவேளை பல மாடிக்கட்டிடத்தில் விழுந்து விபத்திற்குள்ளானார் என அவரது தாயார் முகமட் இஸ்மாயில் பரீதா தெரிவித்துள்ளார்.

அவருக்கு அவ்வேளை உதவுவதற்கு எவரும் இருக்கவில்லை சிரியா ஈராக்கை சேர்ந்த அயலவர்களே அவருக்கு உதவினார்கள் அவர்கள் அவரை மூளைச்சலவை செய்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் முகநூலில் பதிவிட தொடங்கினார் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே அவர் மாறினார் என தாயார் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் அவர் இணையத்தில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை 2016 இல் கண்டுபிடித்தனர் அடுத்த வருடம் அவர் அவுக்லாந்தில் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார் என தாயார் தெரிவித்துள்ளார்.

அவர் தீவிரவாத அமைப்புடன் இணைந்துகொள்வதற்காக சிரியா செல்ல முயன்றார் என அதிகாரிகள் தெரிவித்தனர் –ஐஎஸ் அமைப்புடன் இணைவதற்காகயிருக்கும் அவர் பின்னர் விடுதலை செய்யப்பட்டார் என அவர் தெரிவித்;துள்ளார்.

2017 இல் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் எங்களுடன் பேசுவதை குறைத்துக்கொண்டார் -மூன்று மாதத்திற்கு ஒரு முறை அவர் எங்களுடன் பேசுவார் எனது இரு மகன்களும் அவரை ஏசினார்கள் என தாயார் தெரிவித்துள்ளார்.