தற்போதைய கொவிட் – 19 தொற்றுநோய் மற்றும் இதர செலவுகளுக்காக செலவிடப்பட வேண்டிய 73.2 பில்லியன் ரூபா (ரூ. 732,124,887,226) மதிப்புள்ள துணை மதிப்பீட்டை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொற்றுநோய் தொடர்பான விடயங்களுக்காக செலவழிக்க அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஒப்புதல் கோருகிறது. தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க மற்றும் கொவிட் சிகிச்சை மையங்களுக்காக அரசாங்கம் மேலதிக நிதியை செலவிடவுள்ளது.
மேலும் மீனவர்களுக்கு நிவாரணத்திற்காக அதிக நிதி செலவழிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அரசாங்கம் கோரியுள்ளது.
தெற்கு அதிவேகநெடுஞ்சாலை அபிவிருத்தி மற்றும் சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி பணிகள் போன்வற்றிற்கு அரசாங்கம் முறையே 8.04 பில்லியன் ரூபா மற்றும் 26 பில்லியன் ரூபாவையும் செலவிடவுள்ளது
Eelamurasu Australia Online News Portal