Home / செய்திமுரசு (page 30)

செய்திமுரசு

அரசியல் அமைப்புக்கு எதிரானது தணிக்கை!

கேரளத்தின் மண்ணடி கிராமத்தில் 1941-ல் பிறந்த அடூர் கோபாலகிருஷ்ணன், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்திலும் புனே திரைப்படக் கல்லூரியிலும் படித்தவர். 1972-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘ஸ்வயம்வரம்’ மலையாளத்தில் புதிய அலை சினிமாவைத் தொடங்கி வைத்தது. கேரள மாநிலத்தின் முதல் திரைப்படச் சங்கமான ‘சித்ரலேகா’வை நிறுவியவர்களில் ஒருவர். பத்ம விபூஷண், தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட தேசிய அளவிலான விருதுகளையும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர். ஜூலை மூன்றாம் தேதி தனது ...

Read More »

எத்தியோப்பியாவில் கடும் உணவுப் பஞ்சம்: 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு?

எத்தியோப்பியாவின் டைக்ரே மாகாணத்தில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த ஒரு வருடத்துக்குள் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம் என்று ஐக்கிய நாடு சபை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. வெளியிட்ட அறிவிப்பில், “ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் உள்ள வடகிழக்கு மாகாணமான டைக்ரேவில் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் அடுத்த 12 மாதங்களில் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படலாம். இப்பகுதியில் குழந்தைகளின் உடல் நலம் எங்களுக்கு ...

Read More »

ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியான் 7 பதக்கங்கள் வென்று சாதனை

ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்கள் வென்ற வீராங்கனை என்ற அசுர சாதனையை ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை படைத்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4×400மீ  மெட்லே ரிலே நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். அத்துடன் 2012-ம் ஆண்டு அமெரிக்க வீராங்கனைகள் 3 நிமிடம் 52.05 வினாடிகளில் கடந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்தனர். ஆஸ்திரேலிய ...

Read More »

எழுத்தெண்ணிப் பயின்ற இளங்குமரனார்!

ஊர்ப் பெயரும் தாயார் பெயரும் ஒன்றாகக் கொண்டவர் இளங்குமரனார் (1930 – 2021). தாயார் பெயர் வாழவந்தாள். ஊர்ப் பெயர் வாழவந்தாள்புரம். தந்தை பெயர் இராமு; ஊர் வைத்த பெயர் ‘படிக்கராமு’. பெற்றோரின் எட்டாவது குழந்தையாகப் பிறந்ததால், அந்த நாள் வழக்கப்படி அவருக்கு வைக்கப்பட்ட பெயர் ‘கிருஷ்ணன்’. மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் நூல்கள் தந்த தனித்தமிழ் உணர்வால் இவர் மாற்றிக்கொண்ட பெயர், ‘இளங்குமரன்’. இடைவிடாமல் படிக்கும் தந்தையாரின் பழக்கம் இவரிடமும் ...

Read More »

விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் நைக் முத்திரை காலணிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அடையாளத்துடன் சித்தரிக்கப்பட்ட NIKE (நைக்) முத்திரை காலணிகள், தம்மால் தயாரிக்கப்படவில்லை என NIKE நிறுவனம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளமை தொடர்பில் சிறிலங்காவின்  வெளியுறவு அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து NIKE Inc. நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது, அந்த நிறுவனம், குறித்த உற்பத்தி, தம்மால் தயாரிக்கப்படவில்லை என்று அறிவித்துள்ளதாகசிறிலங்காவின்  வெளியுறவு ...

Read More »

ரூ. 2.5 கோடிக்கு விற்கப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்பம்

ஸ்டீவ் ஜாப்ஸ் பூர்த்தி செய்த ஒரே விண்ணப்ப படிவம் ப்ரின்ட் மற்றும் என்.எப்.டி. முறையில் ஏலம் விடப்பட்டது. ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நினைவுச்சின்னங்கள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் இம்முறை ஜாப்ஸ், பணி வழங்க கோரி பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் விண்ணப்ப படிவம் இந்திய மதிப்பில் ரூ. 2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு ...

Read More »

ஆப்கனில் ஐ.நா. வளாகம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்

ஆப்கனில் ஐ.நா. சபை வளாகம் மீது நடந்த தாக்குதலில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கன் அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அமெரிக்க படைகள், அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி வாபஸ் பெறப்பட்டு வருகின்றன. இதனை பயன்படுத்தி தலிபான் பயங்கரவாதிகள் பல்வேறு மாவட்டங்களை கைப்பற்றி ...

Read More »

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்ற இந்திய இளைஞர் நியூசிலாந்தில் திடீர் மரணம்!

ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றுவிட்டு நியூசிலாந்தில் வசிந்துவந்த இந்திய நபர் ஒருவர் திடீர் மரணமடைந்துள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த சித்தார்த் என்ற 31 வயது குடும்பஸ்தரே இவ்வாறு பலியானவர் ஆவார். இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்து பிரிஸ்பேனில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சித்தார்த், நேபாளத்தை சேர்ந்த சிறிஜனாவை சந்தித்து, இருவருக்கும் 2013 ஆம் ஆண்டு திருமணம் இடம்பெற்றது. அதன்பின்னர், நியூசிலாந்துக்கு சென்று அங்கு வசித்த சித்தார்த் – சிறிஜனாவுக்கு ஒன்பது மாதங்களில் ஒரு குழந்தையும் இருக்கிறது. ஹோட்டல் நிர்வாகத்துறையில் தனது ...

Read More »

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான, யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடேசன் தருமராசா, வவுனியாவைச் சேர்ந்த ஜோசப் செபஸ்ரியான், கிளிநொச்சியை சேர்ந்த நடராசா சர்வேஸ்வரன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கண்ணதாசன் ஆகியோரோ விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் நடேசன் ...

Read More »

கொவிட் தடுப்பூசி, டெல்டா வைரஸ் தொற்றுக் குறித்து முல்லை மக்கள் அச்சப்படத் தேவையில்லை

கொவிட் தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு தவறான புரிதல்கள் இருக்கின்றன. அந்த தவறான புரிதல்களை ஒதுக்கிவைத்துவிட்டு, இந்த அரிய சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி தடுப்பூசிகளை அனைத்து மக்களும் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளவேண்டும் என முல்லைத்தீவு மாவட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி வி.வஜிதரன் தெரிவித்துள்ளார். அதேவேளை டெல்டா வைரஸ் தொற்றுக்களோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை எவரும் இனங்காணப்படவில்லை எனவும், முல்லைத்தீவைச்சேர்ந்த ஒருவர் ஓமான் நாட்டிலிருந்து நாட்டுக்குத் திரும்பிய நிலையில் அவருக்கு ...

Read More »