செய்திமுரசு

ஆப்கானிஸ்தானில் பெண் நிருபர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் நிருபர் மலாலா மைவாண்ட் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பெண் நிருபராக வேலைபார்த்தவர் மலாலா மைவாண்ட். இவர் பணி வி‌ஷயமாக ஜலாலாபாத் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் முகமது தாகிர் ஓட்டிச்சென்றார். அப்போது காரை மறித்த மர்மநபர்கள் துப்பாக்கியால் பெண் நிருபரை சரமாரியாக சுட்டனர். மேலும் கார் டிரைவரையும் சுட்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட பெண் நிருபர் ...

Read More »

கொவிட்-19: பிளாஸ்டிக் முகக்கவசங்கள் பாதுகாப்பற்றவை என ஆய்வில் தகவல்

கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக  அணியும் பிளாஸ்டிக் முகக் கவசங்கள் பாதுகாப்பற்றவை என ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக துணி மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன முகக்கவசங்களை அணிந்து வருகின்றனர். இந்நிலையில் பிளாஸ்டிக் முகக்கவசம் அணிந்தவர்களுக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டதால், அதுகுறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது ஒரு மீற்றர் தொலைவில் ஒரு நபர் தும்மும்போது அதிலிருந்து வெளியாகும் கொரோனா கிருமிகள் பிளாஸ்டிக் முகக்கவசத்தின் அடிப்பகுதியில் தங்கிவிடுவது தெரியவந்துள்ளது. எனவே துணியால் ஆன முகக்கவசங்களே பாதுகாப்பானவை என ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

கொரோனாவைரசினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் போது மனிதஉரிமைகளிற்கு முக்கியத்தும் வழங்குங்கள்

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் போது மனித உரிமைக்கு முன்னுரிமை வழங்குங்கள் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோகுடரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமைகள் தினத்தை குறிக்குமுகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளின் போது மக்களிற்கும் மனித உரிமைகளிற்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரசினை தோற்கடித்து அனைவரையும் காப்பாற்றுவதற்கு உலகளாவிய உரிமைiயை அடிப்படையாக கொண்ட கட்டமைப்பு அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மனித ...

Read More »

குற்றவியல் நீதிமன்றுக்கு சிறிலங்கா பரிந்துரை செய்ய வேண்டும்

சிறிலங்கா அரசின் போர்க்குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது, மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தல் தொடர்பாகவும் ஐ.நா.அங்கீகாரம் பெற்ற அமைப்பான “அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட்” (The “Alliance Creative Community Project) கனடாவின் வெளியுறவு அமைச்சருக்கு ஒரு கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. உலகம் முழுவதும் டிசம்பர் 10 கொண்டாடப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், டிசம்பர் 9 ஆம் தேதி நிகழும் சர்வதேச இனப்படுகொலை தினத்தையும் முன்னிட்டே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் போர் குற்றச் சட்டத்தின் கீழ், நாட்டிற்குள் நுழையும் ...

Read More »

கொரோனாவினால் உயிரிழந்த குழந்தையின் உடலை பொறுப்பேற்க பெற்றோர் மறுப்பு

கொரோனா வைரசினால் உயிரிழந்த 20 நாள் குழந்தையின் பெற்றோர் குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துள்ளனர். பிசிஆர் சோதனை குறித்து தங்களிற்கு கரிசனைகள் உள்ளதாக அவர்கள் கொழும்பு கசட்டிற்கு தெரிவித்துள்ளனர். தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தையின் உடலை அடக்கம் செய்யுமாறு தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் எனினும் அதனை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குழந்தையின் உடலை பொறுப்பேற்க மறுத்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More »

வவுனியாவிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராட்டம்!

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்தக் கோரி, வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Read More »

மனிதர்களுக்கு மத்தியில் மறைந்து வாழும் வேற்று கிரகவாசிகள்?

வேற்று கிரகவாசிகள் மனிதர்களுக்கு மத்தியில் மறைந்து வாழ்வதாக இஸ்ரேலின் முன்னாள் விண்வெளி பாதுகாப்பு தலைவர் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1981 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்புக்கு தலைமை வகித்த ஹைம் எஷெட் (Haim Eshed)அமெரிக்க வார இதழுக்கு அளித்த பேட்டியில், வேற்று கிரக வாசிகள் பூமியின் தன்மை குறித்து ஆராய்வதற்காக, அமெரிக்க அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அமெரிக்க  ஜனாதிபதி ட்ரம்ப், வேற்று கிரக வாசிகளின் இருப்பை உலகிற்கு பிரகடனப்படுத்த முற்பட்டபோது, மனிதர்கள் அச்சமடைவார்கள் என்பதற்காக ...

Read More »

செம்பியன்பற்று கடற்கரையில் கரை ஒதுங்கிய எலும்புக்கூடு

வடமராட்சி கிழக்கு – செம்பியன்பற்று கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் எலும்புக்கூடாக சடலமொன்று நேற்று (08) மாலை கரையொதுங்கியுள்ளது. செம்பியன்பற்று கிராமத்துக்கும் தனிப்பனை கிராமத்துக்கும் இடைப்பட்ட கடற்கரைப் பகுதியில் இவ்வாறு ஒதுங்கிய உருக்குலைந்த சடலம் அடையாளம் காண முடியாதவாறு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவதானித்த பிரதேசவாசிகள் பளை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதையடுத்து சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read More »

யாழில் ஆயிரம் கடற்படையினர் தனிமைப்படுத்தலில்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் ஆயிரம் கடற்படையினர் அவர்களது முகாம்களில் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பணியாற்றும் கடற்படையினர் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று விடுமுறையைக் கழித்த பின்பு பணிக்குத் திரும்பும் சமயம் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனையின் பின்பே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு தனிமைப்படுத்தல்களுக்கு உட்பட்டவர்கள் காலி, காங்கேசன்துறை, நெடுந்தீவு, மாதகல், வெற்றிலைக்கேணி எனப் பல இடங்களிலும் உள்ளனர். இவ்வாறு சகல இடங்களிலும் தனிமைப்படுத்தலில் உள்ள கடற்படையினரே ஆயிரம் பேர் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு தனிமைப்படுத்தலிலுள்ள ஆயிரம் பேரில் பலரது ...

Read More »

சமூகத்துக்காகப் பேச வேண்டியது யார்?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன், நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது, ”முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை, அரசாங்கத்துக்குப் பெரும் வெட்கக்கேடான விடயம்’ எனச் சுட்டிக்காட்டியமை, முஸ்லிம் வெகுஜனங்களுக்கு மத்தியில் பேசுபொருளாகி இருக்கின்றது. கணிசமானோர் சாணக்கியன் எம்.பியின் இந்தச் செயற்பாட்டை வரவேற்றிருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, முஸ்லிம் அரசியல்வாதிகளின் உரைகளின் கனதியும் அவரது உரையுடன் வைத்து ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றது. சாணக்கிய அரசியல் தெரிந்த பெரும் தலைமைகள், அரசியல் ஞானிகள், வித்தகர்கள் போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படும் கடந்தகால, நிகழ்கால முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காத்திரமான உரைகளை நாடாளுமன்றத்தில் நிகழ்த்துவதற்குத் ...

Read More »