செய்திமுரசு

வுகானின் கொரோனா வைரஸ் தெரியப்படுத்திய பத்திரிகையாளருக்கு சிறைத்தண்டனை

கடந்த வருடம் வுகானில் கொரோனா வைரஸ் மிகப் பெரும் பாதிப்பை  ஏற்படுத்திக்கொண்டிருந்த நகரின் நிலை குறித்த செய்திகளை வெளியிட்ட ஒருவருக்கு citizen-journalist    சீனா நான்கு வருட சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது. ஜாங் ஜான்  என்ற 37 வயது பெண்ணிற்கே  சீனா சிறைத்தண்டனையை வழங்கியுள்ளது. அவர் பிரச்சினைகளை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சீனா இந்த தண்டனையை வழங்கியுள்ளது. வுகானில் அவ்வேளை காணப்பட்ட நிலவரத்தை குறிப்பாக மருத்துவமனைகளில் காணப்பட்ட நிலவரத்தினை உடனடியாக நேரடியாக வெளிஉலகிற்கு தெரிவித்த சிலரில் ஜாங் ஜான் ஒருவர் என்பதுடன்  இது தொடர்பில் ...

Read More »

உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிராக பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டம்

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்தமதகுருமார் பலர் இன்று ஜனாதிபதி செயலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். இது தொடர்பில் அவர்கள் மனுவொன்றையும் சுகாதார அமைச்சரிடம் கையளித்தனர். சிங்களராவய உட்பட பல அமைப்புகளை சேர்ந்த பௌத்தமதகுருமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பௌத்தபிக்குகளுக்கும் ஜனாதிபதி செயலகத்தி;ன் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிற்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து பதற்றமானநிலையேற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வந்ததை தொடர்ந்து கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் ...

Read More »

சம்மந்தன் மக்களை மீண்டும் ஏமாற்ற ஆரம்பித்துள்ளார்

மாகாண சபைக்கான தேர்தல் நெருங்குவதால் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தற்போதும் சமஷ்டித் தீர்வுதான் எனக் கூறி; மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டார் என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி இன்று திங்கட்கிழமை (28) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது சமஷ்டி என்ற பதம் சிங்களத் தலைமைகளுக்கும், சிங்கள மக்களுக்கும் பிடிக்காத ஒரு சொல்லாகி விட்டது. ...

Read More »

எம்.சி.சி. ஒப்பந்தம் ரத்தானது ஏன்?

திருகோணமலை நகரை கொழும்பு நகரின் உப நகரமாக மாற்றுவது உட்பட இலங்கைத் தீவின் அபிவிருத்தித் திட்டங்களை மையமாகக் கொண்ட அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation -MCC) இலங்கையோடு செய்யவிருந்த ஒப்பந்தத்தைக் கடந்தவாரம் ரத்துச் செய்துள்ளது. 480 மில்லியன் டொலர் நிதி உதவிக்கான இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடுவது தொடர்பாக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையோடு இணக்கம் ஏற்பட்டிருந்தது. ஆனால் கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும் ஏற்பாட்டில் காலதாமதம் ஏற்பட்டது. ஒவ்வொரு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆற்றில் மூழ்கிப் பலி

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா- நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லையிலுள்ள Liparoo அருகே தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆற்றில் மூழ்கிப் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி பழுகாமத்தைச் சேர்ந்த சோ.திசாந்தன் என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு பலியானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். புகலிடம்கோரி அவுஸ்திரேலியா வந்த திசாந்தன் குயின்ஸ்லாந்து, சிட்னி போன்ற இடங்களில் வசித்த பின்னர் அண்மையில் விக்டோரியாவில் குடியேறியதாக குறிப்பிடப்படுகிறது. நத்தார்  தினத்தன்று தனது நண்பர்களுடன் Murray ஆற்றுக்குச் சென்றிருந்த இவர் அங்கு நீச்சலில் ஈடுபட்டபோது காணாமல்போனதாகவும், பாரிய தேடுதல் ...

Read More »

நத்தார் தினத்தன்று இடம்பெற்றது தற்கொலை தாக்குதலா?

அமெரிக்காவின் நாஸ்வில் பகுதியில் நத்தார் தினத்தன்று இடமபெற்ற வெடிப்பிற்கு தற்கொலை தாக்குதலே காரணம் என சட்ட அமுலாக்கல் கருதுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கார்வெடித்துச்சிதறிய பகுதியில் மனிதஎச்சங்கள் கிடைத்துள்ளதை தொடர்ந்து விசாரணையாளர்கள் மரபணுபரிசோதனையை முன்னெடுத்துள்ளனர். சந்தேகநபர் ஒருவரின் வீட்டினை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்கொலை தாக்குதலே இடம்பெற்றது எனகருதுவதாக அதிகாரிகள் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளனர். மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நபர் ஒருவரை தேடிவருவதாக சட்ட அமுலாக்கல் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சந்தேகநபர் குண்டுவெடிப்பின் போது கொல்லப்பட்டுள்ளார் என கருதுவதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. ...

Read More »

ஜெனீவாவை நோக்கிய ஒரு கூட்டுப் பொறிமுறை?

அடுத்த ஜெனிவாக் கூட்டத் தொடரையொட்டி தமிழ் அரசியல் வட்டாரங்கள் வழமைக்கு மாறாக முன்கூட்டியே நொதிக்கத் தொடக்கி விட்டன. வழமையாக பெப்ரவரி மாதமளவிற்தான் நாட்டில் ஜெனிவாவை நோக்கிய ஒரு நொதிப்புண்டாகும். ஆனால் இம்முறை சற்று முன்னதாகவே அது தொடங்கிவிட்டது. அதற்கு காரணங்களில் ஒன்று கடந்த மாதம் அமெரிக்க தமிழ் அமைப்பு ஒன்றினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மெய்நிகர் சந்திப்பில் சுமந்திரன் கூறிய “ரோல் ஓவர் பிரேரணை” என்ற சொற்பிரயோகம்தான். அச்சந்திப்பில் அடுத்த ஜெனிவாக் கூட்டத்தொடரையொட்டிக் கருத்துக் கூறும்போது அவர் அந்த வார்த்தையைப் பிரயோகித்தார். அதன்படி ஏற்கனவே உள்ள ...

Read More »

மாவனல்லையில் வெடிபொருட்கள் மாயம்

மாவனல்லையில் கல்குவாரியொன்றிலிருந்து பெருமளவு வெடிமருந்துகள்காணாமல்போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. மாவனல்ல மோலியகொடையில் உள்ள கல்குவாரியொன்றின் உரிமையாளர் 23ம திகதி தனது குவாhயிலிருந்து வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளதாக காவல் துறையிடம்  முறைப்பாடு செய்துள்ளார். இதனை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. சிஐடியினர் இது குறித்த விசாரணைகளை ஆரம்பிததுள்ளனா என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரியொருவர் 15 கிலோகிராம் அமோனியம் நைட்டிரேட் வெடிக்கவைக்கும் கருவிகள் காணாமல்போயுள்ளதாக தெரிவித்துள்ளார். இனந்தெரியாத நபர்கள் சில வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அறையை உடைத்து அதனை கொண்டு சென்றுள்ளனர் எனகாவல் துறை  அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சுமார் ...

Read More »

வரலாறு நன்மையானதோ தீமையானதோ அவை ஆவணமயப்படுத்தப்பட வேண்டும்

“எமது வரலாறுகள் நன்மையானதோ தீமையானதோ அனைத்தும் ஆவணமயப்படுத்தப்பட வேண்டும் என்பது அத்தியாவசியமாகின்றது. முன்னர் தான் நாம் எமது சரித்திரங்களை எழுதிவைக்கவில்லை. தொடர்ந்தும் அவ்வாறு வாளாதிருப்பது எமக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தும்” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். “அழிக்கப்படும் சாட்சியங்கள்” நூல் வெளியீடு யாழ் பொது நூலக மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்ற போது நிகழ்த்திய உரையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் முக்கியமாகக் கூறியவை வருமாறு; “இந்த நாட்டின் வடக்கு கிழக்கு ...

Read More »

ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிகவும் வலுவானது அல்ல: ஸ்ரீகாந்த்

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மிகப்பெரிய அளவில் ஸ்மித், டேவிட் வார்னரை நம்பியே இருக்கிறது என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை இந்தியாவின் பந்து வீச்சு அசைத்துவிடுமா? என்பதுதான் பேச்சு பொருளாக இருந்தது. ஆனால், அடிலெய்டு டெஸ்டில் இந்தியா 244 ரன்கள் எடுத்தபோது, ஆஸ்திரேலியா 191 ரன்னில் சுருண்டது. மெல்போர்ன் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இருந்தாலும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிகவும் வலுவானது எனக்கூற முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீகாந்த் ...

Read More »