மாவனல்லையில் கல்குவாரியொன்றிலிருந்து பெருமளவு வெடிமருந்துகள்காணாமல்போனமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
மாவனல்ல மோலியகொடையில் உள்ள கல்குவாரியொன்றின் உரிமையாளர் 23ம திகதி தனது குவாhயிலிருந்து வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளதாக காவல் துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. சிஐடியினர் இது குறித்த விசாரணைகளை ஆரம்பிததுள்ளனா என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரியொருவர் 15 கிலோகிராம் அமோனியம் நைட்டிரேட் வெடிக்கவைக்கும் கருவிகள் காணாமல்போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இனந்தெரியாத நபர்கள் சில வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அறையை உடைத்து அதனை கொண்டு சென்றுள்ளனர் எனகாவல் துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 300 பேரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக காவல் துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal