மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தனின் வீட்டிற்கு அவரை கைதுசெய்ய இரவில் சென்ற காவல் துறை அவர் இல்லாததால் குடும்பத்தினரை அச்சுறுத்தி சென்றுள்ளனர். நேற்று இரவு 9.10 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுதந்திர ஊடகவியலாளருமாகிய செல்வக்குமார் நிலாந்தன் வீட்டிற்கு சிவில் உடையில் சென்ற ஏறாவூர் காவல் துறை அவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர். ஊடகவியலாளர் வீட்டில் இல்லாத காரணத்தால் வீட்டாரை அச்சுறுத்திய தோடு ஊடகவியலாளர் செல்வக்குமார் நிலாந்தனை நாளை காலை 9 ...
Read More »செய்திமுரசு
சிறிலங்கா விமானப் படை Y-12 ரக விமானம் வீழ்ந்து நொருங்கியது!
விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று ஹப்புத்தளை பகுதியில் வீழ்ந்து நொருங்கிய விபத்துக்குள்ளாகியமை தொடர்பில் ஆராய விமானப் படைத் தளபதியின் அறிவுத்தலின் கீழ் சிறப்பு குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா விமானப் படைக்கு சொந்தமான Y-12 ரகத்தைச் சேர்ந்த சிறிய விமானம் வீரவிலவிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப் படைப் பேச்சாளர் கெப்டன் கிஹான் செனெவிரட்ன தெரிவித்தார். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்து ஹப்புத்தளை வைத்தியசாலையில் ...
Read More »ஆஸி. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு; தந்தையின் துணிச்சலுக்காக மகனுக்கு பதக்கம் அணிவித்து கெளரவிப்பு!
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தத்தையடுத்து, அவரது 18 மாதம் நிரம்பிய மகனுக்கு தந்தையின் துணிச்சலுக்காக பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஜெஃப்ரி கிட்டன் என்ற 32 வயதான அவுஸ்திரேலியாவின் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கடந்த 19 ஆம் திகதி அன்று காட்டுத் தீயை அணைப்பதற்காக போராடியபோது மரம் விழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த நிலையில் கிட்டனின் உயிர்த் தியாகத்தை கெளரவப்படுத்தும் வகையில், அவரது இறுதி நிகழ்வில் கிட்டனின் ஒன்றரை வயது மகன் ஹார்வே கிட்டனுக்கு உயரிய கெளரவ ...
Read More »மாணவர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்குமா?
திருமலை மாணவர் ஐவர் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 13 படையினரும் குற்றமற்றவர்கள், குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லையென்ற கோதாவில் கடந்த 2019 ஜுலை மாதம் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். சுமார் 13 வருடங்களுக்குப் பிறகு இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. திருமலை பிரதான நீதவான் இத்தீர்ப்பை 2019 ஆம் ஆண்டு ஜுலையில் வழங்கியிருந்தார். பீனல் கோட்டின் 154 மற்றும் 153 ஆம் பிரிவுகளின் கீழ் இவ்வழக்கினை தொடர்ந்து நடத்துவதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி குறித்த சந்தேக நபர்களை குற்றமற்றவர்களென நீதவான் விடுதலை செய்துள்ளார். ...
Read More »அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் 2020 ஆம் ஆண்டின் தெரிவு!
2020 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான விமானம் என்ற பெருமையை அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேய்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பெற்றுள்ளது. AirlineRatings.com என்ற இணையத்தளம் உலகெங்கிலும் உள்ள 450 விமானங்களை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே குவாண்டாசு ஏர்வேய்சு லிமிட்டெட் நிறுவனம் 2020 ஆம் ஆண்டின் பாதுகாப்பான விமானமாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் குவாண்டாஸ் ஏர்வேய்ஸ் லிமிட்டெட் நிறுவனம் கடந்த 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் தொடர்ச்சியாக நான்கு முறையும் 2019 ஆம் ஆண்டும் உலகின் பாதுகாப்பான விமானமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் AirlineRatings.com என்ற ...
Read More »ஆஸ்திரியாவில் ஆடம்பர வாழ்க்கை- இந்திய தூதரை திரும்ப அழைத்தது மத்திய அரசு!
ஆஸ்திரியாவில் ரூ.15 லட்சத்தை மாத வீட்டு வாடகைக்கு செலவு செய்த இந்திய பெண் தூதரை மத்திய அரசு திரும்ப அழைத்தது. ஆஸ்திரியா நாட்டுக்கான இந்திய தூதராக ரேணு பால் பணியாற்றி வந்தார்.1988-ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ். அதிகாரியான இவரது பணிக்காலம் அடுத்த மாதம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் ரேணுபால் மீது அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியது, நிதி முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் விசாரணை நடத்தியது. இதில் ரேணுபால் ஆஸ்திரியாவில் ரூ.15 லட்சத்தை மாத வீட்டு வாடகைக்கு ...
Read More »இம் மாதம் சீனாவுக்கு புறப்படும் கோத்தாபய ராஜபக்ஷ!
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இம் மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். பெரும்பாலும் இம் மாதத்தின் இரண்டாம் வாரம் அளவில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, அவர் மேற்கொள்ளும் இரண்டாவது விஜயமாக இது அமைந்துள்ளது. கடந்த மாதம் சீனத் தூதுவர் மூலம் சீனாவுக்கு வருமாறு அந் நாட்டு ஜனாதிபதி ஜின்பிங் விடுத்த அழைப்புக்கு இணங்கவே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது ...
Read More »ரூமி மொஹமட்டுக்கு பிணை வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு!
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டுக்கு பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுடன் இணைந்து சர்ச்சைக்குரிய ஊடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வேன் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பான தகவலை வெளிப்படுத்திய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள முதலிரண்டு சந்தேக நபர்களுக்கும், அச் சந்திப்பில் கலந்துகொள்ள தலா 10 இலட்சம் ரூபா வீதம் 20 இலட்சம் ...
Read More »மீண்டும் அணுஆயுத சோதனை- வடகொரியா
அணுஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்க இருப்பதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.உலகின் இரு எதிர்எதிர் துருவங்களாக விளங்கி வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் முதல் முறையாக சந்தித்து பேசினர். வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உள்பட அனைத்து வகையான அணுஆயுத சோதனைகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்காவுக்கு வடகொரியா வாக்குறுதி அளித்தது. அதன்படியே வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்தியது. இதற்கு பிரதிபலனாக தங்கள் நாட்டின் மீது ...
Read More »தமிழில் தேசிய கீதம் பாடப்படாதென்பது நாட்டில் இன நல்லிணக்கம், ஐக்கியத்தை ஏற்படுத்த தடைக்கல்லாக அமையும்
தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது என்ற பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் அறிவித்தல் அரசியல் அரங்கில் பெரும் வாதப் பிரதிவாதங்களையும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் உருவாக்கி உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டின் தேசிய கீதத்தை, அந்த நாட்டின் குடிமக்களாகிய மற்றுமோர் இனத்தவர் தமது மொழியில் பாடக்கூடாது. அவ்வாறு பாடப்படமாட்டாது. அதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஓர் அமைச்சர் அறிவித்திருப்பது ஓர் அரசியல் கேலிக் கூத்தாகவே நோக்கப்பட வேண்டும். ஏனெனில் தேசிய கீதம் என்பது பொதுவானது. நாட்டின் அனைத்து மக்களுக்கும் உரியது. அனைத்து மக்களும் சொந்தம் கொண்டாடப்பட ...
Read More »