வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளதுடன் முதலாம் திகதியான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் மூன்று மாதங்களுக்கு அவர் இந்த விடுப்பைக் கோரியுள்ளார். அத்துடன், ஆளுநரின் பணிகளை ஒழுங்குபடுத்தி நிர்வாகத்தை முன்னெடுக்க வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் ஆகியோரைக் கொண்ட குழுவை அனுமதிக்குமாறும் ஆளுநர் தனது கடிதத்தில் கேட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேறொரு ...
Read More »செய்திமுரசு
வடகொரியா தலைவர் கிம் நிற்கவோ, நடக்கவோ முடியாமல் உள்ளார்!
வடகொரியா தலைவர் கிம் உயிருடன் இருப்பதாகவும், அவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தே யோங் ஹோ தெரிவித்துள்ளார். வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், கடந்த 11-ந் திகதிக்கு பிறகு வெளியுலகத்துக்கு வராத நிலையில், இதய அறுவை சிகிச்சையை தொடர்ந்து, அவர் இறந்துவிட்டார் என்றும், கோமா நிலையில் இருக்கிறார் என்றும் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அண்டை நாடான தென்கொரியா இந்த செய்திகளை மறுப்பதோடு, கிம் நலமாக இருப்பதாக தொடர்ந்து கூறிவருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ...
Read More »ஆஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத மந்திரி ராஜினாமா
ஆஸ்திரேலியாவில் அரசு பிறப்பித்திருந்த சமூக இடைவெளியை பின்பற்றாத டிரேவர் வாட்ஸ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு இலாகாவின் நிழல் மந்திரியாக பதவி வகித்து வந்தவர் டிரேவர் வாட்ஸ். (பிரதான எதிர்க்கட்சி உறுப்பினருக்கு வழங்கப்படும் மந்திரி அந்தஸ்து நிழல் மந்திரி எனப்படும்) இவர், தேசிய விடுதலை கட்சியை சேர்ந்தவர். டிரேவர் வாட்ஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சட்டமன்ற தொகுதியான வடக்கு டூம்பாவோ நகரின் விரைவு வழிச்சாலையில் போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். ...
Read More »அவுஸ்திரேலிய – சிறிலங்கா பாதுகாப்புக் கூட்டிணைவு
அவுஸ்திரேலியாவினால் வழங்கப்படும் தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) தொகுதி ஒன்று, சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி மற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் குரூப்கப்டன் ஷோன் அன் வின் ஆகியோரினால், சிறிலங்காவில் கோவிட் 19 ஐ தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கையளிக்கப்பட்டது. இந்தக் கையளிப்பு வைபவத்தின் போது கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஹொலி, ´உலக மட்டத்தில் சவாலை ஏற்படுத்தியுள்ள கோவிட் 19 இன் சர்ச்சை எதிர்நோக்கப்படு ...
Read More »கோவிட் 19 தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம்…..
கோவிட் 19 தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் இலங்கை அரசாங்கத்திடம் பகிரங்கமாக எட்டுக் கேள்விகளை தொடுத்துள்ளது இது தொடர்பில் தமிழ் சிவில் சமூகத்தின் இணைப் பேச்சாளர்களான கலாநிதி. குமராரவடிவேல் குருபரன் மற்றும் அருட்பணி வீ. யோகேஸ்வரன் ஆகியோரால் இன்று (29.04.2020) வெளியிடப்பட்ட கேள்விகள் அடங்கிய அறிக்கை வருமாறு, ஒரு பொது சுகாதார அபாயக் காலப் பகுதியில் அவ்வபாயத்தை எதிர்கொள்வது தொடர்பில் பொதுத் தொடர்பாடல்; (public communication) வெளிப்படையாகவும் (transparent) உண்மையாகவும் (accurate) இருத்தல் வேண்டும். பேரிடர் காலங்களில் அரசாங்கம் சொல்வதையும் செய்வதையும் குடிமக்களும் ...
Read More »அரசியலையும் கொரோனா குதறிக் கொண்டிருக்கின்றது!
மக்களை மட்டுமல்லாமல் நாட்டில் அரசியலையும் கொரோனா குதறிக் கொண்டிருக்கின்றது. அந்தக் குதறலில் பொதுத் தேர்தலை நடத்த முடியாமல் தேர்தல் ஆணையகம் தடுமாறுகின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன. அவற்றை எதிர்கொண்டு செயற்ட வேண்டியுள்ளது. ஆகவே கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஒரு வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களையடுத்து, அவசர நிலைக்குச் சென்று மீண்டிருந்த நாட்டில் மீண்டும் அவசரகால நிலைமை உருவாகியிருக்கின்றது எல்லோரையும் கொன்றொழிக்கப் போகிறேன் என்று கொரோனா ...
Read More »மாமனிதர் தராகியின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்!
கடந்த ;28 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராம் (மாமனிதர் தராகி) அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியாவில் ஆயிரத்து நூற்று ஐம்பது நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். ஏ9 வீதிக்கு அருகே அமையப்பெற்றுள்ள தமது போராட்டப் பந்தலில் இன்று (29.04) புதன்கிழமை 1167 ஆவது ...
Read More »சீனாவினால் இன்று 184 நாடுகள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றன: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆவேசம்
சீனாவின் வூஹானில் தோன்றிய கரோனா வைரஸ் அந்த நாட்டில் தொடங்கி இன்று 190 நாடுகளை ஆட்டிப்படைப்பதில் பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 115 ஆக உள்ளது, இதில் பலியானோர் எண்ணிக்கை 2,17,970 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனா மீது உலக நாடுகள் அனைத்திற்கும் பெரிய அளவில் கோபாவேசம் கிளம்பியுள்ளது, இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விசாரணை அளவுக்குச் சென்று விட்டார், மேலும் பல நடவடிக்கைகளை சீனா மீது எடுக்குமாறு ட்ரம்புக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்க எம்.பி.க்கள் பலர் சீனாவை நம்பியிருக்கும் ...
Read More »காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே மரணங்கள்: மனமுடைந்த நியூயார்க் பெண் மருத்துவர் தற்கொலை!
நியூயார்க் பிரெஸ்பைடீரியன் மருத்துவமனையின் கரோனா அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய டாக்டர் லோர்னா பிரீன் என்ற பெண் மருத்துவர் கண்ணெதிரே கரோனா பாதிப்பினால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறன்றி அவர் தன் முடிவைத் தானே தேடிக்கொண்டார் என்ரு லோர்னா பிரீனின் தந்தை டாக்டர் திலீப் பிரீன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார். அமெரிக்க கரோனா பலி எண்ணிக்கை 59,000த்தைக் கடந்துள்ள நிலையில் நியூயார்க்கில் மட்டும் 17,500 பேர் கரோனாவுக்குப் ...
Read More »சிறிலங்காவின் ஊரடங்கு நிலவரம்!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த 21 மாவட்டங்களிலும் நேற்றிரவு இரவு 8 மணிக்கு மீள ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. நாடு முழுவதிலும் நேற்றைய தினம் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், அந்த மாவட்டங்களில் எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிவரை நாளாந்தம் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ...
Read More »