செய்திமுரசு

மிட்செல் ஸ்டார்க் , டேல் ஸ்டெயின் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் – அவுஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடிவீரர் கில்கிறிஸ்ட்

மிட்செல் ஸ்டார்க் மற்றும் டேல் ஸ்டெயின் ஆகியோர்கள் தான் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்று அவுஸ்திரேலியாவின் முன்னாள் அதிரடிவீரர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தொடக்க ஆட்டக்காரராகவும் விளங்கிய கில்கிறிஸ்ட், அவர் விளையாடும் போது அதிரடியால் எதிரணிக்கு பயம் காட்டுவார். இவருக்கு பந்துவீச வேண்டும் என்றால் உலக பந்துவீச்சாளர்கள் அனைவருக்கும் சற்று நடுக்கம் ஏற்பட தான் செய்யும். இந்நிலையில் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நீண்ட வருடங்களாக தொடர்ச்சியாக சிறந்த வகையில் பந்து வீசி வரும் டேல் ஸ்டெயின் ...

Read More »

முதலமைச்சருக்கு எதிராக மீண்டும் சதித்திட்டம் போடும் சிவமோகன்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக சதித்திட்ட நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஈடுபட்டுள்ளார். முல்லைத்தீவு மாற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகங்களுக்கு சில மக்களை அழைத்து வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக போராட்டம் ஒன்றினை நடத்தை முடிவு செய்துள்ளார்.

Read More »

ரஷ்யா பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு

ரஷ்யாவில் பாராளுமன்ற கீழ் சபை தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் அதிபர் விளாதிமிர் புதின் ஆதரவு கட்சி வெற்றி பெறும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. ரஷியா நாட்டில் 450 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ்சபை இயங்கி வருகிறது. ‘டுமா’ என்றழைக்கப்படும் இந்த கீழ்சபைக்கு நேற்று(18-ம் தேதி) தேர்தல் நடைபெற்றது. 2011-ம் ஆண்டு புதினுக்கு எதிராக தலைநகர் மாஸ்கோவில் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்ற பிறகு நடைபெற்ற முதல் சுதந்திரமான தேர்தல் இது தான். சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை ...

Read More »

தமிழீழம்- அவுஸ்திரேலிய புள்ளி விபரத்திணைக்களம் நீக்கியது சட்டவிரோதமானது

தமிழீழம் என்ற தனியான பிரிவு நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்து தமிழரல்லாத சாரா றோஸ் என்ற பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இலத்திரனியல் கருத்துக் கணிப்பில் தமிழ் ஈழம் பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. பிறந்தநாடு என்ற கேள்விக்கு தமிழீழம் என குறிப்பிடுவதற்கு அவுஸ்திரேலிய புள்ளி விபரத்திணைக்களம் வழிவகை செய்திருந்தது. எனினும், இலங்கை அரசாங்கத்தின் நேரடி தலையீட்டை அடுத்து தமிழீழம் என்ற அந்த ...

Read More »

ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை-காணொளி எடுக்க ஏற்பாடு

புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று(19) நடைபெறும் பிரேத பரிசோதனையை காணொளி  எடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. சுவாதி கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று(18) சிறையில் உள்ள மின்சார வயரை கடித்ததால் மின்சாரம் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த வைத்தியர்கள், ராம்குமார் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே ...

Read More »

கே.பியை சிவப்பு அறிக்கையின்றி கைது செய்ய முடியாது-இன்டர்போல்

விடுதலைப் புலிகளின் உறுப்பினரான குமரன் பத்மநாதனை கைது செய்ய வேண்டுமாயின் இலங்கை, சர்வதேச இன்டர்போல் பொலிஸாரிற்கு சிவப்பு அறிக்கை அனுப்ப தீர்மானிக்க வேண்டும் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஆங்கில ஊடகம், இன்டர்போல் அலுவலகத்திடம் தொடர்பு கொண்ட போது, எந்த நாட்டிலும் உள்ள ஒரு தனி நபரை கைது செய்ய வேண்டுமாயின் முதலில் சிவப்பு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கு தொடர்பாக இந்தியாவினால் கே.பி தேடப்பட்டு வருகின்றார். ...

Read More »

கிளிநொச்சியில் மாபெரும் கூட்டுப் புதைகுழி

கிளிநொச்சியில் மாபெரும் கூட்டுப் புதைகுழியொன்றின் அமைவிடம் குறித்த தகவல்களை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு தொடர்பில் மல்வத்து மகாநாயக்க தேரருக்கு விளக்கமளிப்பதற்காக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அண்மையில் தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது புதிய அரசியலமைப்பின் ஊடாக போர்க்குற்றங்கள் தொடர்பில் தண்டனை வழங்கும் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு, இராணுவத்தினர் தண்டிக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்ட இராணுவ முகாம் ஒன்று அமைந்திருந்த இடத்தில் பாரிய கூட்டுப் புதைகுழியொன்று ...

Read More »

உடுவில் மகளிர் கல்லூரியின்அதிபர் மாற்றம் ஒர் அலசல்

உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபராக கடந்த 12 வருடங்களாகச் பணியாற்றிக்கொண்டிருந்த திருமதி ஷிராணி மில்ஸ்க்கு திடீர் ஒய்வினை வழங்கவதையிட்டு மாணவிகள்  ஆர்பாட்டம், உண்ணாநோன்பு ஆகியவற்றில் ஈடுபட்டனர். மாற்றத்திற்க்கு தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் டானியல் தியாகராஜாவின் தலையீடு தொடர்பாக ஆசிரியர்கள் , மாணவிகள் ,பெற்றோர், நலன் விரும்பிகள்,ஊடகவியலாளர், பேராயர் …போன்றோரிடம் அலசிய பல்வேறு கருத்துக்களை ஒஸ்ரேலிய வானிசை வானொலியின்  செய்தி பெட்டகத்தில் ஒலிபரப்பானது . இதில் இணைக்கபட்டுள்ளது. https://archive.org/details/UduvilProtest

Read More »

‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு ஈபிடிபி ஆதரவாம்!

‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு தமது தார்மீக ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் இம்மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் வரையில் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. இந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தார்மீக ஆதரவை வழங்கி ...

Read More »

புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்க நாடக ஆசிரியர் எட்வர்ட் எல்பி காலமானார்

எழுத்து துறைக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய ‘புலிட்சர்’ பரிசை மூன்றுமுறை பெற்ற ஆங்கில நாடக ஆசிரியரான எட்வர்ட் எல்பி தனது 88-வது வயதில் அமெரிக்காவின் நியூயர்க் நகரில் காலமானார். சிறுவயது முதல் கற்பனை வளம்மிக்கவராக இருந்த எட்வர்ட் எல்பி நாவல் மற்றும் கவிதை துறையில் தன்னால் பெரிதாக ஜொலிக்க இயலாது என்று சுயமதிப்பீடு செய்து பின்னர் 1950-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்க மேடை நாடகத்துறைக்குள் அடியெடுத்து வைத்தார். ’ஹூ இஸ் அப்ரெய்ட் ஆப் விர்ஜினியா உல்ப்’ (Who’s Afraid of Virginia Woolf?) என்ற ...

Read More »