நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதனை விடுத்து பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் எமது மக்களை நாமே அழிப்பதாக அமையுமென அவர் மேலும் குறிப்பிட்டார். வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய நீதியரசர் பேசுகிறார் என்ற தலைப்பிலான புத்தகம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசம் உதவியதாகவும், ...
Read More »செய்திமுரசு
சாந்தபுரத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு தேடுதல்!
வெடிபொருட்கள் மற்றும் புலிகளின் சீருடை என்பவற்றுடன் ஓருவர் கைதாகி இருந்த நிலையில் இருவர் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டது பின்னர் தப்பித்து சென்றவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இருப்பினும் மற்றயவரை காவல் துறை மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் தேடி வந்த நிலையில் நேற்று இரவு பத்து மணியளவில் பிரதான சந்தேக நபராக தெரிவிக்கப்படும் கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் வன்னிவேளாங்குளம் பகுதியில் வைத்து காவல் துறை கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கிளிநொச்சி சாந்தபுரம் பகுதிக்கு பொலிசார் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் அழைத்து ...
Read More »அமெரிக்காவின் விலகல் சாதகமா பாதகமா?
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறும் விடயத்தில் இந்த வாரம் சர்வதேச அளவில் ஒரு தளம்பல் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்திருப்பதையடுத்தே சர்வதேச அளவிலான இந்த சோர்வு நிலைமை உருவாகியிருக்கின்றது. இது அரசுக்கு சாதகமானது. இதனை அரச தரப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தியிருக்கின்றார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு இது பாதகமானது. ஆபத்தானதும் கூட. பொறுப்புக்கூறும் ...
Read More »இங்கிலாந்து – அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி!
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. மென்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கனும், அவுஸ்ரேலிய அணிக்கு டிம் பெய்னும் தலைமை தாங்கவுள்ளனர். ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி, வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ஆகையால் இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று அவுஸ்ரேலிய அணியை வயிட் வோஷ் செய்யும் முனைப்பில் இங்கிலாந்து உள்ளது. இதேவேளை, அவுஸ்ரேலிய அணி, ஒருபோட்டியிலாவது வெற்றிபெற வேண்டுமென்ற ஆறுதல் வெற்றியை நோக்கி இன்று களமிறங்கும். எதுஎவ்வாறாயினும் இப்போட்டி ...
Read More »வடகொரியா விவகாரத்தில் டிரம்ப் இரட்டை வேடம்!
வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த 12-ந் திகதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பு நடந்த மறுநாளில் டிரம்ப், வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தார். இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை. இன்று ...
Read More »புகலிடம் கோருவோரை ஏற்க முடியாது! – அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் அதிகளவிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் தஞ்சம் பெறும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலியாவின் லிபரல் கட்சி உறுப்பினர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார். தி ஒஸ்ட்ரேலியன் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 5 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுக்க முடியாமல் இருக்கும் நிலையினை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே இதனை தடுப்பதற்குரிய நடவடிக்கையினை அவுஸ்திரேலியா எடுக்கத் தவறுமாயின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையினையும் விடுத்துள்ளார்.
Read More »எமக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை! – இரா. சம்பந்தன்
பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் எமக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை. உண்மையான அர்ப்பணிப்பும் அரசியல் உத்வேகமும் இருந்தால் கடந்த காலங்களில் செய்ய தவறியவற்றினை இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். சிறிலங்கா வந்துள்ள நோர்வேயின் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் ஜென் ப்ரோலிச் க்கும் எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவிற்குமிடையில்நாடாளுமன்றிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச் சந்திப்பின்போது நோர்வேயின் இராஜாங்க செயலாளரின் ...
Read More »தென் கொரிய கிம் ஜாங் பில் மரணம்!
தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் 92 வயதில் முதுமை சார்ந்த உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளார். தென் கொரியாவில் 1971-ம் ஆண்டு முதல் 1975-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் கிம் ஜாங் பில் (வயது 92). அதிகார பகிர்வு திட்டத்தின் கீழ் கடந்த 1998ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். பிரதமராக இருந்தபோது, நாட்டின் உளவு பிரிவை உருவாக்கி அதற்கு தலைமையேற்றார். 1961ல் ராணுவ தளபதி பார்க் தலைமையில் புரட்சி ஏற்பட்டு ஆட்சி கவிழ்ந்த ...
Read More »நந்திக்கடலும் நாயாறு நீரேரியும் திட்டமிட்டு ஆக்கிரப்பு!
முல்லைத்தீவு மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடிக்குரிய நந்திக்கடல் மற்றும் நாயாறு நீரேரிகள் என்பன முழுமையாக வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளன. சுமார் 21 ஆயிரத்து 265 ஏக்கர் நிலப் பரப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தால் இயற்கை ஒதுக்கிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை ஒதுக்கிடமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தினுள் மனிதர்கள் பிரவேசிப்பது குற்றமாகும். இரண்டு நீரேரிகளிலும் தொழில் நடவ டிக்கையில் ஈடுபட்டிருந்த சுமார் 9 ஆயி ரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான நிலப் பரப்புக்களை உள்ளடக்கிய அரசிதழ் அறிவித்தல் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ...
Read More »கல்லூரி பேராசிரியை ஆகவேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு!
ஒரு பேராசிரியையின் கதை “கல்லூரி பேராசிரியை ஆகவேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. சிறு வயதில் என் பள்ளி ஆசிரியயையிடம் இருந்து நான் பெற்ற அந்த கனவும், ஈர்ப்பும் வாழ்நாளில் எந்த தருணத்திலும் குறைந்துவிடவில்லை. பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த போது, பலரும் என்ஜினியரிங் சேர சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், என் கனவு மீது நம்பிக்கை கொண்டிருந்த என் அப்பா தான் மற்றவர் பேச்சை எல்லாம் கேட்காமல் நான் ஆசிரியர் பணியில் சேர ஊக்கம் அளித்தார். எனக்கு சட்டம் மீது ...
Read More »