முன்னாள் பிரதமருடன் சேர்ந்து அரசு பணத்தை கொள்ளையடித்து, மலேசிய உயர் அதிகாரிகள் மாபெரும் ஊழலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் கடந்த மே மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், 60 ஆண்டுகளாக அந்த நாட்டை ஆட்சி செய்து வந்த பேரிசன் நேஷனல் கூட்டணி (பி.என்.) அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது. பிரதமராக இருந்து வந்த நஜிப் ரசாக் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசு பணத்தை பெருமளவில் கொள்ளையடித்து விட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக அரசின் 1 எம்.டி.எப். என்னும் மலேசிய வளர்ச்சி பெர்ஹாட் ...
Read More »செய்திமுரசு
ஆஸ்திரேலிய ஆவியோடு திருமணம்!
பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தொலைக்காட்சியில் வெளியிட்ட கருத்து, பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. என்ற 30 வயதுடைய பெண் ஒருவர், அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில், தான் இதுவரை 20 ஆவிகளுடன் உறவு கொண்டதாவும், அதில் அவுஸ்திரேலியாவில் சமீபத்தில் சந்தித்த ஆவியைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும், திடுக்கிடும் அதிர்ச்சி தகவலை அசால்ட்டா தெரிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.இவரது இந்த பேய்க் கதை நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் பலத்த அதிர்ச்சி. amethyst Realm குறித்த பேட்டி நிகழ்ச்சியில் மிகவும் சர்வ சாதாரணமாக பேசுவதும், ...
Read More »ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு!
ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது என தெண்டுல்கர் கூறியுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மும்பையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கடந்த கால ஆஸ்திரேலிய அணியையும் தற்போதுள்ள அணியையும் பார்த்தால் இந்தியாவுக்கே வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் அவர்கள் (ஆஸ்திரேலியா) உயர்ந்த நிலையில் இருந்தனர். அனுபவமிக்க வீரர்கள் இருந்தனர். ஆனால் தற்போது அனுபவம் குறைந்த வீரர்கள் ...
Read More »திட்டமிட்ட திடீர் அரசியல் திருப்பம்!
இலங்கை அரசியலில் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஒரு முக்கியமான வரலாற்று தினமாகப் பதிவாகியிருக்கின்றது. வரலாற்று தினம் என்பதிலும் பார்க்க ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்கிய ஒரு கரிநாளாகவும் அது கருதப்படலாம். அன்றைய தினம்தான், எவருமே எதிர்பார்த்திராத வகையில் திடீரென, அதிர்ச்சியளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டின் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டார். அந்த சம்பவத்துடன் சூட்டோடு சூடாக ரணில் விக்கிரமசிங்கவை, அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உடனடியாக பதவி நீக்கம் செய்துள்ளார் என்ற ...
Read More »கட்சி தாவுவதற்கு எவ்வளவு தொகை தெரியுமா ?
கட்சி தாவுவதற்கு தற்போது பேரங்கள் பேசப்பட்டு வருகின்ற நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பட்டாரவுக்கும் பேரம் பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தன்னிடம் பேரம் பேசப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார. கட்சி தாவுவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது இலங்கை ரூபாவின் மதிப்பில் 48 கோடி ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுபப்பினர் ரங்கே பண்டார சபாநாயகர் கருஜயசூரியவிடம் இன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ...
Read More »13 வருடங்களின் பின் விடுதலையான அரசியல் கைதி!
லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதன் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சியினால் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டார். 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தை சோ்ந்த தற்பொழுது மரணமடைந்துள்ளவர்களான வேலுப்பிள்ளை பிரபாகரன், பொட்டுஅம்மான் அல்லது சிவசங்கர் வினோதன் அல்லது சாள்ஸ் மாஸ்டர், கோமதி மதிமேகலாஆகியோருடன் இணைந்து சதி செய்து முன்னாள் வெளிவிவகார அமைச்சா லக்ஸ்மன் கதிர்காமரை கொலை செய்தமைக்கு உடந்தையாக செய்ற்பட்டதாக பயங்கரவாதச் தடைச்சட்டதின் கீழ் சகாதேவன், இசிதோர் ...
Read More »சீன அதிபருடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வர்த்தக விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பதும், பதிலுக்கு அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பதும் உலகளவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் தொடர்பு ...
Read More »தூதரகத்திற்குள் சென்றவுடன் கஷோக்ஜி கொல்லப்பட்டார்!
கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் திகதி சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, இஸ்தான்புல்லிலுள்ள துணைத் தூதரகத்துக்குள் நுழைந்த உடனேயே, அவரது கழுத்து நெரிக்கப்பட்டது என்று துருக்கி விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தக் கொலை முன்னரே திட்டமிடப்பட்டது என்றும், கஷோக்ஜி கொல்லப்பட்டதும் அவரது உடல் பல துண்டுகள் ஆக்கப்பட்டது என்றும் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொலை தொடர்பாக சௌதி அரேபிய அரசிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு இல்லாதது குறித்து துருக்கி அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர். கஷோக்ஜியின் உடல் எச்சங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் ...
Read More »துமிந்த – பசில் சந்தித்து பேசியது என்ன?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று முற்பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள துமிந்த திஸாநாயக்கவின் இல்லத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் இரு மணி நேரம் நீடித்த இச் சந்திப்பில் எந்த இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டதாக தெரியவில்லை என்றும் அரசியல் தகவல்கள் தெரிவித்தன. இச் சந்திப்பின்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கிடையே உருவாகியுள்ள சிக்கல்கள் மற்றும் அதனைத் தீர்த்துக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் விசேடமாக ...
Read More »பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பது நாடாளுமன்றமே!-
சிறிலங்கா தனது தலைமைத்துவத்தை தீர்மானிப்பதற்கு அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என அமெரிக்கா மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர்களில் ஒருவரான ரொபேர்ட் பலடினோ இதனை தெரிவித்துள்ளார். சிறிலங்கா தனது தலைமைத்துவத்தை தீர்மானிப்பதற்கு அவசியமான அரசமைப்பு நடைமுறைகள் குறித்தே அமெரிக்கா தற்போது கவனம் செலுத்தி வருகின்றது என ரொபேர்ட் பலடினோ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மீண்டும் நாங்கள் ஜனாதிபதியை சபாநாயகருடன் கலந்தாலோசித்து பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் அரசாங்கத்திற்கு யார் தலைமை தாங்கவேண்டும் என்பதை ...
Read More »