துமிந்த – பசில் சந்­தித்து பேசியது என்ன?

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய அமைப்­பாளர் துமிந்த திஸா­நா­யக்­க­வுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெர­முன தேசிய அமைப்­பாளர் பசில் ராஜ­ப­க்ஷ­வுக்கும் இடையில் நேற்று முற்­பகல் விசேட சந்­திப்­பொன்று இடம்­பெற்­றுள்­ளது.

கொழும்பில் உள்ள துமிந்த திஸா­நாயக்­கவின் இல்­லத்தில் இச் சந்­திப்பு இடம்­பெற்­ற­தா­கவும் இரு மணி நேரம் நீடித்த இச் சந்­திப்பில்  எந்த இணக்­கப்­பா­டு­களும் எட்­டப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை என்றும் அர­சியல் தக­வல்கள் தெரி­வித்­தன.

இச் சந்­திப்பின்போது,  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெர­முன ஆகிய­வற்­றுக்கிடையே உரு­வா­கி­யுள்ள சிக்­கல்கள் மற்றும் அதனைத் தீர்த்­துக்­கொள்ளும் வழிமுறைகள் தொடர்பில் விசேட­மாக ஆராயப்­பட்­டுள்­ளது.

புதிய அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தப்பட்­டதைத் தொடர்ந்து தான் மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கு கொடுக்­கப்­படும் சிக்­கல்களே அதற்கு க்காரணம் எனவும் துமிந்த திஸா­நா­யக்க இதன்­போது பசில் ராஜபக் ஷ­விடம் விளக்­கி­யுள்ளார்.

இச்  சிக்­கல்­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் தீர்க்க பசில் ராஜ­பக்ஷ நட­வ­டிக்கை எடுத்தால் உறு­தி­யான அரசாங்­கத்தை உரு­வா­க்­கு­வது தொடர்பில் தனது ஆத­ரவு குறித்து யோசிக்­கலாம் எனவும்  துமிந்த திஸா­நா­யக்க சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

குறித்த பிரச்­சி­னை­களைத் தீர்க்க தான் நேர­டி­யாக பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுடன் கதைத்து நட­வ­டிக்கை எடுப்­ப­தாக கூறி­யுள்ள  பசில் ராஜ­பக் ஷ, மஹிந்த அர­சாங்­கத்தில் அமைச்சுப் பொறுப்­பொன்­றை ஏற்­றுக்­கொள்­ளு­மாறும் அழைப்பு விடுத்­துள்ளார்.  எனினும் அமைச்சுப் பத­வியை ஏற்­பது  குறித்து, உறுதியான வாக்குறுதிகள் எதனையும் துமிந்த திஸாநாயக்க வழங்காத நில யில், பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.