பீட்சா, கத்தி திரைப்படங்களில் நடித்தவரும் தமிழ் மொழிப்பற்றாளருமான ஓவியர் வீரசந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று(13) மாலை காலமானார். பீட்சா, கத்தி திரைப்படங்களில் நடித்தவரும் தமிழ் மொழிப்பற்றாளருமான ஓவியர் வீரசந்தானம் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். தமிழ் மொழிப்பற்றாளரான வீரசந்தானம் சிறந்த ஓவியராக திகழ்ந்தார். ஈழத்தமிழர்களுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றுள்ளார். கடந்த ஆண்டு அவருக்கு உடல்நலத்தில் குறைபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பல மாதங்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்து, நோயிலிருந்து மீண்டு, வழக்கமான பணிகளை மேற்கொண்டார். ஆனால் நேற்று மாலை திடீரென்று உடல்நலக்குறைவு ...
Read More »செய்திமுரசு
பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்!
பப்புவா நியூ கினியாவின் ரபாயுல் நகரத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. தென் பசுபிக் நாடுகளில் ஒன்றான பப்புவா நியூ கினியாவின் ரபாயுல் நகரத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. நில நடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த நிலநடுக்கம் நியூ பிரிட்டன் தீவிற்கு 128 கி.மீ. கிழக்கில், ...
Read More »காணாமல்போனவர்களின் உறவுகளை உதாசீனம் செய்தார் ஐ.நா.பிரதிநிதி
வவுனியாவில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை, மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் தலைமையிலான குழு சந்திக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன், யூலை 10 தொடக்கம் 14ஆம் திகதிவரை இலங்கையில் விஷேட சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வீதியின் ...
Read More »அவுஸ்ரேலிய அணியிடம் இந்தியா தோல்வி!
பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவிடம் தோல்வி கண்டது. 8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன. இந்த ...
Read More »அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக 226 ரன்களை குவித்தது இந்தியா!
பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று(12) நடைபெற்ற ஆட்டத்தில், பூனம் ரவுத்தின் அதிரடி சதத்தால் இந்திய அணி, அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக 226 ரன்கள் குவித்துள்ளது. எட்டு அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில், இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள் மோதிய 23-வது லீக் போட்டி பிரிஸ்டலில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திலியா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக பூனம் ரவுத், மந்தனா களமிறங்கினர். மந்தனா 3 ரன் ...
Read More »மனுஸ் தீவு மூடும் பணி ஆரம்பம்!
அவுஸ்திரேலிய அரசால் நிர்வகிக்கப்படும் பப்புவா நியூகினியின் மனுஸ் தீவு, தடுப்பு முகாம் மூடப்பட்டுவரும் நிலையில் அங்குள்ள பல புகலிடக்கோரிக்கையாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பப்புவா நியூகினி தடுப்பு முகாமில் தஞ்சக்கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. நீதிமன்றின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் இந்த முகாம் மூடப்படவுள்ளது. இதன்படி Lombrum முகாம் தற்போது இடிக்கப்பட்டுவருகின்ற அதேவேளை அங்கிருந்தவர்கள் Lorengau-இலுள்ள தற்காலிக தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். ஆனால் Lorengau-இல் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அங்கு தஞ்சம் ...
Read More »அவுஸ்ரேலிய நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரிக்கப்போகும் நாடு?
அவுஸ்திரேலியா மற்றும் பிரான்சுக்கு இடையில் பல பில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த ஒப்பந்தம் ஒன்று ஜேர்மனியில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிதறது. ஹம்பேர்க் நகரில் முடிவுற்ற ஜி – 20 உச்சிமாநாட்டைத் தொடர்ந்தே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, அவுஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரான்ஸில் தயாரிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸில் உள்ள ஷேர்பொக் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. அங்கு நீர்மூழ்கிக் கப்பல் செயற்திட்டத்தை மேற்கொள்ளும் வகையில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளதாகவும் ...
Read More »பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா – அவுஸ்ரேலியா இன்று மோதல்
இங்கிலாந்தில் நடந்து வரும் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன. அரைஇறுதியின் ...
Read More »காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம்! -சம்மந்தன்
காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சிக்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்த அவர், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் 143 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், காணாமல் போனோர் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கின்ற போது சாதாரணமாக பேசுவதில்லை. மிகவும் கடுமையாகவே பேசுகின்றேன். ...
Read More »ஈழத்தமிழ் பொறியியலாளர் அவுஸ்திரேலியாவில் சாதனை!
மெல்பேர்ணை சேர்ந்த Shan Kumar அவர்கள் இவ்வாண்டுக்கான பொறியியல் துறையில் சிறப்புத்தகமை கொண்ட வல்லுநர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். The flagship publication of Engineers Australia, create magazine, is profiling Australia’s Most Innovative Engineers in its July edition. More than 200 engineers either nominated themselves or were nominated by peers for inclusion in the list. These entries were examined by a panel of judges and 30 engineers ...
Read More »