அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக 226 ரன்களை குவித்தது இந்தியா!

பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று(12)  நடைபெற்ற ஆட்டத்தில், பூனம் ரவுத்தின் அதிரடி சதத்தால் இந்திய அணி, அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக 226 ரன்கள் குவித்துள்ளது.

எட்டு அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில், இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள் மோதிய 23-வது லீக் போட்டி பிரிஸ்டலில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திலியா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

துவக்க வீரர்களாக பூனம் ரவுத், மந்தனா களமிறங்கினர். மந்தனா 3 ரன் எடுத்த நிலையில் அவரை ஆஷ்லிக் கார்ட்னெர் வெளியேற்றினார். அடுத்து மிதாலி ராஜ் – ரவுத்துடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 30 ஓவர் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்திருந்தது.

நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 41-வது ஓவரில் பிரிந்தது. மிதாலி ராஜ் 69 ரன்களில் (114 பந்து 4 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேறினார். அடுத்து ஹர்மன்பிரீத் கவுர், ரவுத்துடன் இணைந்தார். பொறுப்புடன் ஆடிய பூனம் ரவுத், 129 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவர் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கவுர் 23 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 226 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் மெகன் ஸ்கப், எலிஸ் பெர்ரி 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து அவுஸ்ரேலியா 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.