வவுனியாவில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை, மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் தலைமையிலான குழு சந்திக்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஜக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன், யூலை 10 தொடக்கம் 14ஆம் திகதிவரை இலங்கையில் விஷேட சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார்.
வவுனியாவில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகில் உள்ள வீதியின் மறுபுறத்தில் வாகனத்தை நிறுத்தி சுமார் 15 நிமிடங்கள் வரை அவ்விடத்தில் நின்றனர்.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகள் அவரை சந்திக்க முயன்றுள்ளனர். எனினும், அவர்களை சந்திக்க தற்போது நேரம் இல்லை என கூறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதியின் மொழிபெயர்ப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ஐ.நா பிரதிநிதிகள் உடனடியாக அவ்விடத்தில் இருந்து சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal