அவுஸ்திரேலியா மற்றும் பிரான்சுக்கு இடையில் பல பில்லியன் டொலர்கள் பெறுமதி வாய்ந்த ஒப்பந்தம் ஒன்று ஜேர்மனியில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிதறது.
ஹம்பேர்க் நகரில் முடிவுற்ற ஜி – 20 உச்சிமாநாட்டைத் தொடர்ந்தே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி, அவுஸ்திரேலிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரான்ஸில் தயாரிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் மல்க்கம் டர்ன்புல் ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸில் உள்ள ஷேர்பொக் நகருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
அங்கு நீர்மூழ்கிக் கப்பல் செயற்திட்டத்தை மேற்கொள்ளும் வகையில் புதிய அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.