அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வந்த விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர் பால் சந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 11-ம் திகதி தொடங்கின. இப்போட்டியின் இறுதி ஆட்டம் 16-ம் திகதி நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்துவும் முதல்நிலை வீரரான அவுஸ்ரேலியாவின் ரெக்ஸ் ஹெட்ரிக்ஸ்சும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டில் அவுஸ்ரேலிய வீரர் 14-12 என்ற புள்ளி கணக்கில் வெற்றி ...
Read More »செய்திமுரசு
அவுஸ்ரேலியா அருகே டோங்கா தீவில் மிதமான நிலநடுக்கம்
அவுஸ்ரேலியா (17) அருகே அமைந்துள்ள டோங்கோ தீவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அவுஸ்ரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு டோங்கா. இன்று அதிகாலை அந்த நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள நீடா என்ற இடத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி குலுங்கியதால் வீடுகளில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். சாலைகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. இது குறித்து வானிலைஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகையில், 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ...
Read More »நிரூபித்தால் பதவி விலகுவேன்!-சிறீதரன்
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் தொலைபேசி உரையாடல் ஒன்றில் உரையாடியதாக வெளியாகிய ஒலி வடிவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை நிராகரிக்கும் வகையில் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன். கிளிநொச்சி குணாவில் பகுதியில் நேற்று மலையக மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது சிவஞானம்சிறீதரனை கடுமையாக சாடிய மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் வாழ்ந்துவருகின்ற மக்கள், வன்செயலால் அனைத்தையும் இழந்து தாம் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் ...
Read More »அவுஸ்ரேலிய குடியுரிமையை இரத்துச் செய்த பாடுமீன் சிறிகந்தராசா!
அவுஸ்ரேலிய குடியுரிமையை இரத்துசெய்துவிட்டு கிழக்கு மாகாண தேர்தலில் பங்குகொண்டு அரசியல் பணி செய்யவுள்ளதாக அந்நாட்டில் 26 வருடங்களாக வாழ்ந்துவரும் சட்டத்தரணி பாடுமீன் சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழரசுக்கட்சியில் வேட்பாளர் நியமனம் வழங்கும்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதி மக்கள் கேட்டுள்ளதாகவும் ஆனால் அது ஏற்கப்படுமா என்பது தெரியவில்லை எனவும் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சமூகவலை தளம் ஊடாக பகிர்ந்துகொண்ட பதிவு வருமாறு: கடந்த 2014 இன் இறுதிப்பகுதியில் எனது சொந்த ஊரான களுவாஞ்சிகுடியில் உள்ள முக்கியமான பிரமுகர்கள் சிலர் என்னை ...
Read More »கையில் பொருத்தப்பட்ட கால் கட்டை விரல்!
காளை மாடு தாக்கி கை கட்டை விரலை இழந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் கட்டை விரல் கையில் பொருத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஸாக் மிட்செல் (20), இவர் கடந்த ஏப்ரலில் அங்குள்ள விவசாய நிலத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த காளை ஒன்று மிட்செலை தாக்கியுள்ளது. பின்னர் அவருடைய கையை வேலிக்குள் காளை எட்டி உதைத்துள்ளது. இதையடுத்து மிட்செலின் கை கட்டை விரல் துண்டானது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மிட்செலின் கை கட்டை விரலை காப்பாற்றும் முயற்சிகள் தோல்வியில் ...
Read More »காத்திரமான சில முடிவுகளை எட்ட தமிழரசு கட்சியுடன் பேச வேண்டியுள்ளது!
புதிய அரசியலமைப்பு முயற்சி தேக்க நிலையில் இருப்பதாலும், சமகால அரசியல் போக்கு தளம்பலாக இருப்பதாலும் காத்திரமான சில முடிவுகளை எட்ட தமிழரசு கட்சியுடன் பேச வேண்டியுள்ளது என்ற ரெலோவின் கடிதமானது, கூட்டமைப்பு என்பது பெயரளவில் மட்டுமேயானது என்பதையும் செயலளவில் எல்லாமே தமிழரசுக் கட்சிதான் என்பதையும் அர்த்தமாக்குகிறது. மழைவிட்டும் தூவானம் போகவில்லை என்றொரு பழமொழியுண்டு. ஆனால், தமிழ் கூட்டமைப்பு சம்பந்தப்பட்ட வடமாகாண சபையின் பிரச்சனையைப் பொறுத்தளவில், மழையைவிட தூவானமே புயலாக வீசுவதைக் காணமுடிகிறது. கடந்த மாதம் 14ம் திகதி வடமாகாண சபை அமைச்சர்கள் நீக்கம் மற்றும் ...
Read More »இரட்டை குடியுரிமையால் பதவியை இழந்த அரசியல்வாதி!
அவுஸ்ரேலியா நாட்டில் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளதற்கு எதிராக கிளம்பிய சர்ச்சையை தொடர்ந்து அரசியல்வாதி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கிரீன்ஸ் கட்சி சார்பாக நாடாளுமன்றத்தில் செனட்டராக பதவி வகித்து வரும் ஸ்கொட் லுட்லாம் என்பவர் தான் தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவுஸ்ரேலியா நாட்டு சட்டப்படி அரசு பதவிகளில் உள்ளவர்கள் அவுஸ்ரேலியா நாட்டு குடியுரிமை தவிற வேற எந்த நாட்டு குடியுரிமையையும் பெற்றுருக்க கூடாது. ஆனால், 2006-ம் ஆண்டு செனட்டராக பதவியேற்று 9 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஸ்கொட்டிற்கு நியூசிலாந்து நாட்டு குடியுரிமையும் ...
Read More »அவுஸ்திரேலியாவின் மிகச்சிறந்த பீட்ஸா!
அவுஸ்திரேலியாவின் இந்த ஆண்டிற்கான மிகச்சிறந்த பீட்ஸாவாக சிட்னியிலுள்ள Verace Pizzeria விருது பெற்றுள்ளது. இத்தாலியில் நடைபெற்ற Campionato Mondiale della Pizza (Pizza World Championship)-இல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. Neapolitan வகைக்குள் அடங்கும் Verace Pizzeria இதுவரை 16 முதல் பரிசுகளை அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டிகளில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பீட்ஸா நிறுவனத்தின் உரிமையாளர் Stefano Cirene கூறுகையில்; இந்த பீட்ஸா நிறுவனத்தை ஆரம்பித்தபோது அவுஸ்திரேலியாவின் சிறந்த பீட்ஸாவை தயாரிக்க வேண்டுமென்பதில் தான் உறுதியாக இருந்தேன். அதன் முயற்சியாக, ...
Read More »அவுஸ்ரேலியாவின் டஸ்மேனியா மாநிலம் வெளிநாட்டவர்களுக்கான புதிய வகை விசா!
Skilled Independent விசா ஊடாக அவுஸ்ரேலியாவில் குடியேறுவதற்கு வழி இருந்தாலும், இங்குள்ள ஒவ்வொரு மாநிலமும் தனக்கான தனித்தனி குடிவரவு திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது. இதனடிப்படையில் அவுஸ்ரேலியாவின் டஸ்மேனியா மாநிலம் வெளிநாட்டவர்களுக்கான புதிய வகை விசா ஒன்றை ஜுலை 1 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. Skilled Regional (Provisional) visa (Subclass 489) என்ற இவ்விசா பிரிவின் கீழ் வெளிநாட்டில் வாழும் ஒருவர், டஸ்மேனியாவில் 4 வருடங்களுக்கு வேலை செய்யமுடியும் என்பதுடன் இதனூடாக நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. டஸ்மேனியா மாநிலத்திற்கான தொழிற்பட்டியலில் காணப்படும் ஏதேனுமொரு தொழிலுக்குத் தகுதியானவர், Subclass 489 ...
Read More »விடுமுறைக் கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த அவுஸ்திரேலியர்!(காணொளி)
விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்ற அவுஸ்திரேலிய முதியவர் ஒருவர் Parasailing மேற்கொண்டபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; அவுஸ்திரேலியரான 70 வயது ரோஜர் ஹஸ்ஸி தமது மனைவியுடன் தாய்லாந்தில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். தாய்லாந்து குறித்த தம்பதியினர் சம்பவத்தன்று Parasailing மேற்கொண்டுள்ளார். படகு ஒன்றில் இணைக்கப்பட்ட பலூன் ஒன்றில் பறந்தபடியே அவர் சில நிமிடங்கள் ஆகாயத்தில் சுற்றி வந்துள்ளார். திடீரென்று பலூனில் இருந்து அவர் கடலில் விழுவதைக் கண்ட அவரது மனைவியும், குறித்த Parasailing குழுவினரும் ...
Read More »