Skilled Independent விசா ஊடாக அவுஸ்ரேலியாவில் குடியேறுவதற்கு வழி இருந்தாலும், இங்குள்ள ஒவ்வொரு மாநிலமும் தனக்கான தனித்தனி குடிவரவு திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது.
இதனடிப்படையில் அவுஸ்ரேலியாவின் டஸ்மேனியா மாநிலம் வெளிநாட்டவர்களுக்கான புதிய வகை விசா ஒன்றை ஜுலை 1 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.
Skilled Regional (Provisional) visa (Subclass 489) என்ற இவ்விசா பிரிவின் கீழ் வெளிநாட்டில் வாழும் ஒருவர், டஸ்மேனியாவில் 4 வருடங்களுக்கு வேலை செய்யமுடியும் என்பதுடன் இதனூடாக நிரந்தர வதிவிடம் பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
டஸ்மேனியா மாநிலத்திற்கான தொழிற்பட்டியலில் காணப்படும் ஏதேனுமொரு தொழிலுக்குத் தகுதியானவர், Subclass 489 பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
தகுதிவாய்ந்த நபர் டஸ்மேனிய மாநில அரசு எதிர்பார்க்கும் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு டஸ்மேனியாவில் குடியேற முடியும்.
இதுகுறித்த மேலதிக விபரங்களுக்கு www.migration.tas.gov.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லவும்.