அவுஸ்திரேலியாவின் இந்த ஆண்டிற்கான மிகச்சிறந்த பீட்ஸாவாக சிட்னியிலுள்ள Verace Pizzeria விருது பெற்றுள்ளது.
இத்தாலியில் நடைபெற்ற Campionato Mondiale della Pizza (Pizza World Championship)-இல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
Neapolitan வகைக்குள் அடங்கும் Verace Pizzeria இதுவரை 16 முதல் பரிசுகளை அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற போட்டிகளில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பீட்ஸா நிறுவனத்தின் உரிமையாளர் Stefano Cirene கூறுகையில்;
இந்த பீட்ஸா நிறுவனத்தை ஆரம்பித்தபோது அவுஸ்திரேலியாவின் சிறந்த பீட்ஸாவை தயாரிக்க வேண்டுமென்பதில் தான் உறுதியாக இருந்தேன்.
அதன் முயற்சியாக, தொடர்ச்சியாக் கிடைத்துவரும் விருதுகள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.