விடுமுறையைக் கொண்டாட தாய்லாந்து சென்ற அவுஸ்திரேலிய முதியவர் ஒருவர் Parasailing மேற்கொண்டபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;
அவுஸ்திரேலியரான 70 வயது ரோஜர் ஹஸ்ஸி தமது மனைவியுடன் தாய்லாந்தில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார்.
தாய்லாந்து குறித்த தம்பதியினர் சம்பவத்தன்று Parasailing மேற்கொண்டுள்ளார். படகு ஒன்றில் இணைக்கப்பட்ட பலூன் ஒன்றில் பறந்தபடியே அவர் சில நிமிடங்கள் ஆகாயத்தில் சுற்றி வந்துள்ளார்.
திடீரென்று பலூனில் இருந்து அவர் கடலில் விழுவதைக் கண்ட அவரது மனைவியும், குறித்த Parasailing குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த முதியவரை மீட்கச் சென்ற மீட்புக் குழுவினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக Parasailing குழுவில் படகு இயக்கியவரையும் மேலும் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பலூனில் பறந்துகொண்டிருக்கும்போது ரோஜர் தவறுதலாக தம்மீது இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கவசத்தை விடுவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்த விசாரணையினை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.