அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுக்கு இடையே நடைபெறவிருந்த நீண்டகால பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதிபர் புதின் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. பிரஸல்ஸில் நடைபெறவுள்ள நேடோ பேச்சுவார்த்தைக்கு பிறகு புதினுடனான தனது பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபின்லாந்து தலைநகர் எல்சின்கியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் சிரியாவின் போர் குறித்தும் யுக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்படும் ...
Read More »செய்திமுரசு
குடியுரிமை விண்ணப்பத்தொகை மாற்றத்தில் அவுஸ்திரேலிய அரசின் திட்டம் தோற்கடிப்பு!
அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விண்ணப்பத் தொகையில் சலுகையை ரத்துச் செய்யும் அரசின் தீர்மானம் மீளப்பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. புலம்பெயர் பின்னணி கொண்ட முதியவர்கள் மற்றும் சென்டர்லிங்க் கொடுப்பனவு பெறும் முன்னாள் வீரர்கள், கணவனை இழந்தவர்கள் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குடியுரிமை விண்ணப்பத் தொகையில் சலுகைகள் ரத்தாகிறது. சாதாரணமாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் சுமார் 285 டொலர்களை அதற்கான விண்ணப்பத் தொகையாக செலுத்த வேண்டும். மேலும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் கணவனை இழந்த கைம்பெண்கள் வெறுமனே 20 அல்லது 40 டொலர்கள் மட்டுமே ...
Read More »சந்தியாவிற்கு மரணஅச்சுறுத்தல்- மன்னிப்புச்சபை கவலை!
சந்தியா எக்னலிகொடவிற்கு மரணஅச்சுறுத்தல் விடுப்பவர்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியும் பலவந்தமாக காணாமல்போனவர்களிற்காக குரல்கொடுப்பவருமான சந்தியா சமூக ஊடகங்களில் மரணஅச்சுறுத்தல்களையும்,துன்புறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டுள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சந்தியா எக்னலிகொட எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் கடும்கவலையளிக்கின்றன என தெரிவித்துள்ள மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி இயக்குநர் தினுசிகா திசநாயக்க அவரிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயல்பவர்களிற்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மனித உரிமை பாதுகாவலர்கள் தங்கள் ...
Read More »மரணம் எங்கே தொடங்குகிறது?
இதயம், மூளையின் துடிப்பு ஆகியவற்றைச் சார்ந்தே உயிரின் லயம் உள்ளது. இந்த முடிவை மருத்துவத் துறையோடு இணைந்து இலக்கியம், கவிதை, தத்துவம் போன்றவை அங்கீகரிக்கின்றன. மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை எந்த உடல் உறுப்பின் செயல் இழப்பிலிருந்து முடிவு செய்யலாம் என்பதையும் மருத்துவ அறிவியல்தான் கேட்கிறது. உடலுறுப்பு மாற்று சிகிச்சைகளின் நடைமுறைகள் வெளிப்படையாக இருக்கும் பொருட்டு, மூளைச் சாவு நிகழ்வுகளை உறுதிப்படுத்தும் விதிமுறைகளைக் கடந்த மாதம் கேரள அரசு வெளியிட்டது. மருத்துவ அறிவியலில் ஏகப்பட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் (ஒருவேளை அதுவே காரணமாகவும் இருக்கலாம்) மருத்துவ ரீதியாகவும் ...
Read More »அன்பின் முன்னால் அந்தஸ்து எனக்கு பெரிதாக தெரியவில்லை!
ஜப்பான் நாட்டு இளவரசி சாதாரண குடிமகனை திருமணம் செய்ய இருப்பதால் அரசு குடும்பத்தை விட்டு வெளியேறுகிறார். ஜப்பான் மன்னர் அகி ஹிட்டோவின் மூத்த பேத்தி இளவரசி மாகோ (25). இவர் டோக்கியோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த கீ கொமுரோ என்ற வாலிபரை காதலித்தார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த கீ கொமுரோ சட்ட அலுவலகத்தில் பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய விரும்பினர். அதற்கு இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு நடந்தது. இவர்கள் இருவருக்கும் வருகிற ...
Read More »இன்று தேர் ஏறி வருகிறாள் நயினை நாக பூசணி!
வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத் தேர்த் திருவிழா இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வசந்த மண்டபப் பூசை நடைபெற்று, காலை 8.15 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். பிற்பகல் 4 மணிக்கு பச்சை சாத்தும் பூசை இடம் பெற்று அம்மன் ஆலயத்துக்குள் எழுயந்தருளுவார். நாளை வியாழக்கிழமை காலை 5.30 மணிக்கு தீர்த்த திருவிழாவுக்காக வசந்த மண்டப பூசைகள் ஆரம்பமாகும். காலை 8.30 மணி தொடக்கம் 10 மணி தீர்த்த பூசைகள் நடைபெறும்.
Read More »புலத்தில் இருந்து தாயகம் திரும்பி சிறுவன் விபத்தில் பலி!
மட்டக்களப்பு – கிரான் பகுதியில் நேற்று முன் இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பிரான்சில் இருந்து தாயகம் திரும்பிய 12வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சகோதரன் மற்றும் அவருடைய தந்தை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரவுநேரப் பேருந்தும், கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற வானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் வானின் சாரதியான கல்லடி நொச்சிமுனையைச் சேர்ந்த பாலச்சந்திரன் ...
Read More »படகுகளில் வருவோரை தடுக்க அவுஸ்திரேலியா அதிரடி நடவடிக்கை!
அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக படகுகளில் வருவோரை தடுப்பதற்கு புதிய யுக்தி ஒன்றினை அவுஸ்திரேலியா கையாளவுள்ளது. கடல் எல்லையைப் பாதுகாக்கும் நோக்கில் Triton drones என்று பெயரிடப்பட்டிருக்கும் ஆளின்றி பறக்கும் அதிநவீன போர் விமானங்களை அவுஸ்திரேலிய அரசு வாங்கவுள்ளது. இந்த ஆளின்றி பறக்கும் அதிநவீன போர் விமானத்தின் மூலம் புகலிடம் கோருவோரை ஏற்றிவருத் படகுகள் அவுஸ்திரேலிய கடல் எல்லைக்குள் வரும் முன்பே கண்டறிந்துவிட முடியும் என கூறப்படுகிறது. அமெரிக்காவின் ஆயுத மற்றும் வான்வழி போர் தளபாடங்களை தயாரிக்கும் Northrop Grumman Corporation எனும் நிறுவனத்திடமிருந்து அவுஸ்திரேலியா அரசு ...
Read More »ஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும்!
ஊருக்குள் வந்த சிறுத்தை தன்னை தற்காத்துக் கொள்வதற்காக மனிதர்களைத் தாக்கியது. மனிதர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறுத்தையைத் தாக்கினார்கள். தன்னைக் கொல்ல வரும் பசுவைக் கொல்லலாம் என்று ஒரு கிராமியச் சொற்தொடர் உண்டு. எனவே ஊருக்குள் நுழைந்து மனிதர்களைத் தாக்கிய சிறுத்தையை மனிதர்கள் தாக்கியத்தில் ஒரு தர்க்கம் உண்டு. வீட்டுக்குள் வரும் விசப்பாம்பை அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. அதுபோலவே ஊருக்குள் திரியும் கட்டாக்காலி நாய்க்கு விசர் பிடித்தாலும் அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. ஆனால் அம்பாள் குளத்தில் சிறுத்தையைக் கொன்ற விதமும், கொன்ற பின் கொண்டாடிய விதமும் தான் ...
Read More »சுழிபுரம் சிறுமி கொலை- சந்தேகநபர் அதிர்ச்சி வாக்குமூலம்!
சிறுமியை கொலை செய்த பின்னர், அவளது பாடசாலை சீருடையை நெருப்பில் எரித்தேன். தோடுகளைத் திருடுவதற்காகவே அவளைக் கொலை செய்தேன்” என்று சுழிபுரம் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் காவல் துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என அறியமுடிகிறது. சந்தேகநபர்களில் ஒருவர் ஒருவன் மனநோயாளியைப் போல நடிக்கிறார். சிறுமியைக் கொலை செய்ததை ஒப்புக் கொள்கிறார். ஆனால் சரியான காரணத்தைக் கூறவில்லை என்று காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி றெஜீனா நேற்று ...
Read More »