அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான விண்ணப்பத் தொகையில் சலுகையை ரத்துச் செய்யும் அரசின் தீர்மானம் மீளப்பெறப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புலம்பெயர் பின்னணி கொண்ட முதியவர்கள் மற்றும் சென்டர்லிங்க் கொடுப்பனவு பெறும் முன்னாள் வீரர்கள், கணவனை இழந்தவர்கள் ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோரின் குடியுரிமை விண்ணப்பத் தொகையில் சலுகைகள் ரத்தாகிறது.
சாதாரணமாக குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் சுமார் 285 டொலர்களை அதற்கான விண்ணப்பத் தொகையாக செலுத்த வேண்டும்.
மேலும் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் கணவனை இழந்த கைம்பெண்கள் வெறுமனே 20 அல்லது 40 டொலர்கள் மட்டுமே செலுத்த வேண்டியிருந்தது.
இந்தநிலையிலேயே இந்த சலுகையை எதிர்வரும் ஜுலை 1 முதல் அதிரடியாக நீக்குவதற்கான நாடாளுமன்ற ஆவணங்களை உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton) இரு வாரங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்தார்.
இதையடுத்து ஓய்வூதியம் பெறும் சலுகை அட்டை வைத்திருப்பவர்கள், வயதான ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஆதரவு ஓய்வூதியம், பெற்றோருக்குரிய பணம் ஆகிய கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.
இந்த நிலையில் அரசின் இந்த செயற்பாடானாது நியாயமற்றது என கிரீன்ஸ் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றில் disallowance motion ஊடாக எதிர்கட்சி அங்கத்தவர்களின் ஆதரவுடன் அரசின் தீர்மானத்தை தோற்கடித்துள்ளது.
இதையடுத்து ஜுலை 1 முதல் அமுல்படுத்தப்படவிருந்த மாற்றம் மீளப்பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.