பூகோள ரீதியாக, காபன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050ஆம் ஆண்டில், வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும் மாகாணங்களில், மிக மோசமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வட மாகாணமே அமையுமென, உலக வங்கி எச்சரித்துள்ளது. வெப்பநிலை, மழை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களால், தெற்காசியாவில் ஏற்படப்போகும் மாற்றங்கள் தொடர்பான அறிக்கையை, உலக வங்கி, நேற்று (20) வெளியிட்டது. இதில், இலங்கை தொடர்பான பார்வையில், அதிகமாகப் பாதிக்கப்படும் மாகாணமாக, வடக்கு உள்ளது. குறைவான பாதிப்பு, மத்திய மாகாணத்தில் ஏற்படும். இதில், வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மோசமான மாற்றங்களைத் தவிர, நீர் ...
Read More »செய்திமுரசு
அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது துரதிஷ்டவசமானது! – பாகிஸ்தான்
இந்தியா அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்தது துரதிஷ்டவசமான செயல் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இருபெரும் அணு ஆயுத நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் பரம எதிரிகளாக இருந்து வருகின்றன. எனினும் இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புகிறது. ஆனால் இதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுக்கும்போதெல்லாம், பாகிஸ்தான் ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. குறிப்பாக பதான்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ...
Read More »மகிந்தவின் தெரிவு – இந்தியாவா? அல்லது சீனாவா?
முன்னாள் அரச தலைவர்என்ற மதிப்புடன் மகிந்தராஜபக்ச இந்தியாவுக்குச் சென்று தலைமை அமைச்சர் மோடி, முதன்மை எதிர்க்கட்சியான காங்கிரஸின் முக்கி யஸ்தர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் இன்றை சூழ்நிலையில் மகிந்தவின் இந்தியப் பயணம் முக்கி யத்துவம் பெறுகின்றது. சுமார் 10 ஆண்டுகாலம் அரச தலைவர் பதவியை வகித்தவர் என்ற பெருமை மகிந்தவுக்கு உள்ளது. அவர் மூன்றாவது தடவையும் அந்தப் பதவிக்குப் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவியபோதிலும் ஆட்சிக்கு வருவதில் உள்ள ஆர்வத்தை இன்னமும் கொண்டிருக்கிறார். இதனால் புதிய கட்சியொன்றை அமைத்ததுடன் வேறு சிலரின் ஆதரவையும் பெற்று ...
Read More »அவுஸ்திரேலியாவில் மாம்பழத்திற்குள்ளும் தையல் ஊசி!
அவுஸ்திரேலியாவில் பழங்களுக்குள் ஊசிகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது மாம்பழத்தினுள் ஊசி காணப்பட்டதாக பெண் ஒருவர் முறையிட்டுள்ளார். ஏற்கனவே அவுஸ்திரேலியா முழுவதும் ஸ்ரோபெர்ரியில் தையல் ஊசி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அத்தோடு ஸ்ரோபெர்ரி பழங்கள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குயின்ஸ்லாந்தில் வாழைப்பழத்திற்குள் தகடொன்று கண்டுபிடிக்கப்பட்டதாக முறையிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து பழங்கள் தொடர்பான பரபரப்பு மேலும் இரட்டிப்பானது. இதையடுத்து ஆப்பிள் பழங்களில் ஊசி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகிய பின்னணியில் தற்போது மாம்பழத்திற்குள் ஊசி காணப்பட்டதாக நியூ சவுத் ...
Read More »கோட்டையைத் தந்தால் மக்களின் காணிகளை கையளிக்க தயார்!- தளபதி தர்சன ஹெட்டியாராச்சி
யாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ளது என யாழ். மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். பலாலி இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை தெரிவித்தார்.. அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யாழில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் பல ஏக்கர் காணிகளை மீள அதன் உரிமையாளர்களிடம் கையளித்து வருகின்றோம். இன்னமும் கையளிக்கவுள்ளோம். யாழ் கோட்டை பகுதியை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் உள்ள இராணுவத்தினர் அங்கு நிலை கொண்டு ஏனைய பகுதிகளை ...
Read More »ஒரு காலம் விடைபெற்றுக்கொண்டது!
புரட்சிகரக் கம்யூனிஸ்ட் போராளியின் வாழ்க்கைத் துணைவராகி, கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்து, தலைமறைவு வாழ்க்கையின் சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் முகங்கொடுத்து, பிடிவாதம் மிக்க கணவரிடமிருந்து தனிமைப்பட்டு, மகனையும் மகளையும் தன் காலத்திலேயே பறிகொடுத்து, மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து பெற்ற இனிப்பும் கசப்பும் கலந்த அனுபவங்களைக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் மூதாட்டி கோட்டேஸ்வரம்மா தமது நூறாவது வயதில் காலமாகிவிட்டார். ஒரு காலம் விடைபெற்றுக்கொண்டது. பேரனுபவங்கள் நிறைந்த வாழ்க்கை கோட்டேஸ்வரம்மாவுடையது. நான்கு அல்லது ஐந்து வயதாகியிருந்தபோதே, குழந்தைத் திருமணம் செய்யப்பட்டு, பருவம் எய்துவதற்கு முன்பே கணவனை இழந்தவர். ...
Read More »அவுஸ்திரேலியாவில் உள்ள ஹோட்டலில் நச்சு வாயுக்கசிவு!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஹோட்டலில் நச்சு வாயுக்கசிவினால் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிட்னியில் உள்ள ஹோட்டலொன்றில் நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கண்கடி மற்றும் எரிச்சல் ஆகிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Pullman Sydney Hyde Park ஹோட்டலில் உதவியாளர் ஒருவர் நீச்சல் தாடகத்துக்குரிய குளோரினுடன் இன்னொரு இரசாயன பதார்த்தத்தை கலந்துள்ளார். அப்போது குறித்த திரவக் கலவையிலிருந்து வெளிவந்த புகை 22 வது மாடியின் வழியாக பல்வேறு ...
Read More »படகு கவிழ்ந்து விபத்து – 44 பேர் பலி!-தான்சானியா
தான்சானியா நாட்டில் உள்ள லேக் விக்டோரியா எனும் ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 44 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடுகளான தான்சானியா, கென்யா மற்றும் உகாண்டா நாடுகளுக்கு இடையே லேக் விக்டோரியா எனும் மிகப்பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியானது சுமார் 69 ஆயிரம் கிமீ பரப்பளவும் 272 அடி ஆழமும் உடையதாகும். இந்நிலையில், தான்சானியா நாட்டில் உள்ள உகாரா தீவில் இருந்து பகோலோரா எனும் மற்றொறு தீவுக்கு இந்த ஏரி வழியாக படகு மூலம் 400-க்கும் மேற்பட்டோர் ...
Read More »இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் கைது !
இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊடகவியிலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினரால் இராணுவ புலனாய்வு அதிகாரி லெப்டினன் கேர்ணல் எரந்த பீரிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More »கணினி, செல்பேசிக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம் !
கணினி, செல்பேசிகளுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய பிரபல தமிழறிஞர் பச்சையப்பன் சென்னையில் இன்று காலை காலமானார். கி.த பச்சையப்பன் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர். இவர் தனது 85 வயதில் மரணம் அடைந்துள்ளார். இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் தமிழறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடைசி மூச்சு வரை தமிழ் மொழிக்காக பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளிதழ்களில் சமஸ்கிருத ஆதிக்கம் இருந்த போது அதை தமிழை நோக்கி திருப்பியவர் பச்சையப்பன். இவரது குடும்பம் தொடர்பான சிவில் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக சென்னை உயர் ...
Read More »