அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஹோட்டலில் நச்சு வாயுக்கசிவினால் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிட்னியில் உள்ள ஹோட்டலொன்றில் நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கண்கடி மற்றும் எரிச்சல் ஆகிய பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Pullman Sydney Hyde Park ஹோட்டலில் உதவியாளர் ஒருவர் நீச்சல் தாடகத்துக்குரிய குளோரினுடன் இன்னொரு இரசாயன பதார்த்தத்தை கலந்துள்ளார்.
அப்போது குறித்த திரவக் கலவையிலிருந்து வெளிவந்த புகை 22 வது மாடியின் வழியாக பல்வேறு பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.
இந்த தாக்கத்துக்கு உள்ளானவர்கள் கண்கடி தோல் எரிவு போன்ற தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இருமலினால் பாதிக்கப்பட்டவர்களும் ஹோட்டலில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.