Home / செய்திமுரசு (page 758)

செய்திமுரசு

அவுஸ்திரேலியாவில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்காக போட்டி

அவுஸ்திரேலியாவின் பிங்க் ஹோப் கேன்சர் பாதுகாப்புக் குழுமம் மற்றும் ஹெச்.சி.ஜி.தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகிய இரண்டும் ஒன்றாக இணைந்து புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்காக போட்டி ஒன்றை நடத்தவுள்ளது. இந்த போட்டியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் பங்கேற்க முடியும். தாங்கள் நோயிலிருந்து மீண்டது எப்படி, அதற்காக எடுத்துக் கொண்ட சிகிச்சை முறைகள் பற்றி ஒரு மணிநேரம் வீடியோ ரெகார்ட் செய்து அனுப்ப வேண்டும். இந்த வீடியோ புற்றுநோயை எதிர்த்து போராடும் நோயாளிகளுக்கு ...

Read More »

எரித்துக் கொல்லப்பட்ட இந்தியருக்காக அழுத அவுஸ்திரேலியா துணை மேயர்!

அவுஸ்திரேலியாவில் எரித்துக் கொல்லப்பட்ட இந்தியா வம்சாவளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநருக்காக பிரிஸ்பேன் நகர துணை மேயர் விம்மி விம்மி அழுது இரங்கலை வெளிப்படுத்திய சம்பவம் நெகிழ வைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் சில தினங்களுக்கு முன் இந்தியா வம்சாவளியை சேர்ந்த 29 வயது Manmeet Alisher என்ற பேருந்து ஓட்டுநர் பயணிகளுக்கு முன்னிலையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என ...

Read More »

அவுஸ்ரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா அணி திணறல்

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்ரேலியா வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது. டுபெலிசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா சென்றுள்ளது. அவுஸ்ரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளமான பெர்த்தில் இன்று தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா அணியில் புதுமுக வீரர் கேசவ் மகராஜ் இடம் பெற்றார். ...

Read More »

வரலாறாய் வாழும் தமிழ்ச்செல்வன்! – ச.பொட்டு அம்மான்

தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும் பார்ப்பதில்லை. மாற்றம் நிகழ்ந்துவிட்ட போதிலும் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் மனம் கிடந்து மறுகும். அப்படிப்பட்ட மாற்றம்தான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் மறைவு. சபையில் புன்சிரிப்பும், எம்மிடையே கலகலத்த அதிரடிச் சிரிப்புமாக உலாவந்த தமிழ்ச்செல்வன், பிரிகேடியர் தமிழ்ச்செல்வனாக வணக்கத்திற்கு உரியவனாகிவிட்டான். தமிழ்ச்செல்வனைப் பற்றி எதிலிருந்து தொடங்குவது? அவனது வீரச்சாவிற்கு ...

Read More »

தென் சீனக் கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கை -ஆராயும் அவுஸ்ரேலியா

அவுஸ்ரேலியா, இந்தோனேசியாவுடன் இணைந்து, சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆராய்ந்துவருகிறது. கடந்த வாரம் இந்தோனேசிய அதிகாரிகளுடனான சந்திப்புகளில் அது குறித்து பேசப்பட்டதாக அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் ஜுலி பிஷப் கூறினார். கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தக்கூடிய வாய்ப்புகள் பற்றி ஆராயவிருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தென் சீனக் கடலிலும், சூலு (Sulu) கடலிலும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை நடத்துவது அவற்றுள் அடங்கும். அவுஸ்ரேலியாவுடன், அமைதிச் சுற்றுக்காவல் பணிகளை ...

Read More »

அவுஸ்ரேலியா -தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடங்குகிறது

அவுஸ்ரேலியா- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி அதிவேக ஆடுகளமான பெர்த்தில் நாளை தொடங்குகிறது. அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. காயத்தால் டிவில்லியர்ஸ் ஓய்வு எடுப்பதால் தென்ஆப்பிரிக்க அணியை பாப் டு பிளிஸ்சிஸ் வழிநடத்துகிறார். தென்ஆப்பிரிக்கா- அவுஸ்ரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி உலகின் அதிவேக ஆடுகளம் என்று வர்ணிக்கப்படும் பெர்த்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. ...

Read More »

அவுஸ்ரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களே! வீரர்களின் விபரங்களை பதிவு செய்க!

தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை எழுச்சியுடன் நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் அவுஸ்ரேலிய நாட்டிலும், 2016ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்ரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை தமிழர் ...

Read More »

அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதித்திட்டத்தின்கீழ் தாயகத்தில் நிமிர்ந்த யாழ். இளைஞன்

அவுஸ்ரேலியாவுக்கு சென்று அகதி அந்தஸ்துக்கோரிய நிலையில், அதில் தோல்வியை கண்ட யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் இன்று சொந்த தொழிலில் சிறப்பாக வாழ்ந்துவருவதாக தெ ஒஸ்ரேலியன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து படகு ஒன்றின்மூலம் அவுஸ்ரேலியாவுக்கு தப்பிச்சென்ற மார்க்கஸ் பிரீசன் என்பவருக்கு இந்த வாழ்க்கை வாய்த்திருப்பதாக செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இவருக்கு அங்கு அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை. முயற்சியில் தோல்விக்கண்டார். இதனையடுத்து நாடு திரும்ப இணங்கினார். தமது ...

Read More »

வேகநடைப் போட்டியில் தங்கம்- 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி அசத்தல்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 90 முதல் 95 வயதுக்குட்பட்டோருக்கான 5000 மீட்டர் வேகநடைப் போட்டியும் ஒன்று. இதில், இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஸ்ரீராமுலு (விசாகப்பட்டினம்) கலந்துகொண்டு தங்கம் வென்றார். மேலும், இந்த ...

Read More »

தற்கொலை செய்ய நினைத்தேன்- அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்

ஓய்வு மற்றும் திருமண முறிவு போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றியதாக அவுஸ்ரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். 2003 மற்றும் 2007ல் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இவர் முக்கிய பங்குவகித்தார். 2007-08ல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற இவர் தனது வாழ்க்கையில் நடந்த ...

Read More »