Home / செய்திமுரசு

செய்திமுரசு

‘மனிதாபிமானம் எங்கே?’

மனிதாபிமானம் எங்கே?’ ‘நாங்கள் உங்களை போன்ற மனிதர்கள் இல்லையா?’ – ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் படகு வழியாக தஞ்சமடைந்த அகதிகளை தொடர்ந்து சிறைப்படுத்தி வைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு, தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்னில் உள்ள பார்க் ஹோட்டலிலும் அகதிகளை தடுத்து வைத்திருக்கிறது. இந்த அகதிகளை விடுவிக்கக்கோரி டிசம்பர் 10, மனித உரிமைகள் தினத்தன்று அந்த ஹோட்டலுக்கு எதிரே போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Read More »

புதிய குற்றச்சாட்டு வழக்கு: ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை

தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த ...

Read More »

பிரியந்தவின் உடற்பாகங்கள் தாங்கிய பேழை ஏற்றப்பட்டது

பாகிஸ்தானில் கொடூரமாக அடித்து தீமூட்டி ​படுகொலைச்செய்யப்பட்ட இலங்கை பொறியிலாளரான பிரியந்த குமார தியவடனவின் பூதவுடல், இன்று மாலை 5 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டுவரப்படும் பாகிஸ்தான் லாகூ​​ரியிலிருந்து புறப்படும் யு.எல்.186 என்ற இலக்கத்தைக் கொண்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தின் மூலமாக அவரது உடற்பாகங்கள் தாங்கிய பேழை எடுத்துவரப்படவுள்ளது. அந்தபேழை, இலங்கை அதிகாரிகளிடம் பாகிஸ்தானில் வைத்து கையளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்.

Read More »

பேராயர் மல்கம் ரஞ்சித் கண்டனம்

பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் மறைவுக்கு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இரங்கல் தெரிவித்ததுடன், கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற கொலைக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்தார். மதம் என்ற போர்வையில் இழைக்கப்படும் இதுபோன்ற கொடூரமான,  குற்றச்செயல்களால் ஏற்படும் அவலங்களை தடுத்து நிறுத்த அனைத்து நாடுகளின் தலைவர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என தனது இரங்கல் செய்தியில் பேராயர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொலைக்கு எதிராக பாகிஸ்தான் தலைமை உடனடியாக நடவடிக்கை ...

Read More »

பாகிஸ்தானில் இலங்கைக்கு எதிராக நடந்த 2வது வன்முறை; இந்தியாவுக்கான பாடம்!

பாகிஸ்தானின் சியால்கோட் தொழிற்சாலையில் இலங்கை ஊழியர் ஒருவர் கடவுள் நிந்தனை செய்ததாகக் கூறி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாகிஸ்தானின், சிவில் சமூகம், அரசியல்வாதிகள் மற்றும் இராணுவத்தினரிடமிருந்து கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளது. ஆனால், அங்கே இது போன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறையா என்றால் இல்லை. இலங்கை, கொழும்பு அருகே உள்ள கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த பொறியாளரும் இரண்டு குழந்தைகளின் தந்தையுமான பிரியந்த தியவதன குமார, வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான கும்பலால் ...

Read More »

ராமன் விளைவுக்குப் பின்னால் ஒரு கிருஷ்ணன்!

ராமன் விளைவு’க்காக சர்.சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது பலருக்கும் தெரியும். இந்தக் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்காற்றிய கே.எஸ்.கிருஷ்ணனைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள விழுப்பனூர் என்ற குக்கிராமத்தில் 1898, டிசம்பர் 4-ம் தேதியன்று பிறந்தவர் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன். இவர் தனது தொடக்கக் கல்வியை வத்திராயிருப்பில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில்தான் படித்தார். இரவு நேரங்களில் வானத்தில் மிளிரும் விண்மீன்களைக் காட்டி இவரது ஆசிரியர், கிருஷ்ணனுக்கு அறிவியல் ஆர்வத்தை ...

Read More »

மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்துவிட்டது

இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி ஆரம்பித்து விட்டதாக தெரிவிக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், இந்த மக்கள் கிளர்ச்சி ஆட்சி மாற்றத்தில் மாத்திரமே முடியுமெனவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (03) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, நிதி அமைச்சர் பெசில் ராஜபக்‌ஷ ஆகியோர் தற்போதையஅரசாங்கத்தின் தூண்களாக இருக்க, தற்போது அவர்கள் ஆட்டம் காண்கிறார்கள் எனவும் கூறினார். ...

Read More »

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிப்பார்களாம்

எதிர்காலத்தில் அமைய உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (03) குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய பொன்சேகா, இலங்கைக்கு வந்த 75 ஆயிரம் இந்திய இராணுவத்தினரையே வெறும் 2500 பேரை அப்போது கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் வீழ்த்தினார்கள். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை ...

Read More »

சஹ்ரானின் பாசறையில் பங்கேற்ற இளைஞன் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் தொடர்பை பேணிய குற்றச்சாட்டின் கீழ், மற்றுமோர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்ல – ஹிங்குல பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த காவல் துறை , பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர், கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் ஹாசிமினால் ஹம்பாந்தோட்டையில் நடத்திச் செல்லப்பட்ட பயிற்சி முகாமில் பயிற்சிகளை சந்தேகநபர் பெற்றுள்ளதாக தெரிவித்த காவல் துறை  ...

Read More »

ஐஎம்எப் அமைப்பின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத், சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக 3 ஆண்டாக பணியாற்றி உள்ளார். ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இது, சர்வதேச நிதியத்தில் 2-வது இடத்தில் உள்ள உயர் பதவியாகும். உலகப் பொருளாதாரத்துக்கு உதவுவதில் கீதா கோபிநாத்தின் அறிவுபூர்வமான தலைமையை அங்கீகரிக்கும் வகையிலும், பொருளாதார மந்தநிலையில் இருந்து உலகத்தை விடுவிக்க ...

Read More »