அவுஸ்ரேலியாவில் பள்ளிக்கூடத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் எழுதிய கடிதத்தை அவர் தாய் சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். அவுஸ்திரேலியா நாட்டில் வசித்து வருபவர் Linda, இவரின் மகள் பெயர் Cassidy Trevan (13). இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் Cassidy பள்ளிக்கூடத்தில் இருக்கும் போது அவருடன் படிக்கும் சில மாணவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அந்த மாணவர்கள் Cassidyவை அடித்து துன்புறுத்தும் செயலிலும் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த Cassidy தற்கொலை செய்ய முடிவெடுத்து ...
Read More »செய்திமுரசு
யுத்த குற்ற விசாரணைகள் தொடர்பில் அவுஸ்ரேலியாவின் கோரிக்கை
யுத்த குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் மற்றும் வழக்கு தொடுனர்கள் சேவைக்கு அமர்த்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொறுப்புக்கூறலை உரிய முறையில் முன்னெடுக்க முடியும் என அவுஸ்ரேலிய மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் இயக்குனர் எலைனி பியர்சன்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான விசாரணைகள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைகள் குறித்தும் அவர் பிரஸ்தாபித்துள்ளார்.
Read More »அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினாலும் தொடரை இழப்பது உறுதி
அவுஸ்ரேலிய அணி இந்தியாவுடன் 4 டெஸ்டுகளில் சிறப்பாக விளையாடினாலும் தொடரை இழப்பது உறுதி என்று இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறியுள்ளார். இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலிய அணி இந்தியாவுடன் 4 டெஸ்டுகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இந்திய அணி தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும். அந்த அணி நன்றாக ஆடினால் தான் இந்த நிலைமை. இல்லாவிட்டால் இந்திய அணி 4-0 ...
Read More »3000 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் ரூ. 2000 கோடி இழப்பீடு வழங்க கோரிக்கை
அவுஸ்ரேலியாவில் கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் தேவாலயங்களில் பாதிரியார்களால் சுமார் 3000 குழந்தைகள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980 முதல் 2015ம் ஆண்டு வரை அவுஸ்ரேலியா கிறிஸ்தவ அமைப்புக்கள் மற்றும் தேவாலயங்களில் பணிபுரிந்த பாதிரியார்கள், சுமார் 3000 குழந்தைகளிடம் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக பொதுவிசாரணை அமைப்ப கண்டறிந்ததுள்ளது. இந்த விசாரணையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சுமார் 2000 கோடி ரூபாய் இழப்பீடாகப் பெற்றுத்தரப்பட்டுள்ளதாக பொதுவிசாரணை அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேய அதிக ...
Read More »அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால் 0-3 என தோற்கும்: ஹர்பஜன் சொல்கிறார்
இந்தியாவிற்கு எதிரான அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால் 0-3 என தோல்வியடையும். இல்லையெனில் 0-4 என தோல்வியடையும். இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 23-ந்திகதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் அவுஸ்ரேலியா அணி எப்படி விளையாடும் என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இந்தியா அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங் இதுகுறித்து கூறுகையில் ‘‘அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால், இந்தியா தொடரை 3-0 என வெல்லும். அவுஸ்ரேலியா சிறப்பாக விளையாடினால் மட்டுமே. இல்லையெனில் ...
Read More »பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் அவுஸ்ரேலியா வீழ்த்தியது இலங்கை
முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி பெற்றுள்ளது. அவுஸ்ரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று மெல்போர்னில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் செய்தது. அதன்படி அவுஸ்ரேலியா முதலில் பேட்டிங் செய்தது. கப்டன ஆரோன் பிஞ்ச் 43 ரன்னும், கிளிங்கர் 38 ரன்னும், ட்ரேவிஸ் ஹெட் 31 ரன்னும் சேர்க்க, அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் ...
Read More »ஸ்மித்-மார்ஷ் சதத்தால் அவுஸ்ரேலியா முதல் நாளில் 327 ரன்கள் குவிப்பு
இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்ரேலியா அணி ஸ்மித் சதத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்துள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்ரேலியா அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 23-ந்திகதி புனேயில் நடக்கிறது. இதற்கு முன்பாக அவுஸ்ரேலியா இந்தியா ‘ஏ’ அணிக்கெதிராக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா ...
Read More »தமிழகத்தில் யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் ஈழத் தமிழர்களின் நலனை மீறி செயற்படுவார்களாயின் அவர்களை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள்!
தமிழகத்தில் யார் ஆட்சியமைத்தாலும் அவர்கள் ஈழத் தமிழர்களின் நலனை மீறி செயற்படுவார்களாயின் அவர்களை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழகத்தின் அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் ஆழமான கரிசனை கொண்டவர்கள் எனத் தெரிவித்த கஜேந்திரகுமார், இதனை மீறி செயற்பட்ட ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் தூக்கியெறியப்பட்டனர் என சுட்டிக்காட்டினார். ...
Read More »அவுஸ்ரேலியா – இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
அவுஸ்ரேலியா – இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியா வுக்கு சென்றுள்ளது. இதன்படி அவுஸ்ரேலியா -இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் இன்று நடக்கிறது. அவுஸ்ரேலியமுன்னணி வீரர்கள் அனைவரும் தற்போது டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக இந்தியாவுக்கு வந்து விட்டனர். இதனால் இது 2-ம் தர அணியாகவே பார்க்கப்படுகிறது. கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஜேம்ஸ் ...
Read More »இந்தியா “ஏ’ – அவுஸ்ரேலியா பயிற்சி ஆட்டம்!
இந்தியா “ஏ’-அவுஸ்ரேலியா இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் ஆட்டம் மும்பையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய “ஏ’ அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு இந்தப் போட்டி நல்ல வாய்ப்பாகும். அதேநேரத்தில்அவுஸ்ரேலிய அணி பங்கேற்கும் ஒரே பயிற்சிப் போட்டி இதுதான். எனவே அந்த அணியினர் இந்தப் போட்டியை முடிந்த அளவுக்கு சிறப்பாக பயன்படுத்தி இங்குள்ள சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்ள முயற்சிப்பார்கள். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய சீனியர் அணியில் இடம்பெற்றுள்ள ஹார்திக் பாண்டியா, ...
Read More »