முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் கடைசி பந்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி இலங்கை அணி பெற்றுள்ளது.
அவுஸ்ரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று மெல்போர்னில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் செய்தது. அதன்படி அவுஸ்ரேலியா முதலில் பேட்டிங் செய்தது. கப்டன ஆரோன் பிஞ்ச் 43 ரன்னும், கிளிங்கர் 38 ரன்னும், ட்ரேவிஸ் ஹெட் 31 ரன்னும் சேர்க்க, அந்த அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. நீண்ட நாட்களுக்குப் பின் களம் இறங்கிய மலிங்கா 4 ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. அந்த அணி 15 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 30 பந்தில் 42 ரன்கள் தேவைப்பட்டது.
16-வது ஓவரில் இலங்கை அணி 13 ரன்கள் சேர்த்தது. இதனால் 24 பந்தில் 29 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரில் இலங்கை அணி 11 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி 18 பந்தில் 18 ரன் தேவைப்பட்டது.
18-வது ஓவர் டர்னர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் குணரத்னே அவுட் ஆனார். அவரை 37 பந்தில் 7 பவுண்டரியுடன் 52 ரன்கள் சேர்த்தார். 3-வது பந்தில் ஸ்ரீவர்தனா 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் 5-வது பந்தை பிரசன்னா பவுண்டரிக்கு விரட்டினார்.
இதனால் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தாலும் 6 ரன்கள் சேர்த்தது. ஆகவே கடைசி இரண்டு ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை பால்க்னெர் வீசினார். இந்த ஓவரில் இலங்கை அணி 6 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் 6 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை டை வீசினார். முதல் பந்தில் இலங்கை அணி ரன் எடுக்கவில்லை. அடுத்த மூன்று பந்தில் தலா ஒரு ரன்கள் எடுத்தது.
இதனால் கடைசி 2 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் கபுகேதரா 2 ரன்கள் சேர்த்தார். இதனால் கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது.
அவுஸ்ரேலியா வீரர்கள் பேட்ஸ்மேனை சுற்றிவளைக்கும் வகையில் பீல்டிங்கில் ஈடுபட்டனர். ஆனால் கபுகேதரா அந்த பந்தை பவுண்டரிக்கு விரட்ட, இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 37 பந்தில் 52 ரன்கள் சேர்த்த குணரத்னே ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 2-வது போட்டி ஜீலாங்கில் 19-ந்திகதி நடக்கிறது.