அவுஸ்ரேலியாவில் கிறிஸ்துவ அமைப்புகள் மற்றும் தேவாலயங்களில் பாதிரியார்களால் சுமார் 3000 குழந்தைகள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1980 முதல் 2015ம் ஆண்டு வரை அவுஸ்ரேலியா கிறிஸ்தவ அமைப்புக்கள் மற்றும் தேவாலயங்களில் பணிபுரிந்த பாதிரியார்கள், சுமார் 3000 குழந்தைகளிடம் பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக பொதுவிசாரணை அமைப்ப கண்டறிந்ததுள்ளது.
இந்த விசாரணையின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சுமார் 2000 கோடி ரூபாய் இழப்பீடாகப் பெற்றுத்தரப்பட்டுள்ளதாக பொதுவிசாரணை அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேய அதிக அதிகாரம் படைத்த இந்த பொதுவிசாரணை அமைப்பு இதற்கு முன் நடத்திய விசாரணை ஒன்றில் 1950ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை கிறிஸ்தவ மதப் பதவிகளில் இருந்தவர்களில் 7 சதவிகிதம் பேர் பாலியல் குற்றங்களைப் புரிந்ததாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal