அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், சாதகமான தீர்மானங்களை அரசாங்கம் மேற்கொள்ளாது போனால், பாதீட்டுத் திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கக் கூடாதென்கிற கோரிக்கைகள் மேலேழுந்து வருகின்றன. அந்தக் கோரிக்கைகளின் பக்கத்தில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நிற்கிறார்கள். 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், நல்லாட்சி அரசாங்கம், நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றுக்கு, கூட்டமைப்பு ஆதரவளித்து வந்திருக்கின்றது. அதுவும், பாதீட்டுத் திட்டம் போன்ற, மிக முக்கிய நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும் கூட, கூட்டமைப்பு எந்தவித அழுத்தத்தையும் அரசாங்கத்துக்கு வழங்காது, ஆதரவளித்து வந்திருக்கின்றது. இது, ...
Read More »செய்திமுரசு
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான துடுப்பெடுத்தாட்டம்!
அபுதாபி டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பகர் சமான், சர்ப்ராஸ் அகமது ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி 282 ரன்களை எடுத்துள்ளது. பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் பகர் சமான், முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் ஹபீஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பகர் சமான் ...
Read More »வடக்கு அயர்லாந்து எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் மேனுக்கு புக்கர் பரிசு!
மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் வென்றுள்ளார். வடக்கு அயர்லாந்து நாட்டின் தலைநகரம் பெல்பாஸ்ட். இங்கு பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை இவர் வென்றுள்ளார். உலக அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருது “மேன் புக்கர் பரிசு”. இந்த விருது கடந்த 1969-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மேன் புக்கர் விருதை இயன் மெக் ஈவன், ஐரிஸ் முர்டோச், ...
Read More »ஈழப் போராட்டத்திற்கு இந்திய அரசு மட்டுமல்ல எந்த அரசும் உறுதுணையாக இருக்கவி்ல்லை!
ஈழத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசாக இருக்கட்டும் எந்த அரசாக இருக்கட்டும் அவர்கள் உறுதுணையாக இருந்து செயற்பட்டதில்லை. தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் இருந்து குரல்கொடுக்கிறார்களே ஒழிய அதை அவர்கள் அரசியல் போராட்டமாக நினைக்கிறார்கள். ஒரு இனப்போராட்டமாக மொழிப்போராட்டமாக இந்திய அரசு நினைக்கிறதில்லை என்று இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தென்னிந்திய சினிமா இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்தக் காலச்சூழலில் ஈழம் பற்றி படம் எடுத்தால் கூட என்ன ...
Read More »வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளைத் தாக்கிய கங்காரு!
அவுஸ்திரேலியாவில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த சாம்பல் நிற ஆண் கங்காரு ஒன்று அதிகாரிகளைக் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம்(14) இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் வனப்பாதுகாப்பு அதிகாரிகளான ஜிம் மற்றும் லின்டா ஸ்மித் ஆகியோருக்கு கண், காது, முதுகு மற்றும் கைகளில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன. கும்பலாக இருந்த கங்காருகளுக்கு ஸ்மித் உணவு கொடுக்கப்பட்டிருந்த போது ஆண் கங்காரு ஒன்று குழம்பமடைந்து அவரைத் தாக்கியுள்ளது. திடீர் தாக்குதல் காரணமாக நிலைகுலைந்த ஸ்மித் கீழே வீழ்ந்துள்ளார். இதன்போது ...
Read More »யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் யாழ். ஐ.நா அலுவலகத்தில் மகஜர்!
கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை இதன் காரணமாக நேற்று15 10 2018 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப்போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலிருந்து அநுராதபுரம் வரையான நடைப்பயணம் மனிதகுலவரலாற்றின் பரிணாமம் என்பது, காலத்திற்குக்காலம் அதன் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்களை மதிக்கின்ற, அவற்றைப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் பெரும் அக்கறையோடும், அறிவார்ந்தும் ...
Read More »இந்தியாவின் வெளியுறவு கொள்கையும் ஈழப் போரின் ஆரம்பமும் முடிவும்?
ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்திய அரசின் தலையீடு என்பது எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் போராட்டத்தை ஆதரிப்பது போன்று அரவணைத்த இந்தியா. போராட்ட கள இளைஞர் அணிகளை மோதவிட்ட சாணக்கியம் ஈழ விடுதலை போராட்டத்தின் கறை படிந்த அத்தியாயங்கள். இந்திய- இலங்கை ஒப்பந்தம் மூலம் ஈழத்தீவில் “அமைதிப் படை” என்ற போர்வையில் இந்திய ஆக்கிரமிப்புப் படை கால் பதித்து ஈழத்தமிழர்களையும் போராளிகளையும் கொன்றெழித்து தனது கோர முகத்தை உலகிற்கு காட்டியது. தமிழீழ அரசு ஒன்று அமைவதை இந்தியா எப்போதும் ...
Read More »பாகிஸ்தான் இடைத்தேர்தலில் இம்ரான் கட்சிக்கு பின்னடைவு!
பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்கும், மாகாண சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள், ஒரு தொகுதியை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய தொகுதிகளில் ராஜினாமா செய்தனர். அந்த வகையில் 11 நாடாளுமன்றத் தொகுதிகள், பஞ்சாப் மாகாணத்தில் 11 சட்டசபை தொகுதிகள், கைபர் பகதுங்கவா மாகாணத்தில் 9 சட்டசபைதொகுதிகள், சிந்து மற்றும் பலூசிஸ்தான் மாகாணங்களில் தலா இரு சட்டசபை தொகுதிகள் ...
Read More »தகுதி அடிப்படையிலான நபர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடையில்லை!
தகுதி அடிப்படையிலான நபர்கள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தடையில்லை என்று டொனால்டு டிரம்ப் அறிவித்து இருப்பது இந்தியர்களுக்கு ஆறுதலாக உள்ளது. அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் ஐ.டி. துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஏராளமான இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதேபோல பல்வேறு நாட்டினரும் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை பெற்றனர். ஆனால் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு எதிராக இருந்தார். அவர் அதிபராக தேர்தல் களத்தில் நின்றபோதே அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு வேலை வழங்குவதை எதிர்த்து பிரசாரம் செய்தார். நான் ஆட்சிக்கு ...
Read More »11 பேர் கடத்தல் விவகாரம் ! சட்டமா திணைக்களம் பச்சைக் கொடி!
5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி ஒருவரை கைது செய்ய சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளது. இதுவரையிலான விசாரணைகளில் இந்த கடத்தல்கள், காணாமல் அகக்ப்பட்டமை தொடர்பில் குறித்த தளபதி பூரணமாக அறிந்திருந்தார் என்பதற்கான பல சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே சி.ஐ.டி. அவரைக் கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதனிடையே இந்த கடத்தல், காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ...
Read More »