அவுஸ்திரேலியாவில் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த சாம்பல் நிற ஆண் கங்காரு ஒன்று அதிகாரிகளைக் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம்(14) இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் வனப்பாதுகாப்பு அதிகாரிகளான ஜிம் மற்றும் லின்டா ஸ்மித் ஆகியோருக்கு கண், காது, முதுகு மற்றும் கைகளில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கும்பலாக இருந்த கங்காருகளுக்கு ஸ்மித் உணவு கொடுக்கப்பட்டிருந்த போது ஆண் கங்காரு ஒன்று குழம்பமடைந்து அவரைத் தாக்கியுள்ளது.
திடீர் தாக்குதல் காரணமாக நிலைகுலைந்த ஸ்மித் கீழே வீழ்ந்துள்ளார். இதன்போது தனது கணவருக்கு உதவுவதற்கு ஓடிச் சென்ற லிண்டாவையும் அந்த கங்காரு கடுமையாக தாக்கியுள்ளது.
லிண்டாவின் நெஞ்சுப்பகுதி, விலா எலும்பு பகுதி, மற்றும் தலைப்பகுதிகளில் வெட்டுக் காயங்களும் சிராய்ப்பு காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர்களின் மகன் சம்பவத்தை பார்த்து, வீட்டை விட்டு ஓடிச் சென்று ஒரு மட்டையால் கங்காருவை தாக்கியதைத்தொடர்ந்து அவர்களை கங்காரு தாக்குவதை விட்டுள்ளது.
கங்காருவின் இந்த தாக்குதலுக்கு இலக்கான லிண்டா ஸ்மித் தூவொம்பா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal