செய்திமுரசு

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று திங்கட்கிழமை (25) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.   ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று (25) ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அளித்திருந்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறியுள்ளதை வெளிப்படுத்தியும், தமக்கு இன்னமும் நீதி வழங்கப்படாததைக் கண்டித்தும், இலங்கைக்கு இனிமேலும் கால அவகாசம் வழங்க வேண்டாமென தெரிவித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ...

Read More »

வெனிசுலா அதிபர் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன! -அமெரிக்கா

வெனிசுலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசுலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்கிறார். ஆனால் உதவி பொருட்களை கொண்டு வரும் முயற்சியில் ஜூவான் குவைடோ ஈடுபட்டுள்ளார். ஆனால் உணவுப்பொருட்கள் கொண்டு வரும் வாகனங்கள் வெனிசுலாவுக்குள் நுழையாத படி நாட்டின் ...

Read More »

ஐ.நா.விற்கு ஆதராவாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

இலங்கைக்காக செயற்பட வேண்டிய மனித உரிமை ஆணைக்குழு இன்று  அரசியல்மயப்படுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும், மேற்குலக நாடுகளுக்கும் ஆதரவாக செயற்படுவதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி, அரசியலமைப்பு பேரவையின் ஊடாக சுயாதீனமாக செயற்பட வேண்டிய ஆணைக்குழுக்கள் இன்று  அரசியல் கட்சிகளின் பிடிக்குள் அகப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொக்கைன்  போதைப்பொருள் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும்   விசாரணைகளின் உண்மைத் தன்மையானது கேள்விக்குறியாகவுள்ளதாகவும் அவர் இதன்போது ...

Read More »

யுத்தத்தில் குற்றங்கள் இடம்பெறவில்லையாம்!

முப்பது ஆண்டுகால யுத்தத்தை மூன்று ஆண்டுகளில் முழுமையாக முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஒரே நோக்கம் மட்டுமே எமக்கு இருந்தது. இந்த யுத்தத்தில் தவறுகள் இடம்பெறவில்லை. அவ்வாறு தவறுகள் இடம்பெற்றிருப்பின் யுத்தம் முடிவுபெற்றிருக்காது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டவர எமக்கு விமானங்கள் தேவைப்பட்ட காரணத்தினால் தான் “மிக்” உடன்படிக்கையை செய்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார். எலிய அமைப்பின் மாநாட்டில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டார்.

Read More »

இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை தணிக்க உதவுங்கள்!

காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க உதவுமாறு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதியுள்ளது. காஷ்மீரின் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்து இருப்பதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் இந்த பதிலடி எச்சரிக்கை பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது. இந்தியாவின் பதிலடி எவ்வாறு இருக்குமோ? என்ற அச்சமும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் வீட்டுக்கடன்களை வழங்கி பாரிய சிக்கலில் சிக்கிய வங்கி!

அவுஸ்திரேலியாவில் Westpac வங்கிக்கு எதிராக class action எனப்படும் கூட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன்பெறுவதற்கு தகுதியில்லாத வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன்களை வழங்கியது தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் Westpac வங்கி வழங்கிய வீட்டுக்கடன்கள் தொடர்பாகவே இந்த வழக்கு தொடரப்படவுள்ளது. கடனை மீளச்செலுத்தமுடியாத வாடிக்கையளார்களுக்கு வீட்டுக்கடன்களை வழங்கியதன் மூலம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் சுமையை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் வங்கி வரைமுறைகளை மீறியுள்ளதாகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் ...

Read More »

`ராஜ தந்திரன்!’ ஆசிய குயில்களின் அரசியல் தெரியுமா?!

பொதுவாகவே குயில்களுக்கு கூடுகட்டி வாழும் பழக்கம் கிடையாது. இவையும் அப்படியே. இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் சாதுர்யமான ஓர் அரசியலைக் கடைப்பிடிக்கும். உங்கள் வீடுகளைச் சுற்றி மரங்கள் இருக்கின்றனவா? இருந்தால் நீங்கள் அவர்களின் இசையை நிச்சயமாகக் கேட்டிருப்பீர்கள். அந்த இசை உங்கள் காதுகளை ஊடுருவி மூளைக்குள் நுழைந்து அதிகாலையிலேயே அரை மயக்க நிலைக்குக் கொண்டு போவதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். அந்தப் பரவசத்தை இதுவரை உணரத் தவறிவிட்டீர்களா? தொடர்ந்து படித்து அந்த இன்னிசைக்குச் சொந்தக்காரர்களான ஆசிய குயில் குறித்த அறிமுகத்தோடு இனி ரசிக்கத் தொடங்குங்கள். பல பறவைகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல ...

Read More »

`20 மணி நேர தூக்கம்; நடு இரவில் மட்டுமே உணவு!’

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ளது ரிவர்சைடு என்ற நகரம். இங்கு டேவிட் ஆலென் டுர்பின் (57) லூயிஸ் அன்னா டுர்பின் (50) என்ற தம்பதி வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு 13 குழந்தைகள். கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன் வரை தன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள், நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றை டேவிட் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வருவார். அந்தக் குடும்பத்தில் இருப்பவர்கள் அருகில் இருக்கும் யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த வருடம் அவர்களின் 13 குழந்தைகளில் ஒரு பெண் வீட்டை ...

Read More »

மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள்!

இந்தியாவிலேயே மிக அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் கைதியான என்னை விடுதலை செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு ராஜீவ் கொலை குற்றவாளி நளினி கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். நளினி வேலூரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக கவர்னர் முடிவு செய்யலாம் என்று  உச்ச நீதிமன்றம்  கூறியுள்ளது. ...

Read More »

நான் அதிபராகாமல் இருந்திருந்தால், வடகொரியாவுடன் போர் வந்திருக்கும்!

தென்கொரியாவில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் -வடகொரிய அதிபர் கிம் ஜாங் இடையேயான 2-வது சந்திப்பு வரும் 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் வியட்னாமின் ஹனோய் நகரில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப், தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்திருந்தால், வடகொரியாவுடன் போரில் ஈடுபட்டு இருப்பார்கள் என்றார். ...

Read More »