அவுஸ்ரேலியாவில், குழந்தைகளுக்கான கட்டாயத் திருமணங்கள் மீண்டும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவில், கட்டாய மற்றும் குழந்தைத் திருமணங்கள் ஒரு குற்றச் செயலாக 2013இல் சட்டமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை 175 கட்டாயத் திருமணங்கள் பற்றி புகார் செய்யப்பட்டிருந்தன. 2014-15ம் ஆண்டுகளில் 33ம், 2016/17இல் 61 கட்டாயத் திருமணங்கள் தொடர்பாக பொலிசாரிடம் புகார் செய்யப்பட்டுள்ளன. அதிகமான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்ற முயல்வதனால் இக் குற்றச் செயலை முற்றாக நிறுத்துவது கடினமாக இருப்பதாக AFP பேச்சாளர் Dan Evans தெரிவித்துள்ளார்.
Read More »செய்திமுரசு
அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் 13 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!
அவுஸ்ரேலியாவில் இருந்து 13 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் விசேட விமானம் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பண்டாரநாயக்காக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இவர்களிடம் விசாரணைகள் இடம்பெறுவதாக விமான நிலைய பொலிசார் தெரிவித்தனர். குறித்த 13 பேரும் கடந்த 2012 ஆம் ஆண்டு விமான மூலம் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்தும் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளனர்
Read More »தீவிரவிசாரணை காரணமாக மன உளைச்சல்! – சிட்னி விமான தாக்குதல்!
சிட்னியில் பயணிகள் விமானங்கள் மீது தாக்குதலை மேற்கொள்ள முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் ஓருவரை காவல்துறையினர் விடுதலை செய்துள்ள அதேவேளை குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகள் குறித்து அந்த நபர் அதிர்ச்சியடைந்துள்ளார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் அப்துல் மெர்கி என்ற 50 வயது நபரை காவல்துறையினர் செவ்வாய்கிழமை இரவு விடுதலை செய்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன எனவும் உரிய தருணத்தில் தகவல்களை வழங்குவவோம் என காவல்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது. இதேவேளை தனது கட்சிக்காரர் தீவிரவிசாரணையை எதிர்கொண்டுள்ளார் எனவும் ...
Read More »அவுஸ்ரேலியாவில் பாலியல் வன்முறைகள் அதிகரிப்பு!
அவுஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் பாலியல் வன்முறைகள் பரவலாக இடம்பெற்று வருவதாக Universities Australia அமைப்பை ஆதாரம் காட்டி The Human Rights Commission அறிக்கை வெளியிட்டுள்ளது. 39 பல்கலைக் கழகங்களில் பயிலும் சுமார் 30,000 ற்கும் மேற்பட்ட மாணவ மாணவியரிடம் நடத்தப்பட்ட ஆய்விலேயே குறித்த பாலியல் வன்முறை குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. 2016ம் ஆண்டில் 26 வீதமானவர்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும், 1.6 வீதத்தினர் பாலியல் ரீதியாகத் தாக்கப்பட்டதாகவும் மேலும் தெரியவந்துள்ளது.
Read More »ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிர் இழக்கும் அபாயம்
ஏமன் நாட்டில் 2 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாக சேவ் த சில்ரன் சமூக அமைப்பு தெரிவித்து உள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அங்கு அரசு கட்டுப்பாட்டில் சில பகுதிகளும், புரட்சி படையினர் கட்டுப்பாட்டில் சில பகுதிகளும் இருக்கின்றன. இரு தரப்பினரும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு போதிய உணவு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கவில்லை. எனவே, ...
Read More »அவுஸ்திரேலிய விமானங்கள் மீது தாக்குதல் திட்டம்: ஒருவர் விடுவிப்பு
அவுஸ்திரேலிய விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமானங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்கள் என்ற சந்தேகத்தில் சிலர் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து பாதுகாப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இச்சம்பம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 50 வயதுடைய நபர் ஒருவர் எவ்வித குற்றச்சாட்டுகளும் பதியப்படாமல் விடுக்கப்பட்டுள்ளதாக AFP இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. மேலும் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு விடயங்களில் மேலதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் விமான நிலையங்களில் பணி புரிவோர் தொடர்பிலும் மேலதிக பாதுகாப்பு ...
Read More »அவுஸ்திரேலிய, நியூசிலாந்து , இலங்கை அணிகள் இந்தியாவில் களைகட்டும் கிரிக்கெட்
இந்திய கிரிக்கெட் அணி தற்போது, இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தத் தொடர் முடிந்த பிறகு, அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இந்தியாவில் விளையாட உள்ளன. இந்தியாவில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பண்டிகைக் காலம்தான். இந்தக் காலகட்டதில், இந்தியாவில் கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது வழக்கம். தற்போது, தொடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதலில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கும் நடுவில் டெஸ்ட் போட்டிகள் இல்லை. இந்த சுற்றுப்பயணம், செப்டம்பர் ...
Read More »சுமந்திரன் மீதான கொலை வழக்கு! சிறிலங்காவின் புலனாய்வு அதிகாரிகள் அவுஸ்ரேலியா விரைவு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியை நாடுகடத்த சிறிலங்காவில் இருந்து புலனாய்வு அதிகாரிகள் மூவர் அடங்கிய குழுவினர் அவுஸ்ரேலியாவிற்கு பயணமாகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய இரு தடவைகள் முயன்றதோடு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குழுவுடன் தொடர்புகளைப் பேனியத்துடன் உயிராபத்தை ஏற்படுத்தும் வெடிபொருட்களையும் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கிளிநொச்சி நீதிமன்றில் கடந்த ஜனவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முக்கிய சூத்திரதாரி எனக் கருதப்படுபவர் அவுஸ்திரேலியாவில் வாழ்வதாக கண்டறியப்பட்டு ...
Read More »அவுஸ்ரேலியாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் சமகால அரசியல் கலந்துரையாடல்!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலும் சிட்னியிலும் சமகால அரசியல் கலந்துரையாடல் நிகழ்வில் பங்குகொள்ளவுள்ளார். தற்போதைய சமகால அரசியல் தொடர்பிலும் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கலந்துரையாடலை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Read More »அவுஸ்ரேலியா – மனஸ் தீவில் இடம்பெற்ற வேறுவேறு வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயம்
மனஸ் தீவில் இடம்பெற்ற வன்முறைசம்பவங்களில் மூன்று அகதிகள் காயமடைந்துள்ளனர். வார இறுதியில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்திரேலியாவினால் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளே இவ்வாறு தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளனர். மனஸ்தீவின் நகரப்பகுதியில் சூடானை சேர்ந்த அகதி தங்கியிருந்த பகுதிக்குள் நுழைந்த நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த அகதியின் காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது ஈரானிய அகதியின் கையை நபர் ஒருவர் வெட்டி காயப்படுத்தியுள்ளார். ஈரானிய அகதிக்கு ஏற்பட்டள்ள மோசமான காயங்களை காண்பிக்கும் ...
Read More »