செய்திமுரசு

முப்படையினருடன் 10, 247 மேலதிக சிவில் பாதுகாப்பு படையினர் இணைப்பு!

தேசிய பாதுகாப்பிற்காக முப்படையினர் மற்றும் பொலிஸ் பிரிவினர் முன்னெடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக 10,247 சிவில் பாதுகாப்பு பிரிவினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கத்தோலிக்க தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், அரச  திணைக்களங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. 23 பாதுகாப்பு பிரிவில் 10,247 பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு  உள்ளிட்ட  நாட்டின்  ஏனைய  பகுதிகளிலும் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம், மஹா ஓயா,வெலி ஓயா, கெபிதிகொல்லாவ, மெதிரிகிரிய, மொனராகல, கொமரன்கடவல,புத்தளம் மற்றும் ...

Read More »

மேலும் நான்கு இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளுக்குத் தடை?

அர­சாங்கம் அடுத்­த­வாரம் மேலும் நான்கு இஸ்­லா­மிய அமைப்­பு­க­ளுக்குத் தடை விதிக்­க­வுள்­ள­தாக, மூத்த அர­சாங்க அதி­காரி ஒருவர் தகவல் வெளி­யிட்­டுள்ளார். அவ­ச­ர­காலச் சட்ட விதி­மு­றை­களின் கீழ், மேலும் 4 இஸ்­லா­மிய அமைப்­பு­களைத் தடை செய்யும் அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டை­யவை எனக் கண்­ட­றி­யப்­பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஜமி­யத்து மில்­லாது இப்­ராகிம் ஆகிய அமைப்­புகள் கடந்த வாரம் அர­சாங்­கத்­தினால் அவ­ச­ர­காலச் சட்ட விதி­களின் கீழ் தடை செய்­யப்­பட்­டன. இந்த அமைப்­புகள் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளாக பிர­க­டனம் செய்­யப்­பட்­டுள்­ளன. இந்த அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­களை ...

Read More »

ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் – முகநூலும் இலங்கைத்தீவும் -நிலாந்தன்

சமூக வலைத்தளங்களை ‘பலவீனமானவர்களின் ஆயுதம்’  என்று மானுடவியலாளர் ஜேம்ஸ் ஸ்கொட்(James Scott )   கூறியிருக்கிறார். 1985இல் மலேசிய கிராமங்களில் ஏற்பட்ட விவசாயிகளின் பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலில் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார் இந்து மகா சமுத்திரத்தில் தமிழ் நாட்டை வர்தா புயல் தாக்கிய போதும் இலங்கையை கஜா புயல் தாக்கிய போதும் முகநூலும் ஏனைய சமூக வலைத் தளங்களும்; கைபேசிச் செயலிகளும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கின. தேவைகளையும் உதவிகளையும் இணைப்பதில் பாரம்பரிய தொடர்பு சாதனங்களை விடவும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொடர்பு சாதனங்களை விடவும் ...

Read More »

ரஷ்யாவில் விமானம் தீப்பற்றி எரிந்து விபத்து – 41 பேர் பலி!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி அதில் பயணம் செய்த 41 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து முர்மன்ஸ்க் கிளம்பிய சுகோய் சூப்பர்ஜெட் 100 விமானம் அவசரமாக தரையிறங்கும் போது ஏற்பட்ட தீவிபத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 41 பேர் பலியாகினர். இந்திய நேரப்படி காலை 3 மணியளவில் கிளம்பிய சூப்பர்ஜெட் விமானத்தில் 78 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்கள் இடம்பெற்றிருந்தனர். மாஸ்கோவின் ஷெர்மெட்யெவோ விமான ...

Read More »

மதூஷிடம் 4 ஆம் மாடியில் விசா­ரணை ஆரம்பம் !

தனது மகனின் பிறந்த நாள் களி­யாட்ட  நிகழ்வின் போது ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் அபு­தாபி 6 நட்­சத்­திர ஹோட்­டலில் வைத்து  கைது செய்­யப்­பட்டு டுபாயில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பிர­பல பாதாள உலகத் தலை­வனும் சர்­வ­தேச  போதைப்­பொருள் கடத்தல் மன்­ன­னு­மான  மாக்கந்­துரே மதூஷ் என அழைக்­கப்­படும் சம­ர­சிங்க ஆராச்­சி­லாகே மதூஷ் லக்‌­ஷித டுபா­யி­லி­ருந்து நேற்று நாடு கடத்­தப்­பட்­டுள்ளார்.   நேற்று  அதி­காலை 5 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டைந்த யூ.எல்.226 எனும் விமா­னத்தில் மாக்­கந்­துரே மதூஷ் நாடு­க­டத்­தப்­பட்­டி­ருந்தார். விமான நிலை­யத்தில்   குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வினர் அவரைப் ...

Read More »

இந்திய சுற்றுலாவாசியை வெளியேற்றிய ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற 45 வயது இந்தியர் ஒருவரின் செல்போனில் வெறுக்கத்தக்க காணொலி இருந்ததால், அவரை ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அதிகாரிகள் மறுத்துள்ளனர். கடந்த மே 2ம் திகதி மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவின் பெர்த் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த அவரிடம் பரிசோதனை நடத்திய போது இக்காணொலி கண்டெடுக்கப்பட்டதாக இன்று (மே 05) ஆஸ்திரேலிய எல்லைப்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனையை தொடர்ந்து அவரின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவரின் சுற்றுலா விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மே 2ம் திகதி முதல் பெர்த் குடிவரவு ...

Read More »

தற்கொலை தாக்குதலின் போது உயிரிழந்த டென்மார்க் கோடீஸ்வரரின் 3 பிள்ளைகளது இறுதி கிரியைகள்!

கொழும்பு – ஷங்கிரி-லா ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் போது உயிரிழந்த, டென்மார்க்கைச் சேர்ந்த அன்டர்ஸ் பொவ்ல்சன் எனும் கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகளதும் இறுதிக் கிரியைகள், நேற்று முன்தினம் சனிக்கிழமை (04), டென்மார்க்கின் ஆருஷ் (Aarhus) மாகாணத்தில் இடம்பெற்றது. குறித்த குண்டுத் தாக்குதலின் போது, மேற்படி கோடீஸ்வரரின் மூத்த இரு பெண் பிள்ளைகளும் நான்காவது மகனுமே உயிரிழந்தனர். சம்பவத்தில், கோடீஸ்வரரும் அவரது மனைவியும், மூன்றாவது மகளும் உயிர்த் தப்பினர். குண்டுத் தாக்குதலில் உயிரிந்த கோடீஸ்வரரது இரு பெண் பிள்ளைகளதும் உடல்கள், அடையாளம் காணப்படும் ...

Read More »

இறுதி நேரத்திலேயே சஹரான் தற்கொலைதாரியாக மாறினார்!

தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே சஹரான் நேரடியாக தற்கொலை தாக்குதலை மேற்கொண்டதாக முக்கிய சந்தேகநபரான மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா வாக்குமூலம் வழங்கியுள்ளார். பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் காவல் துறையினர் தேடப்பட்டுவந்த சந்தேகநபர்களில் இருவர் நாவலப்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா மற்றும் மொஹமட் இப்ராஹிம் சாஹித் அப்துல்லா  ஆகிய இருவருமே இவ்வாறு கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்நிலையிலே ...

Read More »

மூளைச் சலவை செய்த சஹ்ரான்!

உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்​ரான் ஹஸீம், தான் திட்டமிட்டிருந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான 6 இளைஞர்களை, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே, பகிரங்கமாகத் தேடிக் கண்டுபிடித்துள்ளாரென, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இந்த ஆறு இளைஞர்களையும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகும் மனநிலைக்குக் கொண்டுவருவதற்கான மூளைச் சலவையை, தொடர்ந்து பல மாதங்களாக, தனிப்பட்ட “ஷெட்ரூம்” ஊடாக மேற்கொண்டுள்ளார் என்று, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஆர்.அப்துல் ராசிக், இலங்கை ...

Read More »

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பினரை கண்காணிக்குமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவு!

மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தினரின் செயல்பாடுகளை கண்காணிக்குமாறு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் சர்வதேச பயங்கரவாதியாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கவும், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடையும் விதித்து பாகிஸ்தான் அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதுதவிர, ஏற்கனவே லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா உள்ளிட்ட சில பயங்கரவாத ...

Read More »