செய்திமுரசு

இன்று யாழ்.பொலிஸ் நிலைய கட்டட திறப்பு விழா

இன்று (9) ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் யாழ்.பொலிஸ் நிலைய புதிய கட்டிடம் திறந்து வைக்கப்படவுள்ளது. இதில், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவும் கலந்துகொள்ளவுள்ளார். இந்நிகழ்வில், பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

அன்புதான் என்னிடமுள்ள ஒரே செய்தி!- இரோம் ஷர்மிளா

உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டாலும்கூட, இரோம் ஷர்மிளா தலைமுடியை இன்னும் பின்னிப்போட வில்லை. நகங்களை வெட்டிக்கொள்ளவில்லை. ஒப்பனையற்ற முகம். வாஞ்சையான பார்வை. இடையிடையே அவருடைய நினைவு பரபரவென்று எங்கோ செல்வதையும் சடாரென்று மோதி பழைய இடம் நோக்கித் திரும்புவதையும் அவருடைய பார்வைகளின் போக்கினூடே யூகிக்க முடிகிறது. ஆங்கிலத்தில் உரையாடுகையில், நிதானமாக யோசித்து யோசித்துப் பேசுபவராகவும், மணிப்பூரியில் பேசுகையில் கடகடவென்று கொட்டுபவராகவும் தெரிந்தார். சிரிக்கும்போது சத்தமாக வாய்விட்டுச் சிரிக்கிறார். இக்கட்டான விஷயங்களைப் பேசுகையில், மௌனத்தில் ஆழ்ந்துவிடுகிறார். மூழ்கடிக்க முயலும் விரக்தி, ஏமாற்றம், வலி, எதிர்காலம் குறித்த ...

Read More »

பறப்பின் போது சாம்சங் போன்களுக்கு அவஸ்ரேலிய இரு விமான நிறுவனங்கள் தடை

விமானத்தில் பயணம் செய்யும் போது சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று அவுஸ்ரேலியாவை சேர்ந்த இரு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. அவுஸ்ரேலியாவில் செயல்பட்டு வரும், குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் அவுஸ்ரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை ஆன் செய்வது மற்றும் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகளுக்கு வலியுறுத்தியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங்சின் புதுரக போன் வெடிக்கும் அபாயம் ...

Read More »

இலங்கை மாணவியின் கல்விக்கு உதவிய அவுஸ்திரேலிய சக மாணவிகள்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை மாணவிக்கு ஏனைய மாணவர்கள் இணைந்து கல்விக்காக நிதிசேர்த்துக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமுதினி சுலோச்சனா என்ற இந்த மாணவி பொருளாதாரத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவருகிறார். இதற்காக அவருக்கு 20ஆயிரம் டொலர்களை தேவை. எனினும் அதனை சுலோச்சனாவினால் வழங்க முடியாமையால் அவரின் வீசாவை முடிவுறுத்தும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவரின் நண்பி ஒருவர் மேற்கொண்ட பிரசாரத்தின் பேரில் குறித்த மாணவியுடன் பயிலும் மாணவர்கள், இணைந்து 18,500 டொலர்களை சேர்த்தக்கொடுத்துள்ளனர் என்று செய்திசேவை ஒன்று தெரிவித்துள்ளது.

Read More »

அவுஸ்திரேலியாவில் 20 வருடங்களாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர் கைது

அவுஸ்திரேலியாவில் 20 வருடங்களாக பாலியல் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு வந்த 63 வயது நபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் வயதான நபர் ஒருவர் தனது உறவினர் குழந்தைகள் 10 பேரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இதனையடுத்து அவரை கைது செய்த அவுஸ்திரேலிய பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது அண்ணன், தம்பியின் மகன் மற்றும் மகள்களை தொடர்ந்து 20 வருடங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார் என்பது தெரியவந்தது. ஒரு ...

Read More »

அகதிகளே அடைக்கலம் கொடுத்தனர்

அமெரிக்காவின் பாரிய அளவான புலனாய்வுத் தகவல்களை வழங்கிய விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள ஈழ அகதிகள் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தார். இந்த நிலையில் 2013-ம் ஆண்டு அவர், ஹொங்கொங்கில் ஈழ அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடைக்கலம் கொடுத்த நான்கு ஈழ அகதிகளை, அமெரிக்காவின் ஊடகங்கள் செவ்வி கண்டு செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த அகதிகளின் பாதுகாப்பில் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் சிறைத்தண்டனை பெற்றுள்ள பெண் மருத்துவர் விடுதலையை விரும்பவில்லை

அவுஸ்திரேலியாவில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள இலங்கை பெண் மருத்துவர் ஒருவர் குறுகிய கால விடுதலைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தனது கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனை பெற்றுள்ள இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பெண் மருத்துவர் ஒருவர், நன்னடத்தையின் அடிப்படையில் குறுகியகால விடுமுறையில் வீடு செல்ல வாய்ப்பு இருக்கின்ற போதும் அதனை அவர் நிராகரித்துள்ளார். குறுகிய கால விடுப்பில் தாம் சிறையில் இருந்து வெளியேறினால், நாடு கடத்தும் வகையில் குடிவரவு முகாமில் அடைத்துவிடுவார்கள் என்ற பயம் காரணமாகவே அவர், இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளார். கணவரின் ...

Read More »

பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார்.  இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது, பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். ...

Read More »

சிட்னியில் இறந்த பெற்றோருக்கு அருகில் உறங்கிய 3 வயது சிறுமி

சிட்னி, Smithfield இல் உள்ள வீடொன்றில்,உயிரிழந்த தந்தைக்கும் தாய்க்கும் அருகில் 3 வயதுச் சிறுமி உறங்கிக் கொண்டிருந்த சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பங்களாதேஷ் பின்னணி கொண்ட டஸ்மின் பஹார் என்ற பெண்ணும் தேவ் பிள்ளை என்பவரும் கடந்த ஆறு வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், டஸ்மின் பஹார் தனது 3 வயது மகளுடன் சமீபத்தில் தனியாகச் சென்று வேறு வீட்டில் குடியேறினார். குடும்ப வன்முறையே தனது பிரிவுக்குக் காரணம் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினத்தை ...

Read More »

அவுஸ்ரேலியாவில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த உடந்தையான தாய்

அவுஸ்ரேலியாவில் 9 வயது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு வற்புறுத்திய தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்ரேலியாவின் Gold Coast பகுதியை சேர்ந்த தாய்(37) ஒருவருக்கு 9 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் உள்ளார். இச்சிறுமி கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். தற்போது சிறுமி உளவியலாளரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். சிகிச்சைக்கு சென்ற அச்சிறுமியிடம் மருத்துவர் விசாரித்த போது சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன சிறுமி கூறியதாவது, தான் பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், இதற்கு தன் ...

Read More »