விமானத்தில் பயணம் செய்யும் போது சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று அவுஸ்ரேலியாவை சேர்ந்த இரு விமான நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
அவுஸ்ரேலியாவில் செயல்பட்டு வரும், குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் அவுஸ்ரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும் போது சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை ஆன் செய்வது மற்றும் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங்சின் புதுரக போன் வெடிக்கும் அபாயம் உள்ளதாக வந்த தகவலையடுத்து உலகளவில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் போன்களை அந்நிறுவனம் திரும்பப்பெற்றது. விற்பனையையும் நிறுத்தியது.
அவுஸ்ரேலியாவில் சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களும் திரும்பப்பெறப்பட்டன. இதைத்தொடர்ந்து, விமானத்தில் அந்த குறிப்பிட்ட ரக போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Eelamurasu Australia Online News Portal