அமெரிக்காவின் பாரிய அளவான புலனாய்வுத் தகவல்களை வழங்கிய விசில்ப்ளோவர் எனப்படும் தகவல் கூறுனர், எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள ஈழ அகதிகள் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டுவந்தார்.
இந்த நிலையில் 2013-ம் ஆண்டு அவர், ஹொங்கொங்கில் ஈழ அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு அடைக்கலம் கொடுத்த நான்கு ஈழ அகதிகளை, அமெரிக்காவின் ஊடகங்கள் செவ்வி கண்டு செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த அகதிகளின் பாதுகாப்பில் இருந்த ஸ்னோவ்டன், பின்னர் அங்கிருந்து வேறொரு நாட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தமது அனுபவத்தை பகிர்ந்துள்ள ஸ்னோவ்டன், தாம் எதிர்நோக்கியுள்ள அபாயங்களை விடவும், ஈழ அகதிகள் அதிக அபாயங்களை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.