இரு தரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை விடயத்தில் இந்தியா திமிர் பிடித்தது போன்று பதில் அளித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா – பாகிஸ்தானுக்கிடையே உள்ள பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராகவுள்ளதாக பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் இந்தியப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனையடுத்து. அதனையடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்தித்து பேச இணக்கம் தெரிவித்தனர். இந்நிலையில் காஷ்மீரில் மூன்று பொலிஸாரை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச ...
Read More »செய்திமுரசு
மாகந்துரே மதுஷின் உதவியுடன் என்னைக் கொலை செய்ய திட்டம்! – கோத்தபாய
பாதாள உலக குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது, பல்வேறு நம்பகமான வழிகளினூடாக சரிபார்த்துக் கொண்டதில், இத் தகவல் உண்மையானது என்று தெரிய வந்துள்ளது. அதற்குப் பின்னர், எனக்கு முழுமையான எண்ணிக்கை கொண்ட பாதுகாப்பு அணியை மீளப்பெறுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பேசினேன். எனது பாதுகாப்பு அணி பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டதாகக் ...
Read More »யாழில் அடையாள உண்ணாவிரத போராட்டம்!
யாழில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து மூன்றம் கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று , அரசியல் கைதிகளை விடுதலை செய் , பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு ஆகிய மூன்று கோரிக்கைகளை முன் வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுப்பட்டுள்ளது.
Read More »அகதிகளை நாடுகடத்துவதற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் உதவக்கூடாது- மாயா
இலங்கை அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை பலவந்தமாக நாடு கடத்தும் அவுஸ்திரேலியா அரசாங்கத்தின் நடவடிக்கைளிற்கு அவுஸ்திரேலியன் எயர்லைன்ஸ் விமானசேவை உதவக்கூடாது என எம் ஐ ஏ அழைக்கப்படும் ரப் இசைப்பாடகி மாதங்கி( மாயா ) அருள்பிரகாசம் வேண்டுகோள் விடுத்துள்ளார் கடந்த சில வாரங்களில் 12 இலங்கையர்களையும் ஒரு ஈராக்கிய பிரஜையையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு கடத்தியுள்ள நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் இது குறித்து கார்டியனிற்கு தெரிவித்துள்ளதாவது அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் நடத்தப்படும் விதம் குறித்த செய்திகள் பயங்கரமானவையாக ...
Read More »மெக்சிகோவில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!
மெக்சிகோவில் மரியோ கோமஸ் என்ற பத்திரிகையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ நாடு பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாக விளங்குகிறது. 2017-ம் ஆண்டு அங்கு 11 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். 2016-ம் ஆண்டும் 11 பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் இல்லை. இந்த நிலையில் அங்கு சியாபஸ் மாகாணத்தின் யாஜலான் நகரில் மரியோ கோமஸ் என்ற பத்திரிகையாளர் நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 நபர்கள் அவரை ...
Read More »எனது அரசியலை இந்தியாவோ வேறு நாடோ தீர்மானிக்க முடியாது!-மஹிந்த ராஜபக் ஷ
எனது அரசியலை இந்தியாவோ வேறு நாடோ தீர்மானிக்க முடியாது – மஹிந்த ராஜபக் ஷ கூறுகிறார் நான் சர்வாதிகாரி தான் – வடக்கில் தேர்தலை நடத்தினேன் பொருளாதாரத்தை பாதுகாப்பதில் அரசாங்கம் தோல்வி தேர்தலில் மாற்று அரசை உருவாக்கப் போராட்டம் சர்வதேச நாடுகளுடன் இணைந்து சதித்திட்டம் தீட்டுவதில் தற்போதைய அரசாங்கம் சிறந்த அனுபவசாலியாக விளங்குகின்றது. வேறு எந்தவொரு உலக நாடோ எம்மை வழிநடத்த முடியாது. எனவே எனது அரசியல் நடவடிக்கைகளை இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்தவொரு நாட்டிற்கோ தீர்மானிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ...
Read More »சம்பந்தனுடன் எனக்கென்ன பிணக்கு? சி.வி.விக்கினேஸ்வரன்
அதிரடியாக அறிவித்தார் சி.வி. சம்பந்தனுடன் எனக்கென்ன பிணக்கு? கூட்டமைப்பபை பதிவு செய்ய வேண்டும் இந்தியாவுடன் நல்லுறவு உள்ளது முதலமைச்சர் பதவி முடிவுக்கு வந்ததும் தமிழ் மக்கள் பேரவையின் நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்துவேன். கட்சிகளிலும் பார்க்க மக்களை ஒன்றிணைத்து எமது மக்களின் தேவைகளை உலகிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்தவற்றை செய்வேன் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். தற்போதைய தலைமைகள் போய் கூட்டமைப்பு பதிவு பெற்று மாற்றுத்தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு சாத்தியம் உள்ளது என்று குறிப்பிட்டவர் வடமாகாண ...
Read More »நினைவு கூர்தலுக்கான ஒரு பொது உடன்படிக்கை!
திலீபனின் நினைவிடத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் அதன்பின் யாழ்.மாநகரசபை வெளியிட்ட அறிக்கையும் இக்கட்டுரையை எழுதத்தூண்டின. நினைவிடம் அமைந்திருப்பது மாநகர சபை எல்லை என்பதால் அந்த இடத்திற்கும் நிகழ்வுக்கும் மாநகரசபை உரிமைகோருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலின் போது மாகாணசபையும் அப்படி உரிமைகோரியது. முள்ளிவாய்க்கால் நிலத்துண்டு பிரதேசசபை எல்லைக்குள் அமைந்திருப்பதால் பிரதேசசபை அதை அனுஷ்டிக்கும் என்றும்பிரதேச சபை நிர்வாகம் மாகாணசபையின் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் வருவதால் நினைவு கூர்தலை மாகாணசபை நடத்தும் என்று ஒருவிளக்கம் தரப்பட்டது. அதுபோலவே கிளிநொச்சியில் மாவீரர் துயிலுமில்லத்தை கரைச்சி பிரதேசசபை பொறுப்பெடுக்க முற்பட்டது சர்ச்சையை ...
Read More »அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்களை வென்ற அதிர்ஷ்டசாலி யார்?
அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்களை வென்ற அதிஷ்டசாலியை Powerball நிறுவனம் தேடுகிறது. டஸ்மேனியாவில் உள்ள ஒருவருக்கே குறித்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அவரது தொடர்பு விவரத்தை சரியாக பதிவு செய்யாத காரணத்தினால் அவரை தங்களால் தொடர்புகொண்டு வெற்றிச்செய்தியை அறிவிக்கமுடியாது இருப்பதாக Powerball நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று இரவு இடம்பெற்ற சீட்டிழுப்பில் ஒருவர் மாத்திரமே முழுத் தொகையையும் வெற்றிகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற Oz Lotto jackpot சீட்டிழுப்பில் 30 மில்லியன் டொலர்களை வென்ற நியூ சவுத் வேல்ஸ் நபர் இதுவரை ...
Read More »உணவு விசமடைந்ததால் 100 பேர் வைத்தியசாலையில்
மினுவாங்கொடை பகுதியில் உட்கொண்ட உணவு விசமானதால் 100 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பகுதியில் இயங்கிவரும் ஆடை தொழிற்சாலை ஒன்றிலேயே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Read More »