அவுஸ்திரேலியாவில் 30 மில்லியன் டொலர்களை வென்ற அதிஷ்டசாலியை Powerball நிறுவனம் தேடுகிறது. டஸ்மேனியாவில் உள்ள ஒருவருக்கே குறித்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
அவரது தொடர்பு விவரத்தை சரியாக பதிவு செய்யாத காரணத்தினால் அவரை தங்களால் தொடர்புகொண்டு வெற்றிச்செய்தியை அறிவிக்கமுடியாது இருப்பதாக Powerball நிறுவனம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு இடம்பெற்ற சீட்டிழுப்பில் ஒருவர் மாத்திரமே முழுத் தொகையையும் வெற்றிகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற Oz Lotto jackpot சீட்டிழுப்பில் 30 மில்லியன் டொலர்களை வென்ற நியூ சவுத் வேல்ஸ் நபர் இதுவரை தனது பரிசுப் பணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.